திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மலையாளத்தில் அறிவித்திருந்தால்.. இத்தனை பேர் பலியாகி இருக்க மாட்டார்கள்.. கோழிக்கோடு பயணிகள் பகீர்!

Google Oneindia Tamil News

கோழிக்கோடு: கோழிக்கோடு விமான விபத்தில் விமான குழு மலையாளத்தில் அறிவிப்பு வெளியிட்டு இருந்தால் இத்தனை பேர் பலியாகி இருக்க மாட்டார்கள் என்று விமான விபத்தில் உயிர் தப்பிய பயணிகள் தெரிவித்துள்ளனர்.

கோழிக்கோடு விமான விபத்தும், அது தொடர்பாக வெளியாகும் செய்திகளும் இதயத்தை உருக்கும் வகையில் உள்ளது. இந்த விபத்தில் இதுவரை 18 பேர் பலியாகி உள்ளனர். துபாயில் இருந்து வந்த விமானம் தரையிறங்கும் போது ஓடுபாதையில் வழுக்கி ஓடி , இரண்டாக பிளந்து விபத்திற்கு உள்ளாகி உள்ளது.

இந்த விமான விபத்தில் விமானத்தின் பைலட் தீபக் வசந்த் சாத்தே மரணம் அடைந்தார். அதேபோல் விமானத்தின் துணை விமானி அகிலேஷ் சர்மாவும் மரணம் அடைந்தார்.

வழக்கம் போல் அறிவிப்பு வெளியிட்ட பைலட்.. விமான விபத்துக்கு ஒரு சில வினாடிக்கு முன் நடந்தது என்ன? வழக்கம் போல் அறிவிப்பு வெளியிட்ட பைலட்.. விமான விபத்துக்கு ஒரு சில வினாடிக்கு முன் நடந்தது என்ன?

என்ன தகவல்

என்ன தகவல்

இந்த விபத்து குறித்து அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் தற்போது வெளிவர தொடங்கி உள்ளது. அதன்படி ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் முதலில் கோழிக்கோடு விமான நிலையம் அருகே வந்துள்ளது. ஆனால் ரன் வே சரியாக தெரியவில்லை. இதையடுத்து விமான பைலட்கள் கோழிக்கோடு விமான நிலைய போக்குவரத்து அதிகாரியிடம் பேசி உள்ளனர்.

விபத்து

விபத்து

அதன்பின் ஓடுபாதை 10ல் இறக்கும்படி கூறப்பட்டுள்ளது. இதையடுத்து ஒருமுறை அந்த ஓடுபாதை மேலே சுற்றி பார்த்துவிட்டு, விமானத்தை யூ டர்ன் எடுத்து இரண்டாவது முறை தரையிறக்க முயன்று உள்ளனர். 2800 மீட்டர் நீளம் கொண்ட ஓடுபாதையில் 1000 மீட்டருக்கு பிறகுதான் அந்த விமானத்தை தரையிறக்கி உள்ளனர். இதுதான் விபத்துக்கு காரணமாக மாறியுள்ளது.

அதிர்ச்சி என்ன

அதிர்ச்சி என்ன

இது தொடர்பாக அந்த விமானத்தில் பயணித்த பயணிகள் அதிர்ச்சி அளிக்கும் விஷயங்களை குறிப்பிட்டு உள்ளனர். அதன்படி விமானம் தரையிறங்கும் போதே பெரிய சத்தம் கேட்டது. விமானம் மோசமாக குலுங்கியது. பொதுவாக விமானம் தரையிறங்கும் போது சத்தம் கேட்பது வழக்கம். ஆனால் அன்று கேட்ட சத்தம் வித்தியாசமாக இருந்தது.

வேகமாக இறங்கியது

வேகமாக இறங்கியது

விமானம் மிக மிக வேகமாக தரையிறங்கியது. எதோ வெடித்தது போல சத்தம் கேட்டது. அப்போதுதான் சரியாக மேலே இருந்த லக்கேஜ் எல்லாம் எங்கள் மீது விழுந்தது. அதன்பின் பெரிதாக எங்கேயோ மோதுவது போல சத்தம் கேட்டது. விமானி ஆங்கிலத்திலும், இந்தியிலும் பேசினார்.அவர் எங்களை பாதுகாப்பாக சீட்களை பிடித்துக் கொள்ளும்படியும், பெல்ட் அணியும் படியும் கூறினார்.

மலையாளம்

மலையாளம்

ஆனால் அங்கிருந்த வயதானவர்கள், படிக்காதவர்களுக்கு இது புரியவில்லை. அவர் ஒருவேளை மலையாளத்தில் பேசி இருந்தால் இன்னும் பல உயிர்களை காப்பாற்றி இருக்கலாம். அவர் சொன்னது புரியாமல், பலர் அதிர்ச்சியில் எழுந்து நிற்க தொடங்கினார்கள். இவர்கள்தான் பலியாகி இருக்க வாய்ப்புள்ளது.

மறக்க போகிறோம்

மறக்க போகிறோம்

விமானத்தின் முன்பக்கம் இருந்தவர்கள்தான் இதில் பலியாகி உள்ளனர். எங்களுக்கு இனியும் விமானத்தில் செல்லும் அளவிற்கு தைரியம் இல்லை. இந்த நினைவுகளை நாங்கள் மறக்க விரும்புகிறோம். இதே நினைவோடு இனி எங்களால் வெளிநாட்டுக்கு செல்ல முடியாது என்று குறிப்பிட்டுள்ளனர்.

English summary
Kozhikode flight accident: If the made announcement in Malayalam, many would have saved says, passengers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X