திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பிரதமர் மோடியை புகழ்ந்து தள்ளிய காங்கிரஸ் மூத்த தலைவர் அப்துல்லா குட்டி கட்சியிலிருந்து நீக்கம்!

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: காந்தி கூறியதை போல, ஏழைகளை மனதில் வைத்து மக்கள் நலத்திட்டங்களை பிரதமர் மோடி வகுத்து செயல்படுத்தி வருவதாக கேரள காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான அப்துல்லா குட்டி புகழ்ந்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநில காங்கிரஸ் கட்சியில் முக்கிய தலைவர்களில் ஒருவர் ஏ.பி.அப்துல்லா குட்டி. இவர் காங்கிரஸ் கட்சியில் இருந்தாலும், பிரதமர் மோடியை அவ்வப்போது புகழ்ந்து பேசி வருகிறார். சில தினங்களுக்கு முன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பிரதமர் மோடியை புகழ்ந்து தள்ளி இருந்தார்.

kerala pradesh congress ousts top leader ap abdullakutty

காந்தீய கொள்கையின் அடிப்படையில் தனது நிர்வாகத்தை நடத்துவதால் பிரதமர் மோடி வெகுவாக பிரபலமடைந்துள்ளார். பிரதமர் மோடியின் வளர்ச்சி திட்டங்கள் பெரிய அளவிலான வரவேற்பை பெற்றிருப்பதே இந்த தேர்தலில் வெற்றி பெறுவதற்கான காரணம்.

மகாத்மா காந்தி கூறியதைபோல, ஒவ்வொரு வளர்ச்சித் திட்டத்தையும் உருவாக்குவதற்கு முன்னர் ஏழைகளின் முகத்தை நினைவுகூற வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்படுகிறார். சுவச் பாரத் திட்டத்தின் கீழ் 9.26 கோடி குடும்பத்தினருக்கு கழிப்பிட வசதியை ஏற்படுத்தி கொடுத்துள்ளார்.

கட்டாய இந்தி திணிப்பு.. கொந்தளித்த தமிழகம்.. வழக்கம் போல ரஜினி கப்சிப்! கட்டாய இந்தி திணிப்பு.. கொந்தளித்த தமிழகம்.. வழக்கம் போல ரஜினி கப்சிப்!

அதேபோன்று, உஜ்வாலா திட்டத்தின் கீழ் 6 கோடி ஏழை குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பும், இலவச மின்சாரத்தையும் வழங்கி இருக்கிறார். அரசியல் விமர்சகர்களும், எதிர்க்கட்சி தலைவர்களும் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சிக்கின்றனர். அதற்கு முன்னதாக, பாஜக தேர்தலில் வெற்றி பெற்றதற்கான காரணங்களை அவர்கள் ஆராய்ந்து பார்க்க வேண்டும்," என்று தெரிவித்திருந்தார்.

இந்த ஃபேஸ்புக் பதிவு காங்கிரஸ் கட்சிக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், விிளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பிய நிலையில், இன்று கட்சியிலிருந்தும் நீக்கியுள்ளது.

பிரதமர் மோடியை புகழ்ந்து பேசுவது அப்துல்லா குட்டிக்கு புதிதல்ல. கடந்த 2009ம் ஆண்டு குஜராத் முதல்வராக இருந்த பிரதமர் மோடியை புகழ்ந்து பேசினார். அப்போது, அவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கண்ணூர் எம்.பி.யாக இருந்தார்.

மோடியை புகழ்ந்து பேசியதையடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அன்றைய தினமே காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். அத்துடன், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வாக இரண்டு முறை தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில், அவர் காங்கிரஸ் கட்சியிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளதால், விரைவில் அவர் பாஜக.,வில் ஐக்கியமாகிவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
The Kerala Pradesh Congress Committee has expelled party's senior leader AP Abdullakutty on charges of indiscipline.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X