திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சவுதியில் கேரள செவிலியருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு.. தனிமையில் 30 செவிலியர்கள்.. பினராயி அவசர கடிதம்

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: சவுதி அரேபியாவில் பணியாற்றும் கேரள செவிலியருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதாக தகவல் வெளியான நிலையில், அவர்களுக்க உடனடியாக தரமான சிகிச்சை அளிக்க வெளியுறவுத்துறை அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதி உள்ளார்.

சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது. ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் இதுவரை 17 பேரைக் கொன்ற உயர்கொல்லி வைரஸான இதற்கு இதுவரை முறையான மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் இல்லை. இந்நிலையில் இந்த நோய் பரவுவதை தடுக்க உலக நாடுகள் கடும் எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகின்றன.

சவூதி அரேபியாவில் உள்ள அல் ஹயாத் மருத்துவமனையில் பணிபுரியும் கோட்டயம் மாவட்டம் எட்டுமன்னூரைச் சேர்ந்த செவிலியர், இந்த வைரஸ் இருந்ததற்கான பரிசோதனை செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பினராயி கடிதம்

கேரளாவைச் சேர்ந்த குறைந்தது 30 செவிலியர்களும் மருத்துவமனையில் தனிமையில் வைக்கப்பட்டுள்ளார்கள் என்றும் இவர்களுக்கு வைரஸுக்கு பாசிட்டிவ் பரிசோதனை செய்த பிலிப்பைன்ஸ் செவிலியரையும் கண்கானித்து வருவதாக சொல்லப்படுகிறது. இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன், சவுதி அரேபியாவில் பணியாற்றும் கேரள செவிலியர்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா என்பதை அறிய வேண்டும் என்றும் சவுதி அரேபியா அரசை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறும் குறிப்பிட்டுள்ளார்.

சிகிச்சை அளிக்க

சிகிச்சை அளிக்க

மேலும் வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தால் நிபுணர் சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது உள்ளிட்ட அவசர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும இந்த விஷயத்தை தீவிரமாக பார்க்க வேண்டும் என்று முதல்வர் பினராயி விஜயன் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

உதவிகள்

உதவிகள்

இதனிடையே சவூதி அரேபியாவில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்துடன் பேசியுள்ளதாக வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.முரளீதரன் தெரிவித்துள்ளார், தனிமைப்படுத்தப்பட்ட செவிலியர்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்குமாறு கேட்டுக் கொண்டதாகவும் கூறியுள்ளார். அமைச்சர் முரளீதரன் மற்நொரு டுவிட் பதிவில் "சுமார் 100 இந்திய செவிலியர்கள், பெரும்பாலும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் சவுதியன் அல்-ஹயாத் மருத்துவமனையில் பணிபுரிகின்றனர். "பாதிக்கப்பட்ட செவிலியர் ஆசியர் தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார், அவர் குணமடைந்து வருகிறார்" என்று தெரிவித்துள்ளார்.

எச்சரிக்கை

எச்சரிக்கை

இருப்பினும், கேரளாவின் சுகாதாரத் துறையின் வட்டாரங்கள், மாநிலத்தைச் சேர்ந்த எந்த செவிலியர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக தங்களுக்கு எந்த தகவலும் இல்லை என்றும் சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகமான நிலையில் சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு மற்றும் கண்ணூர் ஆகிய நான்கு விமான நிலையங்களிலும் கண்காணிப்பை விரைவுபடுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதோடு, சீனாவிலிருந்து திரும்பியவர்கள் மாவட்ட மருத்துவ அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என்று மாநில சுகாதார அமைச்சர் கே.கே.சயலஜா தெரிவித்துள்ளார்.

English summary
Kerala Nurse Tests Positive for Coronavirus who Working in Saudi : Kerala CM Asks Centre to Take Urgent Steps. Minister of State for External Affairs, V Muraleedharan, said he has spoken to the Consulate General of India in Saudi Arabia, asking them to provide all possible support to the quarantined nurses.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X