திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கேரளாவில் 2-ம் கட்ட உள்ளாட்சித் தேர்தல்- முதல் 2 மணிநேரங்களில் 9% வாக்கு பதிவு

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரளா உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் 2-ம் கட்ட வாக்குப் பதிவு காலை 7 மணி முதல் நடைபெற்று வருகிறது. முதல் 2 மணிநேரங்களில் 9% வாக்குகள் பதிவாகி உள்ளன.

கேரளாவில் கொரோனா பரவல் அதிகமாக உள்ள நிலையிலும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் 3 கட்டங்களாக நடத்தபட்டு வருகிறது. முதல் கட்ட வாக்குப் பதிவு நேற்று முன்தினம் நடைபெற்றது. அதில் 61% வாக்குகள் பதிவாகின.

Kerala: Voting underway during the 2nd phase of local body elections

இதனைத் தொடர்ந்து கோட்டயம், எர்ணாகுளம், திரிசூர், பாலக்காடு மற்றும் வயநாடு ஆகிய 5 மாவட்டங்களின் உள்ளாட்சி அமைப்புகளில் 2-ம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் ஆளும் இடது முன்னணி, காங்கிரஸின் ஐக்கிய ஜனநாயக முன்னணி மற்றும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி என மும்முனை போட்டி நிலவுகிறது.

Kerala: Voting underway during the 2nd phase of local body elections

5 மாவட்டங்களில் மொத்தம் 8,57,208 பேர் வாக்காளர்கள். மொத்தம் 451 உள்ளாட்சி அமைப்புகளின் 8116 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதில் 28,142 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

Kerala: Voting underway during the 2nd phase of local body elections

இன்று காலை முதலே வாக்காளர்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறாத வகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Kerala: Voting underway during the 2nd phase of local body elections
English summary
Second Phase Voting underway of local body elections in Kerala.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X