திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரூல்ஸ் ரூல்ஸ்தான்.. கேரள ஐபிஎஸ், பொன்.ராதாகிருஷ்ணன் இடையே பரபர வாக்குவாதம்.. பேசியது என்ன?

நேற்று சபரிமலை சென்ற பாஜக கட்சியை சேர்ந்த மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் போலீசால் தடுத்து நிறுத்தப்பட்டது பெரிய வைரலாகி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    சபரிமலை சென்ற மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தடுத்து நிறுத்தம்- வீடியோ

    திருவனந்தபுரம்: நேற்று சபரிமலை சென்ற பாஜக கட்சியை சேர்ந்த மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் போலீசால் தடுத்து நிறுத்தப்பட்டது பெரிய வைரலாகி உள்ளது.

    இவரை தடுத்து நிறுத்திய அதிகாரி பெயர் யாத்திஷ் சந்தர் ஐபிஎஸ். இவரும், பொன்.ராதாகிருஷ்ணனும் வாதம் செய்யும் வீடியோ வெளியாகி உள்ளது.

    இந்த வீடியோ இணையம் முழுக்க வைரலாகி பெரிய சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளது. அந்த வீடியோவில் அவர்கள் பேசியதன் விளக்கம் இதோ.

    என்ன பேசினார்கள்

    யாத்திஷ் சந்தர் ஐபிஎஸ், அமைச்சரை பார்த்து, ''நாங்கள் வாகனங்களை நிறுத்த ஒரே காரணம் டிராபிக் ஜாம்தான். தனியார் வண்டிகள் எல்லாம் சென்றால் பெரிய அளவில் டிராபிக் ஜாம் ஏற்படும், அதனால்தான் நாங்கள் தனியார் வாகனங்களை அனுமதிப்பது இல்லை'' என்று கூறினார். அதற்கு பொன்.ராதாகிருஷ்ணன், காரில் செல்ல ஆசைப்படுபவர்களை செல்ல அனுமதிக்க வேண்டும், என்று கூறினார்.

    பிரச்சனை

    பிரச்சனை

    அதற்கு யாத்திஷ் சந்தர் ஐபிஎஸ், நாங்கள் அனுமதிக்கிறோம், எங்களுக்கு பிரச்சனை இல்லை, ஆனால் நீங்கள் டிராபிக் பிரச்சனையோ, அசம்பாவிதமோ ஏற்பட்டால் பொறுப்பேற்றுக் கொள்வீர்களா என்று கேட்டார். அதற்கு பொன்.ராதாகிருஷ்ணன், நான் பொறுப்பேற்க மாட்டேன் என்று கூறினார். உடனே யாத்திஷ் சந்தர் ஐபிஎஸ், அதனால்தான் நாங்கள் உள்ளே அனுமதிப்பதில்லை என்றார்.

    காமெடி

    காமெடி

    உடனே கோபம் அடைந்த பாஜக தொண்டர் ஒருவர் கோபமாக, போலீஸ் செய்ய வேண்டிய பணியை போலீஸ்தான் செய்ய வேண்டும், அதை மந்திரியா செய்ய முடியும். மந்திரியிடம் மரியாதையாக பேசுங்கள் என்று கோபமாக கூறினார். ஆனால் கொஞ்சம் கூட பயப்படாத அந்த போலீஸ் அதிகாரி யாத்திஷ் சந்தர் ஐபிஎஸ், அவரை கோபமாக முறைத்து பார்த்தார்.

    அரசு வாகனம்

    அரசு வாகனம்

    அதன்பின் யாத்திஷ் சந்தர் ஐபிஎஸ், டிராபிக் ஜாம்தான் உங்களை உள்ளே விடாததற்கு காரணம் என்றார். அதற்கு பொன்.ராதாகிருஷ்ணன், ஏன் அரசு வாகனங்களை மட்டும் அனுப்புகிறீர்கள் என்று கேட்டார். அதற்கு மலை மீது அரசு பேருந்து மட்டுமே செல்ல முடியும். எல்லா தனியார் வாகனமும் ஒரே நேரத்தில் சென்றால் அசம்பாவிதம் ஏற்படும், மலையின் நிலை அப்படித்தான் இருக்கிறது, மண் சரிவு ஏற்படும் என்று கூறினார்.

    மந்திரி வண்டி

    மந்திரி வண்டி

    அதற்கு பொன்.ராதாகிருஷ்ணன், நீங்கள் அப்படி என்றால் என்னுடைய வண்டியையும் உள்ளே விட மாட்டீர்களா? என்று கேட்டார். அதற்கு இல்லை , விஐபி வண்டிகள் அனுப்பப்படும். நீங்கள் மந்திரி உங்கள் வண்டியை அனுப்புவோம். ஆனால் உங்கள் தொண்டர்களின் வண்டியை விட மாட்டோம். நீங்கள் ஆர்டர் கொடுத்தால் எல்லோரையும் அனுப்புவோம் என்றார். அதற்கு பொன்.ராதாகிருஷ்ணன் எனக்கு அதற்கு அதிகாரம் இல்லை என்று கூறினார். அதனால் நாங்களும் தொண்டர்களை அனுமதிக்க முடியாது என்று போலீஸ் அதிகாரி கூறினார்.

    அனுப்பி வைக்கப்பட்டார்

    அனுப்பி வைக்கப்பட்டார்

    இந்த நிலையில் கடைசியாக கேரள அரசு பேருந்தில் பொன்.ராதாகிருஷ்ணன் அனுப்பி வைக்கப்பட்டார். இவர்களின் வாக்குவாதத்தில் பாஜக தொண்டர் பொன்.ராதாகிருஷ்ணனை மரியாதையாக கூப்பிட வேண்டும் என்றதும், யாத்திஷ் சந்தர் ஐபிஎஸ் வார்த்தைக்கு வார்த்தை பொன்.ராதாகிருஷ்ணனை ''சார்'' ''சார்'' என்று கூறியது பெரிய வைரல் ஆகியுள்ளது.

    English summary
    Kerala Police convo with BJP minister Pon. Radhakrishnan may made your day today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X