திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

விளம்பரம் தேடுவோருக்கெல்லாம் பாதுகாப்பு அளிக்க முடியாது.. கேரள அமைச்சர் திட்டவட்டம்

Google Oneindia Tamil News

Recommended Video

    Sabarimala temple opens today | விளம்பரம் தேடுவோருக்கெல்லாம் பாதுகாப்பு அளிக்க முடியாது

    திருவனந்தபுரம்: விளம்பரம் தேடி கொள்வதற்காகவே சபரிமலைக்கு வரும் பெண்கள் ஆர்வலர்களுக்கு கேரள அரசு எந்தவித பாதுகாப்பையும் வழங்காது என தேவஸ்வம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

    சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 வயது முதல் 50 வயதுடைய பெண்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்படுகிறது. காலம் காலமாக இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

    இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது சபரிமலை கோயிலுக்கு அனைத்து வயதினரும் சுவாமி தரிசனம் செய்யலாம் என்ற வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பை கடந்த ஆண்டு அளித்தது.

    ரபேல் விவகாரத்தில் ஊழல் புகார்.. ராகுல்காந்தி பகிரங்க மன்னிப்பு கேட்க கோரி பாஜக இன்று போராட்டம்ரபேல் விவகாரத்தில் ஊழல் புகார்.. ராகுல்காந்தி பகிரங்க மன்னிப்பு கேட்க கோரி பாஜக இன்று போராட்டம்

    7 பேர் கொண்ட அமர்வு

    7 பேர் கொண்ட அமர்வு

    இந்த தீர்ப்பை எதிர்த்து கேரளாவின் நாயர் கூட்டமைப்பு உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்தது. இந்த நிலையில் அதன் மீதான தீர்ப்பு கடந்த வியாழக்கிழமை வழங்கியது. அதில் மறுசீராய்வு மனுவை 7 பேர் கொண்ட நீதிபதி அமர்வுக்கு மாற்றம் செய்யப்பட்டது.

    பெண்கள்

    பெண்கள்

    இந்த நிலையில் சபரிமலைக்கு பெண்களுக்கு அனுமதி என்ற உத்தரவு தொடரும் என நீதிபதிகள் தெரிவித்தனர். இதனால் இன்று மண்டல பூஜைக்காக ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படுகிறது. இதனால் இன்றைய தினம் பெண்கள் அதிகளவில் வருகை தருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

    திருப்தி தேசாய்

    திருப்தி தேசாய்

    அதோடு புனேவை சேர்ந்த பெண்கள் நல ஆர்வலர் திருப்தி தேசாய் இன்று சபரிமலைக்கு செல்வதாக அறிவித்துள்ளார். இங்கு அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சபரிமலைக்கு ஏராளமான பெண்கள் ஆன்லைனில் பதிவு செய்துள்ள நிலையில் அவர்களிடம் உண்மையான கள நிலவரத்தை கூறி அவர்களை வரவிடாமல் தடுக்க மாநில அரசு முயற்சித்து வருகிறது.

    பாதுகாப்பு இல்லை

    பாதுகாப்பு இல்லை

    இதுகுறித்து அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கூறுகையில் கடந்த ஆண்டை போல் இந்த முறையும் சபரிமலைக்கு வர முயற்சிக்கும் பெண்களுக்கு மாநில அரசு பாதுகாப்பு வழங்கும் என்பது உண்மை இல்லை. சுய விளம்பரத்துக்காக சபரிமலைக்கு வரும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது. ஐயப்பனை தரிசிக்க விரும்பும் பெண்கள் அதற்கான நீதிமன்ற உத்தரவை பெற வேண்டும் என்றார்.

    English summary
    Kerala Minister says that we dont give security to the ladies who come to Sabarimala for self publicity.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X