திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பீஃப் கறியை வைத்து கேரளா சுற்றுலாத்துறை செய்த விளம்பரம்.. இணையம் முழுக்க வைரல்.. சர்ச்சை!

கேரளா அரசின் அதிகாரப்பூர்வ சுற்றுலாத்துறை பக்கமான கேரளா டூரிசம் பக்கம் மாட்டுக்கறி வறுவலை வைத்து கொடுத்த விளம்பரம் இணையம் முழுக்க வைரலாகி உள்ளது.

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரளா அரசின் அதிகாரப்பூர்வ சுற்றுலாத்துறை பக்கமான கேரளா டூரிசம் பக்கம் மாட்டுக்கறி வறுவலை வைத்து கொடுத்த விளம்பரம் இணையம் முழுக்க வைரலாகி உள்ளது.

இந்தியாவில் கேரளாவில்தான் அதிகமாக மாட்டுக்கறி உணவுகள் கிடைக்கும். முக்கியமாக கேரள மக்கள் தங்கள் உணவில் அதிகமாக மாட்டுக்கறி உணவுகளை உண்பார்கள்.

இந்த நிலையில் கேரளா அரசின் அதிகாரப்பூர்வ சுற்றுலாத்துறை பக்கமான கேரளா டூரிசம் பக்கம் மாட்டுக்கறி வறுவல் குறித்து விளம்பரம் ஒன்றை செய்தது. கேரளாவில் நல்ல மாட்டுக்கறி உணவுகள் கிடைக்கும் என்று இந்த விளம்பரத்தில் கூறப்பட்டு இருந்தது.

ரேஷ்.. என்னன்னு தெரியல.. வாழ பிடிக்கல.. நான் இருந்தும் பிரயோஜனம் இல்லை.. வைரலாகும் ஜெயஸ்ரீ ஆடியோ ரேஷ்.. என்னன்னு தெரியல.. வாழ பிடிக்கல.. நான் இருந்தும் பிரயோஜனம் இல்லை.. வைரலாகும் ஜெயஸ்ரீ ஆடியோ

என்ன விளம்பரம்

அந்த விளம்பரத்தில், தேங்காயுடன் செய்யபட்ட மாட்டுக்கறி. மெதுவாக வறுத்து, நல்ல மனதுடன் தேங்காய் சேர்த்து, கருவேப்பிலை தூவி செய்யப்பட்டது. இதுதான் பீப் உலர்த்தியது செய்யும் முறை. கார உணவுகளின் தாயகமாக கேரளாவை பூர்வீகமாக கொண்டது, என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

என்ன வைரல்

மாட்டுக்கறியை வைத்து கேரளா அரசு கொடுத்த இந்த விளம்பரம் இணையம் முழுக்க வைரலாகி உள்ளது. இந்த விளம்பரத்திற்கு எதிராக பாஜக ஆதரவாளர்கள், சைவம் சாப்பிடும் மக்கள் கடும் எதிர்த்து தெரிவித்துள்ளனர். கேரளா அரசு எங்கள்உணர்வுகளை மதிக்கவில்லை, என்று பலரும் டிவிட்டரில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

சுற்றுலாத்துறை புறக்கணிப்பு

இதனால் கேரளாவின் சுற்றுலாத்துறையை புறக்கணிக்க வேண்டும் என்று சிலர் கோரிக்கை வைக்க தொடங்கி உள்ளனர். இந்துக்கள் யாரும் கேரளாவிற்கு சுற்றுலா செல்ல கூடாது என்று சிலர் டிவிட் செய்து வருகிறார்கள்.

கேரளா மக்கள்

அதே சமயம் கேரள மக்கள் இதற்கு ஆதரவாக டிவிட் செய்து வருகிறார்கள்.உணவு தேர்வு என்பது தனிமனித சுதந்திரம். இதில் தவறு எதுவும் கிடையாது. மக்கள் எல்லோரும் எல்லோருடைய உணவு தேர்வையும் மதிக்க வேண்டும் என்று, அவரால் டிவிட் செய்து வருகிறார்கள்.

English summary
Kerala tourism's post on Beef Fry goes viral in social media, became controversial too.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X