திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கண்ணை மறைத்த காமம்... திருமணமான பெண் போலீசை கொன்று எரித்த ஆண் காவலர்

கேரளாவில் பெண் போலீசை கத்தியால் குத்தி கொன்று பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார் ஒரு கொடூரன். அவரும் காவல்துறையில் வேலை செய்பவர் என்பதுதான் கொடூரத்தின் உச்சம். கண்ணை மறைத்த காமமே இந்த கொலைக்குக் காரணமாக அமை

Google Oneindia Tamil News

Recommended Video

    கேரளாவில் மாவேலிக்கரை மாவட்டத்தில் உயிரிழந்த பெண் காவல்துறை அதிகாரி

    மாவேலிக்கரை: மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை மூன்று ஆசைகளும், கொலை, கொலை, கள்ளத்தொடர்பு மரணங்களுக்கு காரணமாகிறது. நாடுமுழுவதும் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள், கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றனர். ஒருதலைக்காதல் கொலைகள் அதிகரித்து வரும் நிலையில் திருமணமான பெண்களுக்கும் காம எண்ணம் கொண்ட கொடூரர்களால் பாதுகாப்பு இல்லாத நிலைதான் ஏற்படுகிறது. பெண் காவல்துறை அதிகாரியை கத்தியால் குத்திக்கொன்று பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளான் ஒரு கொடூரன். கேரளாவில் மாவேலிக்கரை மாவட்டத்தில் நடந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    உயிரிழந்த பெண் காவல்துறை அதிகாரியின் பெயர் சௌமியா. அவரது கணவர் பெயர் புஷ்கரன். இந்த தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். புஷ்கரன் அரபு நாட்டில் வேலை செய்கிறார். சௌமியா, மாவேலிக்கரை மாவட்டத்திற்குட்பட்ட வல்லிகுன்னம் காவல்நிலையத்தில் சிவில் போலீஸ் ஆபிசராக வேலை செய்து வருகிறார். மகிழ்ச்சியான வாழ்க்கையில் விதி விளையாடியது. எமனும் தன்னுடன் கூடவே பயனிக்கிறான் என்பதை சௌமியா அறிந்திருக்கவில்லை.

    சனிக்கிழமையன்று மாலை வேலை முடிந்து தனது பைக்கில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார் சௌமியா. அப்போது பின்னால் வந்த கார் சௌமியாவின் மீது மோதியது. தடுமாறி விழுந்த அவரை அந்த கொடூரன் கத்தியால் குத்தினான். ரத்த வெள்ளத்தில் சாய்ந்த சௌமியாவின் மீது பெட்ரோலை ஊற்றி எரித்து கொன்றான். இதில் அவனுக்கும் தீக்காயம் ஏற்பட்டது.

    கொன்று எரித்த கொடூரன்

    கொன்று எரித்த கொடூரன்

    பட்டப்பகலில் நடந்த இந்த கொலை சம்பவத்தைப் பார்த்தவர்கள் பதை பதைத்து போயினர். உயிர் போகும் தருணத்தில் சௌமியாவின் அலறலைக் கேட்டவர்கள் ஓடி வந்து காப்பாற்ற முயன்றனர் ஆனால் பயனில்லை. கொலைகாரனை பிடித்து தர்மஅடி கொடுத்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    விசாரணையில் அவன் பெயர் அஜாஸ் என தெரியவந்தது. எர்ணாகுளத்திற்கு அருகே அலுவாவில் காவலராக பணி செய்கிறார் என்றும் தெரியவந்துள்ளது.

    பிளாஷ்பேக்

    பிளாஷ்பேக்

    மாவேலிக்காராவில் உள்ள வல்லிக்குன்னம் காவல்நிலையத்தில் வேலை செய்யும் சௌமியாவிற்கும் நூறு கிலோமீட்டர் தூரம் அதிகம் உள்ள அலுவாவில் டிராபிக் துறையில் காவலராக வேலை செய்யும் அஜாஸ்சுக்கும் எப்படி தொடர்பு ஏற்பட்டது என்று குழப்பம் ஏற்பட்டது. அப்போதுதான் சௌமியாவின் பிளாஷ்பேக் தெரியவந்தது.

    சௌமியாவிற்கு பயிற்சி

    சௌமியாவிற்கு பயிற்சி

    சௌமியா கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருச்சூர் போலீஸ் அகாடெமிக்கு பயிற்சிக்காக சென்ற போது அங்கு அஜாஸ் பயிற்சியாளராக இருந்தார். சௌமியாவின் அழகு அஜாஸை என்னவோ செய்தது. வலிய சென்று நட்பு ஏற்படுத்திக்கொண்டான். பயிற்சி முடிந்து சௌமியா வல்லிக்குன்னம் காவல் நிலையத்தில் சிறப்பு காவலராக நியமிக்கப்பட்டார்.

    பழி தீர்த்த அஜாஸ்

    பழி தீர்த்த அஜாஸ்

    அஜாஸ் எர்ணாகுளம் அருகே உள்ள அலுவா காவல் நிலையத்திற்குச் சென்றார். அவ்வளவு தூரம் சென்ற பின்னரும் சௌமியாவின் நினைப்பில் தூக்கத்தை தொலைத்தார் அஜாஸ். தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அஜாஸ் வற்புறுத்தியதாக தெரிகிறது. அதற்கு சௌமியா மறுத்துள்ளார். அந்த வெறியில்தான் சௌமியாவை கொன்று பழி தீர்த்துக்கொண்டுள்ளான்.

    வெறி பிடித்த மிருகம்

    வெறி பிடித்த மிருகம்

    காவல்துறையில் பணியில் இருந்த சௌவுமியா வேலையில் நேர்மையானவர். அவர் மீது எந்த புகாரும் இல்லை. உயிரிழந்த சௌமியாவின் செல்போன் எண்ணையும், அஜாஸின் செல்போன் எண்ணையும் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். திருமணமான பெண் என்றும் பாராமல் காமம்

    கண்ணை மறைக்க கொன்று வெறியை தணித்துக்கொண்டான் அஜாஸ். இப்போது மூன்று குழந்தைகள்தான் அம்மாவை இழந்து அநாதையாக நிற்கின்றனர்.

    English summary
    A woman civil police officer was killed after a traffic policeman set her on fire near her home at Mavelikkara in Alappuzha district on Saturday.According to police, the accused, identified as Ajas, a policeman attached to the Aluva traffic station, allegedly followed the woman in a car when she was on her way back home after work in the evening.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X