திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கேரளா ரிசல்ட்.. எந்த கட்சிக்கு எவ்வளவு ஓட்டு? யாருக்கு இருந்த ஓட்டும் போயே போச்சு? முழு ரவுண்ட்-அப்

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரள உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் பல சர்ப்ரைஸ் டேட்டாக்களை நமக்கு அள்ளித் தந்துள்ளன. அனைத்து வார்டுகளிலும் தற்போது ரிசல்ட் வந்து நிறைவடைந்துவிட்டதால், இப்போது வந்துள்ள ஓட்டு சதவீதத்தையும், முந்தைய ஓட்டு சதவீதத்தையும் ஒப்பிட்டு பார்க்க நல்ல தருணம் இதுதான்.

கேரளாவில் எந்த கட்சி ஆதிக்கம் செலுத்துகிறது என்பதை புடம் போட்டு காட்டுகிறது இந்த புள்ளி விவரங்கள்.

கேரளத்தில் ஆளும் இடதுசாரிகள் கூட்டணி அதிக இடங்களை வென்றுள்ளது. அதன் ஓட்டு சதவீதம் 41.55 % என்ற அளவுக்கு வந்துள்ளது. கடந்த 2015ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலை விட இது பெரிய முன்னேற்றம்தான்.

கண் பார்வையை பறிக்கும்.. உயிருக்கும் உலை வைக்கிறது.. குஜராத், மும்பையில் தீவிரமாக பரவும் பூஞ்சை நோய்கண் பார்வையை பறிக்கும்.. உயிருக்கும் உலை வைக்கிறது.. குஜராத், மும்பையில் தீவிரமாக பரவும் பூஞ்சை நோய்

பாதிக்கு பாதி வாக்குகள்

பாதிக்கு பாதி வாக்குகள்

கடந்த முறை, 37.4 % வாக்குகளை பெற்றிருந்தது இடதுசாரிகள். இப்போது கிட்டத்தட்ட மாநிலத்தின் பாதி சதவீதம் அளவுக்கு வாக்குகளை இடதுசாரிகள் பெற்றுள்ளது கவனிக்கத்தக்கது. வரும் சட்டசபை தேர்தலுக்கு இது பெரிய பூஸ்ட்டாக பார்க்கப்படுகிறது.

இழப்பு யாருக்கு?

இழப்பு யாருக்கு?

அப்படியானால் இழப்பு யாருக்கு? காங்கிரஸ் கூட்டணிக்கா? அப்படியும் சொல்லிவிட முடியாது. ஏனெனில் 37.14 % வாக்குகளை பெற்றுள்ளது காங். கூட்டணி. 2015 உள்ளாட்சி தேர்தலில், 37.2 % ஓட்டுக்களை வாங்கியுள்ளது அந்த கூட்டணி. மிக மிக சொற்ப அளவில்தான் வாக்குகள் குறைந்துள்ளன.

அதிக ஓட்டுக்கள்

அதிக ஓட்டுக்கள்

பாஜக கூட்டணிக்கும் இழப்பு இல்லை. கொஞ்சம் ஏற்றம்தான். கடந்த முறை 13.3 % வாக்குகளை பெற்ற பாஜக கூட்டணி, இந்த முறை, 14.52 % ஓட்டுக்களை பெற்றுள்ளது முன்னேற்றம்தான். ஆக மொத்தம், இடதுசாரிகளும், பாஜக கூட்டணியும் முன்பைவிட அதிக ஓட்டுக்களை இந்த உள்ளாட்சி தேர்தலில் பெற்றுள்ளனர்.

சட்டசபை தேர்தல்

சட்டசபை தேர்தல்

2016ம் ஆண்டு கேரளாவுக்கு சட்டசபை தேர்தல் நடைபெற்றபோது, இடதுசாரிகள் 43.48%, காங்கிரஸ் கூட்டணி, 37.2 %, பாஜக கூட்டணி 14.96% வாக்குகளை பெற்றனர். இந்த அடிப்படையில் பார்த்தால், சட்டசபை தேர்தலை விட உள்ளாட்சி தேர்தலில் அனைத்துக் கட்சிகளுக்கும் வாக்குகள் குறைந்துள்ளன.

இடதுசாரிகளுக்கு ஆதரவு

இடதுசாரிகளுக்கு ஆதரவு

2019ம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலின்போது கேரளாவில் இடதுசாரிகள் 36.29 % ஓட்டுக்களை வாங்கினார்கள். காங்கிரஸ் கூட்டணி அமோகமாக முன்னேறி, 47.48 % வாக்குகளை பெற்றது. ராகுல் காந்திக்கு இருந்த அபரிமிதமான ஆதரவு இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி, 15.64% வாக்குகளை பெற்றது. ஆக மொத்தம், லோக்சபா தேர்தல் மற்றும் கடந்த உள்ளாட்சி தேர்தல்களை விட இடதுசாரி கூட்டணி இப்போது அதிக வாக்குகளை பெற்றுள்ளது.

English summary
Kerala local body election results have given us many surprise data. Now that the result has come and completed in all the wards, now is a good time to compare the turnout with the previous turnout.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X