திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குடிமகன்களை உற்சாகப்படுத்தும் செய்தி.. லாக் டவுனிலும் இவர்களுககு மட்டும் மதுபானம்.. கேரளா முடிவு

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரளாவில் குடிமகன்களை உற்சாகப்படுத்தும் செய்தி வந்துள்ளது. கொரோனா வைரஸ் படுவேகமாக பரவி வருவதை கருத்தில் கொண்டு நாடு தழுவிய அளவில் லாக் டவுன் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சூழல் மருத்துவர்களின் பரிந்துரைப்படி குடிக்காமல் இருக்க முடியாது என்ற மோசமான நிலையில் உள்ள குடிகாரர்களுக்கு குறைந்தபட்ச அளவு மதுபானங்களை வழங்க கேரள அரசு திட்டமிட்டுள்ளது.

Recommended Video

    பெரிய டீம்... கேரளாவில் அசத்தும் சைலஜா டீச்சர்

    கொரோனா வைரஸ் தொற்று இந்தியா முழுவதும் வேகமாக அதிகரித்து வருகிறது இதுவரை சுமார் 1000 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் மக்களிடையே சமூக இடைவெளியை ஏற்பட்டால் மட்டும் கொரோன வைரஸ் பரவுவது குறையும் என மருத்துவர்கள் அறிவித்தனர்.

    இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்படுவதை தடுக்க நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி நள்ளிரவு தொடங்கி வரும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவு காரணமாக அத்தியாவசிய கடைகளால் பால், மருந்து, உணவு, இறைச்சி கடைகள், காய்கறி கடைகள் மளிகை கடைகள், வங்கிகள், மருத்துவமனைகளுக்கு மட்டும் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    பார்கள் மூடல்

    பார்கள் மூடல்

    பேருந்துகள் இயங்க, ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் இயங்க, மதுக்கடைகள், பார்கள், நட்சத்திர விடுதிகள், சுற்றுலாத்தளங்கள், பெரிய வணிக நிறுவனங்கள், பெரியஹோட்டல்கள், மால்கள், தியேட்டர்கள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து வணிக நிறுவனங்களுக்கும் இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு நடவடிக்கை காலத்தில் மக்கள் வீடுகளுக்கு உள்ளேயே இருக்க வேண்டும். யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

    21 நாட்களுக்கு மூடல்

    21 நாட்களுக்கு மூடல்

    இந்த 21 நாட்கள் தடையால் கேரளா உள்பட நாடு முழுதும் அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் மது அருந்த முடியாத காரணத்தால் கேரளாவில் 5பேர் தற்கொலை செய்து கொண்டனர். இதையடுத்து மது அருந்த முடியாமல் பித்து பிடித்து போய் தற்கொலை மனநிலையில் இருந்த 25க்கும் மேற்பட்டோர் மதுபோதை மறுவாழ்வு மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    பினராயி விஜயன் தகவல்

    பினராயி விஜயன் தகவல்

    இது தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் போது, முதலமைச்சர் பினராயி விஜயன் பேசுகையில், தற்கொலைகளைத் தவிர்ப்பதற்காக குறைந்தபட்ச மதுபானங்களை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. லாக்டவுன் காலத்தில் அதிக குடிகாரர்களுக்கு மதுபானம் வழங்குவதற்கான வழிமுறைகளை பரிந்துரைக்குமாறு மாநில அரசு கலால் துறைக்கு அறிவுறுத்தியுள்ளது" என்று கூறினார்.

    45 சதவீதம் பேர் பாதிப்பு

    45 சதவீதம் பேர் பாதிப்பு

    கேரளாவில் சுமார் 16 லட்சம் குடிகாரர்கள் உள்ளனர், அவர்கள் நாள் தவறாமல் மது அருந்துகிறார்கள். அவர்களில், 45 சதவீதம் பேர் மிக மோசமாக குடிநோயால் பாதிக்கப்பட்ட குடிகாரர்கள் ஆவர். முன்னதாக, மாநிலத்தில் உள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் மூட வேண்டும் என்று எதிர்க்கட்சியும் இந்திய மருத்துவ சங்கமும் கோரியபோது, அரசிடம் மனநல மருத்துவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குடிநோய் பிரச்சனை குறித்து எச்சரித்திருந்தனர்.

    English summary
    Covid-19 lockdown: Kerala to supply heavy alcoholics as per doctor's prescription during the nationwide lockdown
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X