திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நிர்வாகம் செய்வது எப்படி..? வகுப்பறைக்கு செல்லும் கேரள அமைச்சர்கள்... 3 நாள் டிரைனிங் கிளாஸ்..!

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: நிர்வாகம் எப்படி செய்வது என்பதை தெரிந்துகொள்வதற்காக, கேரள அமைச்சர்களுக்கு 3 நாள் பயிற்சி வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்துள்ளார் பினராயி விஜயன.

நாளை 20-ம் தேதி தொடங்கும் அமைச்சர்களுக்கான பயிற்சி வகுப்பு அடுத்த 3 நாட்களுக்கு 22-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

9 மாத குழந்தை உட்பட.. செய்தி இதழ் எடிட்டர் குடும்பத்தில் 5 பேர் சடலமாக கண்டெடுப்பு! பெங்களூரில் ஷாக்9 மாத குழந்தை உட்பட.. செய்தி இதழ் எடிட்டர் குடும்பத்தில் 5 பேர் சடலமாக கண்டெடுப்பு! பெங்களூரில் ஷாக்

அரசு நிர்வாகத்தில் முடிவெடுப்பது எப்படி, நெருக்கடியை எதிர்கொள்வது எப்படி என்பது குறித்தெல்லாம் கேரள மாநில அமைச்சர்களுக்கு எக்ஸ்பர்ட்கள் வகுப்பு எடுக்கவுள்ளனர்.

சட்டமன்றத் தேர்தல்

சட்டமன்றத் தேர்தல்

தமிழகத்தோடு அண்மையில் கேரளாவுக்கு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் இடதுசாரி ஜனநாயக முன்னணி இரண்டாவது முறையாக ஆட்சியை பிடித்து தொடர் வெற்றியை ஈட்டியது. பினராயி விஜயன் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்ற நிலையில் அவரது அமைச்சரவையில் 20 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டன. அந்த இருபது பேரில் 3 பேர் மட்டுமே ஏற்கனவே அமைச்சர்களாக இருந்தவர்கள். மீதமுள்ள 17 பேரும் அமைச்சரவைக்கு புதியவர்கள்.

3 நாள் பயிற்சி

3 நாள் பயிற்சி

அந்த 17 அமைச்சர்களில் 9 பேர் முதல்முறையாக சட்டமன்ற உறுப்பினராக வெற்றிபெற்றவர்கள். புதுமுகங்களுக்கு வாய்ப்பு கொடுத்த பினராயி விஜயன், ஆட்சி நிர்வாக முறை குறித்து அமைச்சர்கள் முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக 3 நாள் ஸ்பெஷல் டிரைனிங் கிளாசுக்கு ஏற்பாடு செய்துள்ளார். 10 அமர்வுகளில் நடைபெறும் இந்த 3 நாள் பயிற்சி வகுப்பில் அனைத்து அமைச்சர்களும் தவறாது பங்கேற்க வேண்டும் என பினராயி விஜயன் அறிவுறுத்தியுள்ளார்.

வல்லுநர்கள்

வல்லுநர்கள்

கேரள அரசின் முன்னாள் ஆலோசகர் கீதா கோபால், நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி அம்தாப் கந்த், இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி ஷிபுலால், பேரிடர் மேலாண்மை துறை வல்லுநர் முரளி துமரகுடி, அமைச்சரவை முன்னாள் செயலாளர் சந்திரசேகர், ஐ.ஐ.எம். முன்னாள் பேராசிரியர் மதுகுட்டி கே.மோனிபள்ளி, உள்ளிட்டோர் கேரள அமைச்சர்களுக்கு பாடம் எடுக்கவுள்ளனர்.

 உம்மன் சாண்டி

உம்மன் சாண்டி

ஆளுமை பண்புகளை எவ்வாறு வளர்த்துக்கொள்வது, அரசுக்கு ஏற்படும் நெருக்கடிகளை சமாளிப்பது குறித்தெல்லாம் இந்த 3 நாள் பயிற்சி வகுப்பில் சொல்லித்தரப்படும் எனத் தெரிகிறது. இதனிடையே கடந்த 2011-2016-ம் ஆண்டு உம்மன் சாண்டி கேரள முதலமைச்சராக இருந்த போது, அவரது அமைச்சரவைக்கும் ஒரு நாள் சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

English summary
Kerala ministers went 3 days training programme from tomorrow
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X