திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கேரளாவில் சமூக பரவல் இல்லை.. ஆனா எரிமலையின் மீது உட்கார்ந்திருப்பது போன்ற கதைதான்.. அமைச்சர்

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரளாவில் சமூக பரவல் இல்லைதான். ஆனால் எரிமலையின் மீது உட்கார்ந்திருக்கும் கதைதான். எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என கேரள அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார். அதாவது சமூக பரவல் நிலை என்பது எரிமலை போன்று எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம் என்பதைதான் அவர் அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தென்னிந்தியாவில் முதல்முறையாக கேரளாவில் கொரோனா தொற்று ஏற்பட்டது. இந்திய அளவில் 3ஆவது, 4 ஆவது இடத்தில் இருந்தது. இந்த நிலையில் அந்த மாநில சுகாதாரத் துறை சார்பில் எடுக்கப்பட்ட கான்டாக்ட் டிரேசிங் உள்ளிட்ட சிறப்பான வழிமுறைகளால் இரட்டை இலக்க பாதிப்பிற்கு கொண்டு வந்து பின்னர் சில நாட்களுக்கு கொரோனா பாதிப்பில்லாமல் இருந்தது.

அது போல் இங்கு வெளிநாடுகளிலிருந்தும் மாநிலத்திலிருந்தும் வருவோரிடமிருந்தே தொற்று அதிகமாக பரவுகிறது. இதையடுத்து கேரளாவில் இரண்டாவது அலையும் ஏற்பட்டதாக தெரிகிறது.

மாநிலம்

மாநிலம்

வெளிநாடுகளிலிருந்து 4.1 லட்சம் கேரள மக்கள் தாயகம் திரும்பியுள்ளனர். பல்வேறு மாநிலங்களிலிருந்து 2 லட்சத்திற்கு மேற்பட்டோர் கேரளாவிற்கு திரும்பியுள்ளனர். இஙகு இதுவரை 26 பேர் பலியாகியுள்ளனர். சனிக்கிழமை ஒரே நாளில் 240 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து மாநிலத்தில் மொத்த எண்ணிக்கை 5000 ஆனது.

அமைச்சர்

அமைச்சர்

இதுகுறித்து அமைச்சர் சுரேந்திரன் கூறுகையில், கன்டெய்ன்மென்ட் பகுதிகளில் கட்டுப்பாடுகளில் தீவிரப்படுத்தப்படும். உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அந்த ஊழியர்களுக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டது.

எரிமலை

எரிமலை

சமூக பரவல் தற்போது வரை கேரளத்தில் இல்லை. அதற்காக அது ஏற்படாது என சொல்லவே முடியாது. சமூக பரவல் நிலை என்பது எரிமலை போன்று எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் என்றார். வரகலாவில் ஞாயிற்றுக்கிழமை அரசு தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் தங்கியிருந்த இருவர் தப்ப முயன்றனர்.

இரண்டாவது அலை

இரண்டாவது அலை

இவர்களை போல் தனிமைப்படுத்தப்பட்ட முகாமிலிருந்து தப்புவோரால்தான் கொரோனாவின் இரண்டாவது அலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. எனினும் கொரோனா வைரஸின் உள்ளூர் பரவலையும் இறப்பு விகிதத்தையும் கேரளா குறைத்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும் கேரளாவில் சமூகபரவலின் தொடக்க நிலை ஏற்பட்டுவிட்டதாகவும் சில மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

English summary
Kerala Minister Kadakampally Surendran says that corona transmission is like sitting on a volcano.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X