திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கோழிக்கோடு விமான விபத்தில் பலியானவர்கள் யார்? யார்?.. முழு தகவல்கள் இதோ...

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் விமான விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை தற்போது வெளியாகியுள்ளது.

துபாயிலிருந்து கோழிக்கோட்டிற்கு வந்தே பாரத் திட்டத்தின் கீழ் 184 பேர் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் மீட்கப்பட்டனர். அந்த விமானம் நேற்று மாலை ரியாத்திலிருந்து கோழிக்கோட்டிற்கு புறப்பட்டு இரவு வந்தடைந்தது.

List of persons who died in Kozhikode plane crash

அப்போது கோழிக்கோட்டில் உள்ள கரிப்பூர் விமான நிலையத்தில் கனமழை பெய்தது. இந்த நிலையில் டேபிள் டாப் எனப்படும் மலைப்பாங்கான பகுதியில் தரையிறங்க முயன்ற போது இந்த விமானம் ஓடுதளத்தை தாண்டி தடுமாறி 35 அடி ஆழ பள்ளத்தில் சரிந்து விழுந்தது.

இந்த விபத்தில் பலியானோரின் விவரங்கள் பின்வருமாறு:

1. முகமது ரியாஸ், 24 வயது, ஆண், பாலக்காடு மாவட்டம்

2. சயீர் சயீது செவப்பர சைதுட்டி, 38, ஆண், மலப்புரம் மாவட்டம்

3. லைலாபி, 51, பெண், மலப்புரம்

4. செரிக்க பேரம்பில் ராஜீவன், 61, ஆண், கோழிக்கோடு

5. மனால் அகமது, 25, ஆண், கோழிக்கோடு

6. சரஃபுதீன், 35, ஆண், கோழிக்கோடு

7. ஜானகி குன்னோத், 55, பெண், கோழிக்கோடு

8. அஸாம் முகமது செம்பாயி, ஒரு வயது, ஆண், கோழிக்கோடு

9. சந்தா மராகத், 59, பெண், மலப்புரம்

10. அகிலேஷ் குமார், ஆண், துணை விமானி

11. தீபக் சாத்தே, ஆண், விமானி

12. சுதீர் வெரியாத், 45, ஆண், மலப்புரம்

13. ஷேஷா பாத்தீமா, 2, பெண், மலப்புரம்

14. ரம்யா முரளிதரன், 32, பெண், கோழிக்கோடு

15. ஆயிஷா துவா, 2, பெண், மன்னார்காட்

16. ஷிவாத்மிகா முரளிதரன் ரம்யா, 5, பெண், கோழிக்கோடு

17. ஷெனோமியா புதியபந்தகாலகம், 40, பெண், கோழிக்கோடு

18. ஷஹீரா பானு மன்சரா, 29, பெண், மேரிக்குன்னு

இதுவரை இந்த விபத்தில் 4 குழந்தைகள், 7 பெண்கள், 7 ஆண்கள் பலியாகியுள்ளனர். இது நேற்று இரவு 7.41 மணிக்கு கிடைத்த நிலவரம். ஆனால் பலி எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. இன்னொருவரின் விவரங்கள் தெரியவில்லை.

English summary
Here are the list of persons who died in Kozhikode plane crash.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X