திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மகள் "ராஜேஸ்வரி"க்கு கல்யாணம்.. அசரடித்த அப்பா "அப்துல்லா".. பட்டுபுடவைகளுடன் பர்தாக்கள் கைகோர்ப்பு!

வளர்ப்பு இந்து மகளுக்கு முஸ்லீம் தம்பதி திருமணம் செய்து வைத்தனர்

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: ஊரெல்லாம் ராஜேஸ்வரி கல்யாணம் பத்திதான் பேச்சாக உள்ளது... இந்த கல்யாணத்தில், கோயிலுக்குள் பட்டுப்புடவைகளுடன் பர்தாக்களின் நடமாட்டங்களையும் பார்க்கவே மெய்சிலிர்க்கிறது.. யாருமில்லாத இந்து பெண்ணான ராஜேஸ்வரிக்கு, இஸ்லாமியர் ஒருவர் திருமணம் செய்து வைத்துள்ளார்!!

இந்து குடும்பத்தை சேர்ந்த 7 வயது பெண் குழந்தை அவர்.. அப்பா - அம்மா இல்லை.. 7 வயதிலேயே அனாதையாகிவிட்ட அவலம்.

உறவுகளும், சொந்தங்களும் இல்லாத அந்த குழந்தையை பக்கத்து வீட்டில் வசிக்கும் அப்துல்லா என்பவர் அரவணைத்து கொண்டார்.. அப்துல்லா தம்பதிதக்கு 3 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

ராஜேஸ்வரி

ராஜேஸ்வரி

எனினும், தன் வீட்டிற்கே அந்த பெண் குழந்தையை தூக்கி வந்து.. தங்கள் வீட்டு குழந்தையாகவே வளர்க்க ஆரம்பித்தார். தான் ஒரு இஸ்லாமியர் என்பதால், அந்த குழந்தையையும் இஸ்லாத்திற்கு அப்துல்லா மதம் மாற்றவில்லை. இந்து முறைப்படியேதான் வளர்த்தார்.. ராஜேஸ்வரி என்று பெயர் வைத்தார்... படிக்கவும் வைத்தார். அந்த வீட்டில் ஒரு செல்ல மகளாகவே ராஜேஸ்வரி வளர்ந்தார்.

கல்யாணம்

கல்யாணம்

இப்போது ராஜேஸ்வரிக்கு வயசு 22 ஆகிறது.. இவ்வளவு காலம் சரியாக தன் கடமையை செய்த அப்துல்லா, பெண்ணுக்கு கல்யாணம் செய்யவும் முடிவு செய்தார். இந்து மதத்தை சேர்ந்த விஷ்ணு என்ற இளைஞர் பார்த்தார்.. முறைப்படி விஷ்ணுவின் வீட்டில் சம்மதம் பேசிவிட்டு வந்தார்.. அத்துடன் ராஜேஸ்வரியின் முழு சம்மத்தையும் கேட்டு, அவர்களுக்கு கோயிலில் வைத்து கல்யாணம் செய்துள்ளார்.

வீடியோ

வீடியோ

மிக எளிமையான முறையில்தான் இந்த கல்யாணம் நடந்தது.. கோயிலுக்குள் அப்துல்லா குடும்பமே ஆஜர் ஆனது.. அப்துல்லாவின் 84 வயது அம்மாவும் கல்யாணத்தில் உற்சாகத்துடன் கலந்து கொண்டார். இந்த கல்யாண வீடியோ இப்போது வைரலாகிறது.. மண்டபத்துக்குள் பர்தாக்களும், பட்டுப்புடவைகளும் ஒன்றாக வலம் வலம் வருகிறார்கள்... பந்தியிலும் அருகருகே உட்கார்ந்து சாப்பிடுகிறார்கள்.. நெற்றி நிறைய குங்குமம், விபூதி, சகிதம் அப்துல்லா - தம்பதியிடம் ராஜேஸ்வரி ஆசீர்வாதம் வாகும் காட்சி புல்லரிக்க வைத்து வருகிறது.. அப்துல்லா பேசப்பட்டு வருகிறார்!

வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள்

சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி.. இதையெல்லாம் தூக்கிப் போடுங்க சார்.. இதுபோன்ற உறவுகள்தான் இந்தியாவின் பலமே.. வேறு எதுவுமே தேவையில்லை.. இந்த நட்பையும் ஒற்றுமையையும் உறவையும் கட்டிக் காக்க..! இதை விட வேறு என்ன நல்லிணக்கம் வந்து விடப் போகிறது.. மனசார பாராட்டுவோம் அப்துல்லாவை.. உச்சி முகர்ந்து ஆசிர்வதிப்போம் அவரது மகள் ராஜேஸ்வரியை!!

English summary
kerala muslim couple conducts wedding their adopted hindu girl
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X