திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நாட்டின் மொத்த கேஸ்களில் 50% கேரளாவில்.. இன்று மிகப்பெரிய ஸ்பைக் .. கவலையில் மத்திய அரசு

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம் : இந்தியாவின் 50 சதவீதம் கொரோனா கேஸ்கள் கேரளாவில் இருப்பதாக அதிர்ச்சி தகவலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. நாட்டிலேயே கேரளாவில் தான் கொரோனா மீண்டும் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது.

இந்த தகவலை வெளியிட்டுள்ள மத்திய அரசு கவலை தெரிவித்துள்ளது. கேரளாவில் இன்று ஒரே நாளில் 22000 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 131 பேர் உயிரிழந்துள்ளனர்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் படி, ஜூலை 28ம் தேதி நிலவரப்படி 3,99,436 ஆக்டிவ் கேஸ்கள் இந்தியாவில் உள்ளன. இதில் கேரளாவில் மட்டும் 1,45,876 கேஸ்கள் உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் இன்று 1756 பேருக்கு கொரோனா பாதிப்பு.. 29 பேர் மரணம்தமிழகத்தில் இன்று 1756 பேருக்கு கொரோனா பாதிப்பு.. 29 பேர் மரணம்

 64சதவீதம் உயர்வு

64சதவீதம் உயர்வு

இந்தியா டுடே ஆஙகில் இதழ் வெளியிட்டுள்ள ஆய்வின் படி , கோட்டயத்தில் ஜூன் 28ம்தேதியுடன் இன்றைய தேதியான ஜூலை 28ம் தேதியை ஒப்பிபிட்டால் 64 சதவீதம் கொரோனா கேஸ்கள் அதிகரித்திருப்பது உறுதியாகி உள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மலப்புரம் மாவட்டத்தில் 59 சதவீதம் கேஸ்கள் அதிகரித்து இருப்பது உறுதியாகி உள்ளது. இதேபோல் எர்ணாகுளம் மாவட்டத்தில் 46.5 சதவீதம் கேஸ்கள் அதிகரித்துள்ளது. திருச்சூரில் ஒரு மாதத்தில் மட்டும 45.4 சதவீதம் கேஸ்கள் அகிதரித்துள்ளது.

மத்திய அரசு எச்சரிக்கை

மத்திய அரசு எச்சரிக்கை

இதையடுத்து கூடுதல் கட்டுப்பாடுகளை உடனடியாக விதிக்க வேண்டும் என்றும், சமூக இடைவெளி, கட்டுப்பாட்டு மண்டலங்கள், முககவசம் அணிவது உள்ளிட்டவற்றை கடைபிடிக்க வைப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு கேரளாவிற்கு அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பாக கேரளாவின் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை முதன்மை செயலாளருக்கு மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் கடிதம் எழுதி உள்ளார்.

மததிய குழு அறிக்கை

மததிய குழு அறிக்கை

ஜூலை 5 முதல் ஜூலை 9 வரை கேரளாவுக்குச் சென்ற மத்திய குழு தெரிவித்த ககுத்துககளை மேற்கோள் காட்டியுள்ள மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் , கேரளா, கொரோனாவை கட்டுப்படுத்துவதில் இன்னமும் கூடுதலாக செயலாற்ற வேண்டும் என்று கடிதத்தில் எழுதி உள்ளார்.

வீட்டு தனிமை

வீட்டு தனிமை

நாட்டில் புதிய கோவிட் -19 கேஸ்களில் 50 சதவீதம் கேரளாவில் உள்ளது, இப்போது அது அப்படித்தான் உள்ளது. உயிரிழப்புகள் கூட அதிகரித்துள்ளன. நோய்த்தொற்றின் வீதத்தைக் குறிக்கும் விகிதமும் தேசிய சராசரியை விட அதிகமாக உள்ளது. இந்நிலையில் மத்திய அரசின் வழிகாட்டுதல்களின்படி சமூக இடைவெளி மற்றும் வீட்டு தனிமைப்படுத்தலை கேரள அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்ட்டுள்ளது. தற்போது, கேரளாவில் செயலில் உள்ள கோவிட் கேஸ்களில் 95 சதவீதம் வீட்டு தனிமைப்படுத்தலில் உள்ளன.

கேரளா கொரோனா

கேரளா கொரோனா

கேரளாவில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களிடையே கோவிட்-பொருத்தமான நடத்தை பின்பற்றப்படாதது குறித்தும் மத்திய சுகாதார செயலாளர் கவலை தெரிவித்தார். சில கோவிட் நோயாளிகள் தனிமைப்படுத்தும் மையங்களில் சேர்ந்து கொள்ள மறுப்பது குறித்தும் பகார்கள் எழுந்துள்ளது. கேரளாவில் இன்று ஒரே நாளில் 22000 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 131 பேர் உயிரிழந்துள்ளனர்.

English summary
Kerala reports 22,000 new covid cases, 131 deaths. Kerala turns out to be “Covid-19 Super-Spreader” as state records more than 50% of total new cases in the country. worried Centre intervenes
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X