திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சபரிமலைக்கு அரசு பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்ட பொன்.ராதாகிருஷ்ணன்.. கேரள போலீஸ் கெடுபிடி!

சபரிமலை கோவிலுக்குள் தொண்டர்களுடன் செல்ல முயன்ற பாஜக கட்சியை சேர்ந்த மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் போலீசால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    சபரிமலை சென்ற மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தடுத்து நிறுத்தம்- வீடியோ

    திருவனந்தபுரம்: சபரிமலை கோவிலுக்குள் தொண்டர்களுடன் செல்ல முயன்ற பாஜக கட்சியை சேர்ந்த மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் போலீசால் தடுத்து நிறுத்தப்பட்டார். அதன்பின் அவர் பக்தர்களோடு கேரள அரசு ஏற்பாடு செய்திருந்த அரசு பேருந்தில் சபரிமலை நோக்கி அனுப்பப்பட்டார்.

    கடந்த வாரம் சபரிமலை கோவில் பூஜைக்காக திறக்கப்பட்டது. மண்டல மகர விளக்கு பூஜைக்காக மீண்டும் கோவில் திறக்கப்பட்டது.

    இந்த முறை கோவில் 41 நாட்கள் திறந்து இருக்கும். இது மிக முக்கியமான பூஜையாகும். இந்துத்துவா அமைப்புகள் இந்தமுறையும் பெண்கள் நுழைவிற்கு எதிராக அங்கு போராட்டம் நடத்தி வருகிறது. தற்போது அங்கு பொன்.ராதாகிருஷ்ணன் செல்ல முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    மாலை போட்டார்

    மாலை போட்டார்

    மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கடந்த மாதமே இதற்காக மாலை போட்டுள்ளார். விரதம் இருந்து பூஜை செய்து அவர் கோவிலுக்கு சென்றுள்ளார். இருமுடி கட்டி இன்னும் சில ஐயப்ப பக்தர்களுடன் அவர் காலையில் தரிசனமும் செய்வதற்காக சபரிமலைக்கு சென்றார்.

    தொண்டர்களுடன் உள்ளே செல்ல முயன்றார்

    ஆனால் அவர் மட்டுமில்லாமல் அவருடன் சில பாஜகவினரும் கோவில் உள்ளே நுழைய முயற்சி செய்தனர். அதில் சிலர் மாலை அணியவில்லை. அதேசமயம் நிறைய பேர் கூட்டமாக வந்ததால் அங்கு கொஞ்சம் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. இதனால் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கேரளா போலீசால் பம்பை அருகே தடுத்து நிறுத்தப்பட்டார்.

    பிரச்சனை ஆனது

    இதனால் அங்கு பெரிய சர்ச்சை ஏற்பட்டது. மத்திய இணையமைச்சரை எப்படி தடுக்கலாம் என்றும், அவர் முறையாக மாலை அணிந்து செல்கிறார் என்று பாஜகவினர் சண்டையிட்டனர். இந்த நிலையில் பொன் ராதாகிருஷ்ணன் தொண்டர்களுடன் செல்ல முயன்றதால்தான் உள்ளே அனுமதிக்கவில்லை என்று போலீசார் விவாதம் செய்தனர்.

    அறிக்கை தாக்கல்

    இதுமட்டுமில்லாமல் மத்திய அரசு பொன். ராதாகிருஷ்ணனுக்கு முக்கியமான வேலை ஒன்றும் கொடுத்துள்ளது. அவர் சபரிமலையில் நடக்கும் நிகழ்வுகள் குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் அவர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று ஆணையிடப்பட்டுள்ளது.

    அரசு

    அரசு

    பல பேச்சுவார்த்தைக்கு பின் கடைசியில் பொன்.ராதாகிருஷ்ணன் மட்டும் தனியாக சபரிமலைக்கு அனுமதிக்கப்பட்டார். அவரது தொண்டர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அவர் பக்தர்களோடு கேரள அரசு ஏற்பாடு செய்திருந்த அரசு பேருந்தில் சபரிமலை நோக்கி அனுப்பப்பட்டார். காரில் எல்லாம் அனுப்ப முடியாது பேருந்தில் மட்டும்தான் செல்ல முடியும் என்று உறுதியாக போலீஸ் கூறியதால் அவர் பேருந்தில் செல்லும் நிலை ஏற்பட்டது.

    English summary
    Kerala Police stops BJP minister Pon.Radhakrishnan who tried to enter Sabarimala Temple.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X