திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒருபக்கம் வெள்ளம்.. மறுபக்கம் தொற்று.. சிக்கி திணறும் கேரளா.. தடுப்பு, மீட்பு நடவடிக்கைகள் தீவிரம்

கேரளா, மகாராஷ்டிராவில் தொற்று பாதிப்பு சற்று அதிகமாகி உள்ளது

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரளாவில் ஒருபக்கம் வெள்ளம், மற்றொரு பக்கம் தொற்று பாதிப்பு என இரட்டை பிரச்சனையில் மாநிலம் தவித்து வருகிறது.. எனினும் சுகாதாரத்துறையினர் முழுவீச்சில் தொற்றை கட்டுப்படுத்த முனைப்பு காட்டி வருகின்றனர்.

அடிக்கடி இயற்கை சீற்றங்களுக்கு ஆளாகி கொண்டிருப்பது கேரளாதான்.. அந்த வகையில் வெள்ளம் ஒருபக்கம் கேரளாவை உலுக்கி எடுத்து வருகிறது... தொடர்ந்து கடும் மழை பெய்து வருவதால் பல இடங்களிலும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.. வீடுகள் இடிந்து விழுந்துள்ளன.. 23-க்கும் மேற்பட்டோர் பலியானதாக கூறப்படுகிறது.

பசுமைப் பட்டாசுகளை அனுமதிக்க வேண்டும் - 4 மாநில முதல்வர்களுக்கு மு.க ஸ்டாலின் கடிதம் பசுமைப் பட்டாசுகளை அனுமதிக்க வேண்டும் - 4 மாநில முதல்வர்களுக்கு மு.க ஸ்டாலின் கடிதம்

மற்றொரு பக்கம் தொற்று குறைந்தபாடில்லை..சுகாதாரத்துறையினர் பெருத்த முயற்சி கொண்டு, தொற்றை குறைக்கும் நடவடிக்கைகளில் இறங்கி உள்ளனர்.. கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,555 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரளா

கேரளா

இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 48,45,115 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 74 பேர் இறந்துள்ளனர்.. மாநிலத்திலேயே இதுவரை மொத்தம் 26,865 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். இப்போதைய நிலவரப்படி மாநிலத்தில் 87,593 பேர் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்றில் இருந்து 10,773 பேர் நேற்று ஒரே நாளில் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர்..

தடுப்பூசிகள்

தடுப்பூசிகள்

அந்த வகையில் கேரளாவில், தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 47.39 லட்சமாக உயர்ந்துள்ளது. அதேபோல, கடந்த 24 மணி நேரத்தில் 73,157 டெஸ்ட்கள் எடுக்கப்பட்டுள்ளன.. தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் 10.32 சதவிகிதமாகப் பதிவாகியுள்ளது... 2 மாதங்களுக்கு முன்பு மத்திய அரசு, ஒரு குழுவை அனுப்பி வைத்து மாநிலத்தில் தொற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தது மிகப்பெரிய பலனை பெற்று தந்துள்ளது.

மகாராஷ்டிரா

மகாராஷ்டிரா

மகாராஷ்டிரா மாநிலத்தை பொறுத்தவரை தற்போதுதான் ஓரளவு தொற்று குறைந்து கொண்டிருக்கிறது.. ஆட்சியில் இருக்கும் சிவசேனா இந்த கொரோனா தொற்றை குறைப்பதற்கு பல்வேறு போராட்டங்களை செய்தது.. மேலும் கொரோனா தடுப்பூசியை அதிகரித்து வழங்குமாறு கோரி மத்திய அரசுடன் மோதல் போக்கையும் கொண்டிருந்தது. இந்த நிலையில் மும்பையில் தொற்று குறைந்துள்ளது முக்கிய சாதனையாகவே பார்க்கப்பட்டு வருகிறது.

Recommended Video

    House Washed Away Video | Kerala Flood 2021 | Kerala Rain | Oneindia Tamil
     முனைப்பு - தீவிரம்

    முனைப்பு - தீவிரம்

    எனினும் கடந்த சில தினங்களாகவே கொரோனா கேஸ்கள் அதிகமாகி கொண்டே வருவதாக தெரிகிறது.. மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1485 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்... 2078 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.. 27 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 65,93,182 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 64,21,756 பேர் குணமடைந்துள்ளனர். 28,008 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்றாலும், தொற்றை மேலும் கட்டுப்படுத்த அந்த மாநில அரசு முனைப்பு காட்டி வருகிறது.

    English summary
    Kerala reports 6676 new Coronvavirus cases and 11023 recoveries
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X