• search
திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

என் மேல அப்படி ஒரு லவ்.. எனக்காகவே வந்து சேர்ந்த சஹானா.. ஆச்சரியம் போகவில்லை.. மகிழ்ச்சியில் பிரணவ்

|

திருவனந்தபுரம்: "சொல்லி பார்த்தேன், திட்டி பார்த்தேன், என் ஃபிரண்ட்ஸ்களை வெச்சி பேசி பார்த்தேன். ம்ஹூம்.. அவள் கேக்க தயாரா இல்லை.. என் மேல அப்படி ஒரு வெறித்தனமான காதல்.. அவளுடைய காதலின் ஆழத்தை பார்த்து நான் மிரண்டு போனதுதான் மிச்சம்..." என்று ஆச்சரியம் விலகாமல் தன் மனைவி பற்றி பூரித்து சொல்கிறார் கேரள இளைஞர் பிரணவ்!!

  Wheel Chair தான் வாழ்க்கை | சொன்னதை செய்துகாட்டிய பெண் | Pranav Sahana

  கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ளது இருஞ்ஞால குடா பகுதி.. இங்கு வசித்து வருபவர் பிரணவ்.. 27 வயது இளைஞர்.. விபத்து ஒன்றில் சிக்கி விட்டார்.. அதனால் அவரால் எழுந்து நடக்கவே முடியாத துர்சூழல் உருவானது.. இறுதியில் வீல்சேர்தான் வாழ்க்கை என்று முடிவாகிவிட்டது!

  கால்கள் இல்லையே, உடல் செயலிழந்துவிட்டதே என்ற கவலையை அந்த வீல்சேர்தான் போக்க ஆரம்பித்தது.. எங்கெல்லாம் போக வேண்டும் என்று ஆசைப்படுகிறாரோ, உடனே கிளப்பி விடுவார் தன்னுடைய ரதத்தை... அப்படியே சமூகசேவையிலும் இறங்கிவிட்டார் பிரணவ்!

  கட்சியில் பதவி

  கட்சியில் பதவி

  ஒரு பெரிய அரசியல் கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் மிக முக்கியமான பதவியிலும் இருக்கிறார்... இதற்கு அவருக்கு உதவியாக இருப்பது சோஷியல் மீடியாதான்... தன்னை நன்றாக இதில் புதைத்து கொண்டார்.. ஊனம் என்பதெல்லாம் ஒரு விஷயமே இல்லை என்று பல வீடியோக்களை பேசி வெளியிட்டார்... இவரது எல்லா வீடியோவும் படுவைரலாக பரவியது.. அப்போதுதான் பிரணவ் வாழ்க்கையில் தென்றலென நுழைந்தார் சஹானா!

  மனசு மாறியது

  மனசு மாறியது

  சஹானாவுக்கு சொந்த ஊர் திருவனந்தபுரம்... பிரணப் பதிவிட்ட வீடியோக்கள்தான் சஹானா மனசை மாற்ற தொடங்கியது.. முதல் படி ஃபேஸ்புக்கில் ரிக்வெஸ்ட் தந்தார்.. இதை கவனித்த பிரணவ் அதை ஏற்கவே இல்லை.. ஆனால் சஹானா விடவில்லையே.. பிரணவ்வின் செல்போன் நம்பரை தேடி பிடித்து மெசேஜ் அனுப்பினார்.

  சுற்றி வந்த சஹானா

  சுற்றி வந்த சஹானா

  அப்போதுதான் பிரணவ் வியந்து போனார்.. யார் இவர்? தன்னையே சுற்றி சுற்றி வருகிறாரே என்ற கேள்வியுடன் தன் நட்பை தொடங்கினார்.. நல்ல நட்பு + சரியான புரிதல் + ஆழ்ந்த அன்பு.. இது இருந்தாலே போதுமே.. தூய காதல் எப்படியாவது பிறந்துவிடும்.. அப்படிதான் சஹானாவுக்கும்.. தன் காதலை ஒருநாள் பிரணவ்-விடம் எடுத்து சொல்ல.. எடுத்த எடுப்பிலேயே அதை நிராகரித்தார் பிரணவ்.. காரணம் தன் நிலை... ஆனால் சஹானாவின் பிடிவாதத்துக்கு முன்னால் பிரணவ்-வின் எந்த பதிலடியும் செல்லுபடியாகவில்லை.

