திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கேரள அரசு சொல்லும் அந்த 51 பெண்களில் ஒருவர் "ஆம்பளை"யாமே.. பரபரப்பு தகவல்கள்!

Google Oneindia Tamil News

Recommended Video

    சபரிமலை சென்ற பெண்களின் பட்டியலில் ஆண் பெயர்... சிக்கலில் கேரளா அரசு- வீடியோ

    திருவனந்தபுரம்: சபரிமலையில் மாதவிடாய் வயதுடைய 51 பெண்கள் நுழைந்ததாக நீதிமன்றத்தில் கேரள அரசு சமர்ப்பித்த பட்டியலில் ஒரு ஆணின் பெயர் இடம்பெற்றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சபரிமலைக்கு அனைத்து வயதுடைய பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றம் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பை கடந்த ஆண்டு அறிவித்தது. இதற்கு பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

    இதையடுத்து சபரிமலைக்கு சென்ற பெண்கள் தடுத்து நிறுத்தப்பட்டு வருகின்றனர். கடந்த 2-ஆம் தேதி பிந்து, கனகதுர்கா ஆகிய இரு இளம்பெண்கள் சபரிமலைக்கு சென்று 18 படி ஏறாமல் பின்வாசல் வழியாக சென்று முதல் முறையாக சுவாமி தரிசனம் செய்தனர்.

    50 வயதுக்குட்பட்ட பெண்கள்

    50 வயதுக்குட்பட்ட பெண்கள்

    இந்த நிலையில் கேரள அரசு சபரிமலை கோயிலுக்குள் 51 பெண்கள் நுழைந்ததாக ஒரு பட்டியலை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. அதில் பெரும்பாலான பெண்கள் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் என தெரியவந்தது.

    புகார்

    புகார்

    அந்த பட்டியலில் 42 வயதை சேர்ந்த தெய்வசிகாமணி என்ற ஆணின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இன்னொரு சம்பவத்தில், சபரிமலைக்கு சென்று வந்த தனது தாயின் ஆதார் அட்டையில் அவரது பெயர் தவறுதலாக அச்சிடப்பட்டுள்ளதாக தமிழகத்தைச் சேர்ந்த அவரது மகன் குற்றம்சாட்டியுள்ளார்.

    மகன் வேதனை

    மகன் வேதனை

    மேலும் 1984-இல் பிறந்த தன்னுடைய தாய் எப்படி 50 வயதுக்குட்பட்டவராக இருக்க முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் எங்களது பாதுகாப்புக் குறித்து நாங்கள் கவலையாக உள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    55 வயது

    55 வயது

    தமிழகத்தைச் சேர்ந்த பத்மாவதி என்ற 48 வயது பெண் சபரிமலைக்குள் சென்றதாக கூறப்பட்ட நிலையில் அவருக்கு வயது 55 என அவரது உறவினர் தெரிவித்துள்ளார். மேலும் அந்த பட்டியலில் இடம்பெற்ற பெண்களின் வயது 50 வயதுக்கு மேற்பட்டது என தெரியவந்தது.

    இணையத்தில் பதிவு

    இணையத்தில் பதிவு

    51 இளம்பெண்கள் ஐயப்பனை தரிசித்ததாக கோல்மால் பட்டியலை தயாரித்து மீண்டும் கேரள அரசு சர்ச்சையில் சிக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கேரள அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கூறுகையில், 50 வயதுக்குட்பட்ட 7500 பெண்கள் சபரிமலைக்கு வர இணையத்தில் பதிவு செய்தனர்.

    கண்டறிய முடியாது

    கண்டறிய முடியாது

    அவர்களது ஆதார் அட்டைகளை ஆராய்ந்ததில் அவர்கள் 50 வயதுக்குட்பட்டவர்கள் என தெரியவந்தது. இதில் 51 பெண்கள் கோயிலுக்குள் சென்றுவிட்டனர். அவர்கள் தாக்கல் செய்யும் ஆவணங்களை தவிர்த்து எங்களால் அவர்களது வயதை கண்டறிய முடியாது என்றார்.

    English summary
    List of names who entered Sabarimala in mensturation age along with their age and Aadhaar details was also submitted in the court. Most of the name in the list are above 50.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X