திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சதாசிவம் இருந்தது போதும்.. இவரை அனுப்புங்கள்.. கேரளாவிற்காக அமித் ஷா களமிறக்கும் புதிய ஆள்!

கேரளாவை கட்டுபடுத்தும் நோக்கத்தில் அங்கு விரைவில் புதிய கவர்னர் ஒருவர் நியமிக்கப்பட உள்ளார் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Kummanam Rajasekharan may be elected as the new Kerala Governor

    திருவனந்தபுரம்: கேரளாவை கட்டுபடுத்தும் நோக்கத்தில் அங்கு விரைவில் புதிய கவர்னர் ஒருவர் நியமிக்கப்பட உள்ளார் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

    கேரளாவில் கவர்னராக முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் நியமிக்கப்பட்ட போது அது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அதிலும் அவர் தமிழர் என்பதால் கேரளாவில் சிலர் அவரின் நியமனத்தை எதிர்த்தனர்.

    இவரின் நியமனத்திற்கு பின் நிறைய சர்ச்சைகள் இருப்பதாக அப்போது பேசப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. தற்போது அங்கு புதிய கவர்னர் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கிறார்கள்.

    என்ன

    என்ன

    சதாசிவம் கவர்னராக நியமிக்கப்பட்டதற்கு பின் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அழுத்தமும் இருக்கிறது என்று கேரளாவில் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் மலையாளிகள் பயந்த அளவிற்கு சதாசிவம் மூலம் அவர்களின் ஆட்சிக்கு எந்த பிரச்சனையும் வரவில்லை. சபரிமலை பிரச்சனை வந்த போது கூட சதாசிவம் கேரள அரசின் பக்கமே நின்றார்.

    நன்றாக இருக்கிறார்

    நன்றாக இருக்கிறார்

    மற்ற மாநிலங்களில் ஆளுநர் முதல்வர் இடையே இருக்கும் மோதல் கேரளாவில் இல்லை என்றுதான் கூற வேண்டும். அங்கு அரசுக்கும் சதாசிவத்திற்கும் நல்ல நட்பும், ஒற்றுமையும் இருக்கிறது. இந்த நிலையில்தான் சதாசிவம் பதவிக்காலம் விரைவில் முடிய உள்ளது. இதனால் இந்த வருட இறுதிக்குள் அங்கு புதிய கவர்னர் நியமிக்கப்பட உள்ளார்.

    யார்

    யார்

    சதாசிவம் கேரளா முதல்வருடன் மிகவும் நெருக்கமாக இருக்கிறார். அவர் இருந்தால் அங்கு பாஜக வளர்வது கஷ்டம். பாஜகவை சேர்ந்த நபர் ஒருவர் வந்தால்தான் சரியாக இருக்கும். கேரள அரசியலை தெரிந்த நபர் ஒருவர் வருவதுத்தான் நன்றாக இருக்கும் என்று பாஜக கருதுகிறது.

    ஐடியா

    ஐடியா

    அதனால் கேரளாவை சேர்ந்த ஒருவரையே அங்கு கவர்னராக நியமிக்க பாஜக திட்டமிட்டுள்ளது. அதன்படி கேரளாவின் கவர்னராக பாஜகவின் மூத்த தலைவர் கும்மணம் ராஜசேகரன் நியமிக்கப்படலாம் என்று கூறுகிறார்கள். கேரளாவை பற்றி தெரிந்தவர்களுக்கு கண்டிப்பாக கும்மணம் ராஜசேகரன் குறித்து தெரிந்திருக்கும்.

    எப்படிப்பட்ட நபர்

    எப்படிப்பட்ட நபர்

    தமிழக பாஜகவில் எச். ராஜா எப்படி பிரபலமான தலைவரோ அதேபோல்தான் கேரளாவில் கும்மணம் ராஜசேகரன். இவர் அங்கு சிக்காத சர்ச்சைகளே கிடையாது. ''கும்மடி மீம்ஸ்'' என்று ஆயிரக்கணக்கில் இவர் குறித்த பேஸ்புக் பக்கங்களும், வீடியோக்களும் உள்ளது. இவரின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கள் பல இணையம் முழுக்க வைரலாகி உள்ளது.

    என்ன கவர்னர்

    என்ன கவர்னர்

    இவர் இதற்கு முன்பே மிசோரம் கவர்னராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆர்எஸ்எஸ் அமைப்பில் இருந்து தன்னுடைய அரசியல் பணிகளை தொடங்கியவர் கும்மனம் ராஜசேகரன். இவர் பூர்வீகமும் கேரளா. அதன்பின் இவர் பாஜகவில் இணைந்தார்.

    எப்படி இருந்தார்

    எப்படி இருந்தார்

    2015-2018 வரை இவர் கேரள மாநில பாஜக தலைவராக இருந்திருக்கிறார். அதன்பின் இவர் மிசோரம் கவர்னராக 2018ல் நியமனம் செய்யப்பட்டார். இந்த நிலையில் கும்மனம் ராஜசேகரன் தனது பதவியை ராஜினாமா மீண்டும் கேரளா அரசியலில் கவனம் செலுத்தினார்.

    என்ன ஆளுநர்

    என்ன ஆளுநர்

    இப்போது இவரை ஆளுநராக நியமித்து கேரளா அரசை கட்டுப்படுத்த முயற்சி செய்யலாம் என்று பாஜக திட்டமிட்டுள்ளது என்கிறார்கள். அவருக்கு கேரள அரசியலின் நெளிவு சுழிவு தெரியும் என்பதால் வசதியாக இருக்கும் என்று கூறுகிறார்கள். இதனால் கர்நாடக பாணி ஆட்சி மாற்றம் கேரளாவில் தலை தூக்குகிறதா என்று கேள்வி எழுந்துள்ளது.

    English summary
    Kummanam Rajasekharan may be elected as the new Kerala Governor to check the comrade government.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X