  திட்டியும் மாறலை

  திட்டியும் மாறலை

  ஏன் அவள் இப்படி இருக்கிறாள் என்றே எனக்கு தெரியல.. என்னை அவள் நேரிலேயே பார்க்கவில்லை.. வெறும் ஃபேஸ்புக், வாட்ஸ்அப் பழக்கம்தான்.. ஆனாலும் காதல் எப்படி வந்தது என்றே தெரியவில்லை.. பலமுறை என் நிலையை எடுத்து சொன்னேன்.. சொன்னா நம்ப மாட்டீங்க, எனக்கு வேறு ஒரு பெண்ணுடன் காதல் இருப்பதாக என் நண்பர்களை வைத்து சஹானாவிடம் சொல்ல சொன்னேன்.. ஒரு துளிகூட அதை அவள் காதில் வாங்கிக்கலையே.. கெஞ்சி பார்த்தேன்.. திட்டி பார்த்தேன்.. ம்ஹூம்.

  நேரில் வந்த சஹானா

  நேரில் வந்த சஹானா

  கடைசியில ஒருநாள் நேரில் கிளம்பி வந்துவிட்டாள்.. அப்பாடா.. என் நிலைமையை நேரில் பார்த்ததும் எப்படியோ மனசை மாற்றி கொள்வாள் என நினைத்தேன்.. அப்போதும் நான்தான் ஏமாந்தேன்.. பிறகு என் வீட்டில் உள்ளவர்களை வைத்து பேச வைத்தேன்.. அவர்களுக்கும் பதிலடி தயாராக இருந்தது.. என்ன செய்தாலும் அவள் முடிவு மாறாது என்று மட்டும் எனக்கு தெளிவாக புரிந்துவிட்டது.. அவளின் காதல் ஆழம்.. மறுநாளே கோயிலில் எங்களுக்கு கல்யாணம் வரை வந்துவிட்டது.

  கையில் வெறும் 500 ரூபாயுடன்

  கையில் வெறும் 500 ரூபாயுடன்

  என்னை நேரில் சந்திக்க வெறும் 500 ரூபாய் எடுத்து கொண்டு வந்தவள்.. என் நிலையை பார்த்ததும் கட்டினால் என்னைதான் கட்டணும் என்ற முடிவுக்கு வந்துவிட்டாள்" என்று ஆச்சரியம் விலகாமல் சொல்கிறார் பிரணவ்.. இதைபற்றி புதுமணப்பெண் சஹானா சொல்லும்போது, "அவர் வீடியோதான் முக்கியமான காரணம்.. பேசி பழகும்போதுதான் அவர் மனசு எனக்கு ரொம்ப பிடிச்சது.. வீட்டில் சொன்னேன்.. வழக்கம்போல் எதிர்ப்பு... காதல்ன்னு வந்துட்டால், எல்லாத்தையும் சமாளிச்சுதானே ஆகணும்.. அதான் கிளம்பி வந்துட்டேன்"... என்கிறார் ஆழ்ந்த நம்பிக்கை பிடிப்புடன்!

  மனம்தான் காதல்

  மனம்தான் காதல்

  "ஊனம் உடம்புக்கே அன்றி காதலுக்கு அல்ல", "காதல் உடல் சார்ந்தது இல்லை, மனம் சான்றது".. என்று காதலின் ஆகப்பெரும் வாக்கியங்களை எவ்வளவோ நாம் சொல்லி கொண்டே போகலாம்.. இது அத்தனைக்கும் பொருத்தமானவர்கள் நாங்கள்தான் என்று பறைசாற்றி உள்ளனர்கள் பிரணவ் - சஹானா தம்பதியினர்... இந்த காதல் சிறக்கட்டும்.. அதன் உறவு தழைக்கட்டும்... அது தழைக்கத் தழைக்க, இன, பாகுபாடுகள் சருகாகி உதிரட்டும்.. புது மண தம்பதிக்கு நம் வாழ்த்துக்கள்!!

  English summary
  kerala couples pranav and shahana wedding becomes viral on socials now
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X