"அவளுக்காக".. இந்தியாவிலேயே முதல் சானிடரி நாப்கின் இல்லாத கிராமம் "கும்பளாங்கி".. எகிறும் பெருமை
திருவனந்தபுரம்: இந்தியாவிலேயே முதல் சானிடரி நாப்கின் இல்லாத கிராமம் என்ற பெருமையை கேரளாவில் உள்ள கும்பளாங்கி என்ற கிராமம் பெற போகிறது..!
மாதவிடாய் காலங்களில் பயன்படுத்தப்படும் நாப்கின் பற்றி மக்களிடம் விழிப்புணர்வு பரவ ஆரம்பித்ததன் பலன் இப்போது மெல்ல தெரிய ஆரம்பித்திருக்கிறது..
மாதவிடாய் என்பது, பெண்களின் வாழ்க்கையில் நடக்கக்கூடிய இயல்பான ஒன்று என்பதையும் மக்கள் புரிந்துகொள்ள துவங்கிவிட்டனர்..
தை மாத ராசி பலன் 2022: கடக ராசிக்காரர்களுக்கு கல்யாண வாழ்க்கையில் குதூகலம்

வெற்றி
இதை மக்களிடம் அறிமுகப்படுத்தி, அதற்கான சிறப்பு திட்டங்களையும் அறிவித்து, இன்று வெற்றியை பெற்று வருகிறது கேரள மாநிலம்.. இந்தியாவிலேயே முதல் முறையாகக் கேரளாவில்தான், அனைத்து பள்ளிகளிலும் நாப்கின் வழங்கும் எந்திரம் கட்டாயமாக்கப்பட்டு சட்டமாக இயற்றப்பட்டது.. அதுமட்டுமல்லாமல், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் நாப்கின் வழங்கும் எந்திரம் இனி கட்டாயமாக இருக்க வேண்டும் என்றும், ரசாயனம் அதிகம் இல்லாத, எளிதில் அப்புறப்படுத்தும் விதமான நாப்கின்கள் பெண் குழந்தைகளுக்கு வழங்கப்படும் என்றும் அம்மாநிலம் ஒரு அதிரடி அறிவிப்பை முன்பு வெளியிட்டிருந்தது..

எந்திரங்கள்
மேலும், கேரளாவின் அத்தனை அரசு பள்ளிகளிலும் இதை அறிமுகப்படுத்துவதற்காகவே அரசு நிதியில் இருந்து 30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியதும் நினைவுகூரத்தக்கது... இதற்கு பிறகு, பெண்கள் பணியாற்றும் அனைத்து அரசு அலுவலங்களிலும் நாப்கின் வழங்கும் எந்திரங்களையும், நாப்கின்களை எரிக்கும் எந்திரங்களையும் நிறுவ கேரள அரசு இன்னொரு உத்தரவை பிறப்பித்தது.. இப்படி, மாதவிடாய் காலத்தில் பெண்கள் படும் சிரமங்களை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதை மற்ற மாநிலங்களே வியந்து பார்த்தன.

முதல் கிராமம்
இப்போது இதன் அடுத்தக்கட்டத்திற்கு கேரளா சென்றுள்ளது.. இந்தியாவிலேயே முதல் சானிட்டரி நாப்கின் இல்லாத கும்பளாங்கி கிராமம் உருவாக போகிறது.. 16 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு இந்த மாதவிடாய் கோப்பைகள் (menstrual cups) வழங்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது... அந்த கிராமத்தில் மொத்தம் 5,000 மாதவிடாய் கப்கள் விநியோகம் செய்ய உள்ளனர்.

மென்சுரல் கப்
அதாவது நாப்கின்களுக்கு பதிலாக பயன்படுத்தப்படுவதுதான் இந்த மாதவிடாய் கப்கள், அல்லது மென்சுரல் கப் என்பார்கள்.. ரசாயனம் கொண்ட நாப்கின்களை பயன்படுத்தும் பெண்களுக்கு அதை நீண்ட நேரம் அணியும் போது கிருமித்தொற்று, அரிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.. சில பெண்களுக்கு சிறுநீரக தொற்றும் ஏற்படும்.. அதே நேரம் சுகாதாரமற்ற நாப்கின் பயன்பாட்டால் கருப்பை வாய் புற்றுநோய் ஏற்படும் காரணமாகிவிடும்.. மேலும், நாப்கின் மக்குவதற்கு ஆயிரம் வருஷம்கூட ஆகலாம் என்கிறார்கள்.. அதனால்தான் நாப்கினுக்கு பதிலாக மென்சுரல் கப் குறித்த விழிப்புணர்வு கேரளாவில் துவங்கி உள்ளது.

கேரள கவர்னர்
கும்பளாங்கியை முன்மாதிரி கிராமமாக கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் இன்று அறிவிக்க உள்ளார்.. எர்ணாகுளம் தொகுதியில் மேற்கொள்ளப்படும் தனித்துவமான பிரச்சாரங்களில் இது ஒரு சாதனையாகவே பார்க்கப்படுகிறது.. 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பெண்களுக்கு மாதவிடாய் கோப்பைகள் அந்த கிராமத்தில் விநியோகிக்க திட்டமிட்டுள்ளது.. மொத்தம் 5000 மாதவிடாய் கோப்பைகள் விநியோகிக்கப்பட உள்ளது.

எர்ணாகுளம்
கிராம திட்டம் பிரதான் மந்திரி சன்சத் ஆதர்ஷ் கிராம் யோஜனா (SAGY) மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ளது இந்த கும்பளாங்கி கிராமம்.. அதாவது இது தீவு சுற்றுலா இடமாகும்.. இந்தியாவின் முதல் முன்மாதிரி சுற்றுலா கிராமம் என்ற பெயரையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

சுற்றுலா மையம்
இது தொடர்பாக எம்பி ஹிபி இடன் சொல்லும்போது, எர்ணாகுளம் எம்பி தொகுதியில் அமல்படுத்தப்பட்டுள்ள "Avalkayi" (அவளுக்காக) என்ற திட்டத்தின் அங்கமாக இது செயல்படுத்தப்படுகிறது. இது தவிர Pradhan Mantri Sansad Adarsh Gram Yojana (SAGY) திட்டத்தின் கீழ் கும்பளாங்கி, இந்தியாவின் மாதிரி கிராமமாகவும் அறிவிக்கப்பட இருக்கிறது... கொச்சியின் முக்கிய சுற்றுலா மையமாக விளங்கும் கும்பளாங்கியில் விரைவில் புதிய சுற்றுலா தகவல் மையம் ஒன்றும் அமைக்கப்படும்" என்றும் கூறினார்.