• search
திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

கேரளாவில் அதிர்ச்சி.. ஒரே நாளில் 26 பேருக்கு கொரோனா.. பினராயி கொடுத்த முக்கிய அலர்ட்!

|

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று ஒரே நாளில் 26 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இரண்டு சுகாதார ஊழியர்கள், ஒரு போலீஸ் அதிகாரி மற்றும் கேரளாவிற்கு வெளியில் இருந்து வந்த 14 பேர் உள்பட 26 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவில் இருந்து படிப்படியாக மீண்டு வந்த கேரளாவில், இப்போது வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து வருபவர்களால் கொரோனா அதிகரித்து வருகிறது.

கேரளாவில் கொரோனா வைரஸ் தொற்று ஒற்றை இலக்கத்தில் இருந்து இன்று ஒரே நாளில் 26 பேருக்கு பரவி உள்ளது. 8 மாவட்டங்களுக்கு கொரோனா பரவி உள்ளது.

காசர்கோட்டில் 10 பேருக்கும், மலப்புரத்தில் ஐந்து பேருக்கும், பாலக்காடு மற்றும் வயநாடு மாவட்டங்களில் தலா 3 பேருக்கும், கண்ணூரில் இரண்டு பேருக்கும் பத்தினம்திட்டா, இடுக்கி மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆஹா ஒரு குட் நியூஸ்- தமிழகத்தில் 10 நாளுக்கு பிறகு 500 எண்ணிக்கையிலிருந்து குறைந்த கொரோனா பாதிப்பு

போலீஸ் அதிகாரிக்கு தொற்று

போலீஸ் அதிகாரிக்கு தொற்று

வெளிநாட்டிலிருந்து வந்தவர்களில் ஏழு பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஏழு பேர்,. சென்னை மற்றும் மும்பையில் இருந்து தலா 4 பேர் 4 மற்றும் பெங்களூரில் இருந்து வந்த ஒருவர் ஆகியோர் உள்ளிட்ட 26 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று நோய் பாதித்த 26 பேரில் 2 பேர் சுகாதார ஊழியர்கள் ஆவர். இதேபோல் ஒரு போலீஸ் அதிகாரிக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளன. இன்று மூன்று பேர் குணம் அடைந்துள்ளனர். இத்துடன் கேரளாவில் 493 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தொற்று நிலவரம்

தொற்று நிலவரம்

கேரளா மாநிலத்தில் ஹாட் ஸ்பாட்களின் எண்ணிக்கை 15 ஆக குறைந்துள்ளது என்று முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். அவற்றின் விவிரம் கண்ணூர் 3, காசர்கோடு 3, வயநாடு 7, கோட்டயம் மற்றும் திருச்சூர் ஒன்று. கேரளாவில் உறுதிப்படுத்தப்பட்ட மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 560 ஆகும். இவற்றில் 64 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றன. தனிமைப்படுத்துதலில் 36362 பேர் வீடுகளிலும், 548 பேர் மருத்துவமனைகளிலும் உள்ளனர். இன்று 174 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 40692 மாதிரிகள் சோதிக்கப்பட்டுள்ளனர் . அதில் 39619 தொற்றுநோயற்றவை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

பினராயி வேண்டுகோள்

பினராயி வேண்டுகோள்

உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுமார் 124 மலையாளிகள் கொரோனா நோய் காரணமாக இறந்துள்ளனர். இந்நிலையில் அவர்களின் குடும்பத்தின் துக்கத்தில் பங்கெடுப்பதாகவும், ஒவ்வொரு நாடும் பரிந்துரைக்கும் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு அங்கு வசிக்கும் கேரளவாசிகளுக்கு முதல்வர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்தார்.

வாழ்க்கை முறையில் மாற்றம்

வாழ்க்கை முறையில் மாற்றம்

மேலும் முதல்வர் பினராயி விஜயன் பேசும் போது, தடுப்பூசிகள் இல்லாத நிலையில், வைரஸ் எச்.ஐ.வி போல கொரோனா உலகளாவிய தொற்றுநோயாக மாறக்கூடும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே . பொதுமக்களின் ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மிக முக்கியமானது. நமது சுகாதார அமைப்பு அதை சரிசெய்யும். பொது மக்கள் தங்கள் வாழ்க்கைமுறையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.

  Kerala doctor passed away in UK after long battle with coronavirus
  முதல்வர் வேண்டுகோள்

  முதல்வர் வேண்டுகோள்

  முகமூடிகளைப் அணிவது, பொது இடங்களில் நெரிசல் ஏற்படாத அளவிற்கு சமூக விலகலை கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும். தேவைக்காக மட்டுமே பயணங்களை மேற்கொள்ளுங்கள். உணவகங்கள் மற்றும் ஷாப்பிங் மையங்களில் முன்கூட்டியே ஆர்டர் செய்யுங்கள். உணவகங்கள் மற்றும் ஷாப்பிங் மையங்களில் நேரத்தை முன்கூட்டியே ஏற்பாடு செய்வது உட்பட பல காரணிகளை கவனத்தில் கொள்ள வேண்டும். ஊரடங்கு தொடர்ந்தாலும் தொடராவிட்டாலும், எதிர்காலத்தில் நாம் வைரஸுடன் வாழ வேண்டும், "என்று முதல்வர் கூறினார்.

  பொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்!

   
   
   
  English summary
  Kerala reported a sudden spike in COVID-19 cases on Thursday with 26 more people testing positive
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more