திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கேரளாவில் தீயாய் பரவும் கொரோனா.. பரிசோதிக்கும் 10ல் ஒருவருக்கு பாதிப்பு

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா நோய்த் தொற்று மிக மோசமாக அதிகரித்துள்ளது. அங்கு 10ல் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

கேரள சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட தகவலை பாருங்கள்:

கடந்த 24 மணி நேரத்தில், கேரளாவில் 5792 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் இவைதான்- மலப்புரம் 776, கொல்லம் 682, திருச்சூர் 667, கோழிக்கோடு 644, எர்ணாகுளம் 613, கோட்டயம் 429, திருவனந்தபுரம் 391, பாலக்காடு 380, ஆலப்புழா 364, கண்ணூர் 335, பத்தினம்திட்டா 976, இடுக்கி 976.

Kerala records 5,792 new COVID-19 cases

கடந்த 24 மணி நேரத்தில் 56,157 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. சோதனை நேர்மறை விகிதம் 10.31 ஆக உள்ளது. அதாவது 10ல் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக அர்த்தம்.

மொத்தம் 55,54,265 மாதிரிகள் இதுவரை சோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று, கேரளாவில், கொரோனாவால் 27 இறப்புகள் ஏற்பட்டுள்ளன.

64 சுகாதார ஊழியர்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். எர்ணாகுளம் 15, கோழிக்கோடு 11, பத்தினம்திட்டா, கண்ணூர் தலா 9, திருவனந்தபுரம், திருச்சூர், மலப்புரம் தலா 4, கொல்லம், பாலக்காடு, வயநாடு, காசர்கோடு தலா 2 சுகாதார ஊழியர்களுக்கு இன்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது அச்சுறுத்தும் அம்சமாக பார்க்கப்படுகிறது.

கேரளாவில் இதுவரை, 4,61,394 பேர் இந்த நோயிலிருந்து மீண்டுள்ளனர். அதே நேரத்தில் 70,070 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

English summary
Corona infection has increased drastically in Kerala. One in 10 people there is diagnosed with corona infection.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X