திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொட்டித் தீர்த்த கனமழை.. வெள்ளம் சூழ்ந்து தனித்தீவான கேரளாவின் குட்டம்புழா கிராமம்!

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கனமழை பெய்ததால் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சுற்றி வெள்ளநீர் சூழ்ந்து தனித்தீவு போல் காட்சியளித்தது. எனினும் இந்தப் பகுதியில் தற்போது இயல்பு நிலை திரும்பியது.

கேரளாவுக்கு பலனளிக்கக் கூடிய தென்மேற்கு பருவமழை காலம் தொடங்கி அந்த மாநிலத்திலும் மாநில எல்லையில் உள்ள தமிழக மாவட்டங்களிலும், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.

 Keralas Kuttampuzha is surrounded by flood

இந்த நிலையில் கேரளாவில் நேற்று மாலை மிக கனமழை பெய்தது. இதனால் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள குட்டம்புழா எனும் கிராமத்தில் வெள்ள நீர் சூழ்ந்து கொண்டு தனித்தீவு போல் காட்சியளித்தது.

இது மலைவாழ் மக்கள் வாழும் கிராமம் ஆகும். இங்கு பலர் சிறிய நீரோடைகள், கால்வாய்கள் அருகிலேயே வீடுகள் அமைத்து வசித்து வருகிறார்கள். தற்போது அவர்களது வீட்டை சுற்றி காட்டாற்று வெள்ளம் போல் நீர் சூழ்ந்துள்ளதால் அவர்களால் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனின் மனைவி, மகன், மாமியார் உள்பட 4 பேருக்கு கொரோனா உறுதிசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனின் மனைவி, மகன், மாமியார் உள்பட 4 பேருக்கு கொரோனா உறுதி

தகவலறிந்த பேரிடர் குழுவினர் அந்த மக்களை தீயணைப்பு துறையின் லாரியை கொண்டு மீட்க சென்றனர். ஆனால் வெள்ளநீரில் லாரி சிக்கிக் கொண்டது. இதையடுத்து கிரேன் மூலம் அந்த லாரி அங்கிருந்து அகற்றப்பட்டது. எனினும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

இந்த நிலையில் குட்டம்புழாவை சுற்றியுள்ள நீர் வடிந்து அந்த இடம் பாதுகாப்பானதாக உள்ளது. மக்களும் தங்கள் வீடுகளுக்கு திரும்பினர்.

English summary
Heavy rains lashes in Kerala results Kuttampuzha surrounded by flood.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X