கேரளா: ஆட்சியை தக்க வைக்கும் இடதுமுன்னணி; 81- 89 இடங்கள்; காங். அணிக்கு 49-57 இடங்கள்: ஏபிபி சர்வே
திருவனந்தபுரம்: கேரளா சட்டசபை தேர்தலில் ஆளும் இடதுமுன்னணி ஆட்சியைத் தக்க வைக்கும் என்றும் இந்த அணிக்கு 81 முதல் 89 இடங்கள் கிடைக்கும் என்றும் ஏபிபி சிவோட்டர் சர்வே தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கூட்டணிக்கு 49 முதல் 57 இடங்கள் கிடைக்கும் என்கிறது இந்த சர்வே.
தமிழகம், கேரளா, புதுச்சேரி, மே.வங்கம், அஸ்ஸாம் மாநில சட்டசபை தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ளன. இந்த மாநிலங்களில் தேர்தல் பிரசாரம் களை கட்டியுள்ளது.

இந்த நிலையில் ஒவ்வொரு மாநில தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்கிற கருத்து கணிப்பை ஏபிபி- சிவோட்டர் கருத்து கணிப்பு வெளியிட்டுள்ளது.
கேரளா சட்டசபை தேர்தல் குறித்த சர்வே முடிவுகள்:
- ஆளும் இடதுசாரிகள் முன்னணி 81 முதல் 89 இடங்கள்
- காங். கூட்டணிக்கு 49 முதல் 57 இடங்கள்
- பாஜகவுக்கு 0 முதல் 2 இடங்கள்
- இதர கட்சிகளுக்கு 0 முதல் 2 இடங்கள் கிடைக்கும் என்கிறது இந்த சர்வே.