திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முதலாளியிடம் கொடுத்த வாக்கை நிறைவேற்றிய கோச்சானியன்.. 60 வயதை கடந்து லட்சுமியை கரம் பிடித்த தருணம்

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரளா மாநிலத்தில் முதியோர் இல்லத்தில் இருந்த 60 வயதை கடந்த இருவர் திருமணம் செய்து கொண்ட நெகிழிச்சியான சம்பவம் நடந்தது.

திருச்சூர் மாவட்டத்தில் உள்ள ராமவர்மபுரத்தில் முதியோர் இல்லம் உள்ளது. இது அரசால் நடத்தப்படுகிறது. இங்கு 50-க்கும் மேற்பட்டோர் தங்கியுள்ளனர்.

அவர்களுள் கோச்சானியன் (67), லட்சுமியம்மாள் (66) ஆகியோர் தங்கியிருந்தனர். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதையடுத்து இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக செய்யப்பட்டு தற்போது திருமணம் நடந்துமுடிந்துவிட்டது.

கோச்சானியன்

கோச்சானியன்

சமையல் தொழில் செய்து வந்த லட்சுமியம்மாளின் கணவர் 21 ஆண்டுகளுக்கு முன்பு காலமாகிவிட்டார். அவரது உதவியாளர் கோச்சானியனிடம் தனது மனைவியை பார்த்துக் கொள்ளுமாறு கூறியிருந்தார்.

பார்க்க வராத கோச்சானியன்

பார்க்க வராத கோச்சானியன்

அதன் பின்னர் லட்சுமியம்மாள் தனியாக வசித்து வந்தார். வீட்டை விற்ற லட்சுமியம்மாள் உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டார். அவ்வப்போது கோச்சானியன் சில ஆண்டுகளாக லட்சுமியம்மாளை பார்க்க வரவேயில்லை.

திருமணம்

திருமணம்

இதையடுத்து ஒரு முதியோர் இல்லத்திற்கு சென்ற லட்சுமியம்மாள் அங்குதான் கோச்சானியனை பார்த்தார். பின்னர் மீதமுள்ள காலத்தை கணவன்- மனைவியாக வாழ முடிவு செய்தனர். இதையடுத்து அவர்களது திருமணம் நடந்துமுடிந்தது.

பங்கேற்பு

முதியோர் இல்லத்தின் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் திருமண ஏற்பாடுகளை செய்தார். அரசு முதியோர் இல்லம் என்பதால் இந்த திருமணத்தில் அமைச்சர்கள், எம்பிக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

English summary
67-year-old Kochaniyan Menon and a 65-year-old Lakshmi Ammal, tied the knot yesterday at a government-run old-age home in Ramavarmapuram in Thrissur district.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X