இம்மியளவும் குறையல.. கேரளாவில் உச்சம் தொட்ட கொரோனா.. ஒரே நாளில் 55 ஆயிரத்தை கடந்த தொற்று
திருவனந்தபுரம்: இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 55,474 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது, கேரளாவில் கலக்கத்தை தந்து வருகிறது.
கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவில் குறையாமல் உள்ளது.. சில மாதங்களுக்கு முன்பு தாக்கம் குறைந்திருந்த நிலையில், தற்போது தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதற்கான தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசு இறங்கி உள்ளது.. இந்தியாவிலேயே டெல்லி, மகாராஷ்டிரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் கொரோனா 3-ம் அலையின் தாக்கம் கொஞ்சம் குறைய தொடங்கியுள்ளது, ஓரளவு நிம்மதியை தந்து வருகிறது..
Coronavirus: கொரோனா இருக்கா இல்லையா?.. 20 நிமிடங்களில் கண்டறியலாம்.. விலையும் குறைவாம்!

சுகாதாரத்துறை
இந்தியாவில் நேற்று 3.33 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 3.06 லட்சம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலில், கடந்த 24 மணி நேரத்தில் 3.06 லட்சம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், 2,43,495 பேர் குணமடைந்துள்ளதால், இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,68,04,145 ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..

அதிர்ச்சி
இதனிடையே, கேரளாவில் கொரோனாவின் தாக்கம் இன்னும் உயர்ந்தபடியே செல்கிறது... அங்கு கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 55 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. குறிப்பாக, திருவனந்தபுரம், கோழிக்கோடு, எர்ணாகுளம் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக அளவில் பாதிப்பு பதிவாகி உள்ளது.

உயிரிழப்பு
இதனையடுத்து கேரளாவில் இதுவரை பதிவான மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 57.25 லட்சமாக உயர்ந்துள்ளது... அதேபோல, கொரோனாவைரஸ் தாக்கி ஒரே நாளில் 154 பேர் உயிரிழந்துள்ள நிலையில், கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 52 ஆயிரம் ஆக அதிகரித்துள்ளது.. இதுவரை 30,200 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகி சென்றுள்ளனர்..

சதவீதம் உயர்வு
ஆனால், இப்போதைக்கு 2.85 லட்சம் பேர் கொரோனா தொற்று பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.. கேரளத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் நேர்மறை விகிதம் 49.40 சதவீதத்தைத் தொட்டுள்ளது... கொரோனா சோதனை செய்யப்பட்ட 2 பேரில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதையே இது எடுத்துக்காட்டுகிறது.. அம்மாநிலத்தில் 84 சதவீத பேருக்கு 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக் சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டு தெரிவித்துள்ளது.