திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விலகிய மர்மம்.. கேரள யானை கொல்லப்பட்டது எப்படி?.. விசாரணையில் அம்பலம்.. குற்றவாளி வாக்குமூலம்!

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரளாவில் வெடிமருந்து வைத்து யானை கொலை செய்யப்பட வழக்கில் கைது செய்யப்பட்ட வில்சன், யானை எப்படி பலியானது என்பது தொடர்பாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

Recommended Video

    கேரளா கர்ப்பிணி யானையை கொன்றவர்களுக்கு தண்டனை

    கேரளாவில் கடந்த 27ம் தேதி கர்ப்பிணி யானை ஒன்று வெடி வைத்து கொலை செய்யப்பட்டது. கேரளாவில் மன்னார்காடு பகுதியில் இந்த சம்பவம் நடந்தது. அங்கு பாலக்காடு மாவட்டத்திற்கு கீழே வரும் காட்டுப்பகுதியில் உள்ள வெள்ளியார் நதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. யானை எதை சாப்பிட்டு பலியானது என்பது மட்டும் மர்மமாக இருந்தது.

    இன்று காலைதான் யானை வெடி வைத்து கொலை செய்யப்பட வழக்கில் முதல் நபர் கைது செய்யப்பட்டார். இவர் பெயர் வில்சன். வெள்ளியார் பகுதியில் இவர் விவசாய பணிகளை செய்து வருகிறார்.

    மதம் பிடிக்கவில்லை.. யாரையும் தாக்கவில்லை.. உயிர் வேதனையிலும் அமைதி காத்த யானை.. ஏன்? பின்னணி! மதம் பிடிக்கவில்லை.. யாரையும் தாக்கவில்லை.. உயிர் வேதனையிலும் அமைதி காத்த யானை.. ஏன்? பின்னணி!

    என்ன விசாரணை

    என்ன விசாரணை

    இந்த நிலையில் குற்றவாளி வில்சனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல உண்மைகள் வெளியே வந்து இருக்கிறது. அதன்படி இந்த யானையை அவர்கள் யாரும் திட்டமிட்டு கொலை செய்யவில்லை. இது வயலில் வைத்த பொறி என்று விசாரணையில் கூறி உள்ளனர். வில்சன் வேலை பார்க்கும் வயலில் பன்றி தொல்லை அதிகமாக இருந்து உள்ளது. வயலில் பயிர்களை பன்றிகள் நாசம் செய்துள்ளது.

    பன்றிகள் பொறி

    பன்றிகள் பொறி

    இந்த நிலையில் பன்றிகளை கொல்வதற்காக வில்சன் பொறி அமைத்து இருக்கிறார். வில்சன் உடன் சேர்த்து இரண்டு பேர் பொறி அமைத்து இருக்கிறார்கள். இவர்கள் அன்னாசி பழத்தில் பொறியை வைக்கவில்லை. மாறாக தேங்காயில் பொறியை வைத்து இருக்கிறார்கள். தேங்காய் உள்ளே வெடியை வைத்து, அதை பன்றி சாப்பிட்டதும் வெடிப்பது போல பொறி வைத்து இருக்கிறார்கள்.

    யானை மாட்டியது

    யானை மாட்டியது

    பல இடங்களில் இந்த முறை கடைபிடிக்கப்படும். அப்படித்தான் இந்த பொறியை வைத்தோம். பன்றிக்கு வைத்த பொறியில் யானை சிக்கிவிட்டது என்று அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். திட்டமிட்டு எதையும் செய்யவில்லை என்றுள்ளனர். இந்த வழக்கில் வில்சன் கூறிய இன்னும் இரண்டு பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இன்னும் இவர்கள் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    சந்தேகம்

    சந்தேகம்

    முன்னதாக யானைக்கு நேற்று போஸ்ட்மார்ட்டம் செய்யப்பட்டது. அப்போது யானையின் வாயில் வெடி மருந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதே சமயம் வயிற்றில் எங்கும் அன்னாசி பழம் இல்லை. அன்னாசி பழத்தின் சிறு துகளை கூட கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் வேறு எப்படி யானை இறந்தது என்று சந்தேகம் வந்தது. தற்போது அதற்கான விடை கிடைத்துள்ளது.

    English summary
    Kerala: The accused in elephant murder case in Palakkad reveals the whole event to police.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X