திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"ஸ்வேதா டீச்சர் எங்கே".. ஒரே நாளில் ஆன் லைன் கிளாஸில் ஃபேமஸ்.. கேரளாவையே அசர வைத்த ஆசிரியை

ஆன்லைன் வகுப்பில் குழந்தைகளை கவர்ந்து வருகிறார் ஸ்வேதா டீச்சர்

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரளா முழுக்க ஸ்வேதா டீச்சர் பத்திதான் பேச்சாக உள்ளது.. அகல விரியும் கண்களில், முக பாவனைகளுடன் அழகழகாய் குட்டி குட்டி கதைகளை சொல்லி ஆன்லைனில் பாடம் நடத்தி வருகிறார்.

Recommended Video

    Online Class-ல் கலக்கும் Kerala Teacher ஸ்வேதா

    கேரளாவை ஒவ்வொரு விஷயத்திலும் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.. இந்தியாவுக்கே முன்மாதிரியாக பல விஷயங்களில் வியக்க வைத்து வருகிறது.

     lockdown: keralas sai swetha teacher becomes star after online classes for 1st

    தொற்று முழுவதுமாக ஒழியாததால் இப்போதைக்கு ஸ்கூல்களை திறக்கும் எண்ணம் இல்லை.. இன்னும் சில மாசங்கள் ஆகும் என்று சொல்கிறார்கள்.. அதேசமயம் பிள்ளைகளுக்கு படிப்பு பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக ஆன்லைன் கிளாஸ்கள் ஒவ்வொரு மாநிலங்களிலும் நடத்தப்பட்டு வருகின்றன.

    அந்த வகையில், கேரள அரசு விக்டரி சானல் மூலம் கடந்த 1-தேதி முதல் ஆன்லைன் வழியாக கிளாஸ்கள் நடக்க ஆரம்பித்தது.. இந்த ஆன்லைன் கிளாஸ்ன் முதல் நாளிலேயே அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர்தான் டீச்சர் ஸாயி ஸ்வேதா தீலி என்பவர். கோழிக்கோடு முதுவடத்தூர் விவிஎல்பி பள்ளியில் இவர் வேலை பார்க்கிறார்

    ஒன்னாம் கிளாஸ் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லி தருகிறார்.. பொதுவாக வகுப்பில் இருக்கும்போது, யானை, பூனை, கிளி என்று வரைந்து காட்டி விலாவரியாக விளக்கி, குழந்தைகள் மனதில் பதிய வைப்பது வழக்கம்.. ஆனால் செல்போனில் அந்த அத்தனை உணர்வையும் கொண்டு வந்து பிள்ளைகள் மனதில் பதிய வைக்ககிறார் ஸ்வேதா டீச்சர்.

    இதில் அவரது எக்ஸ்பிரஷன்கள்தான் சூப்பர்.. பூனை போலவே அவர் முகத்தை வைத்து கொண்டு, கண்களை மூடி திறந்து, குரல்களை ஏற்ற இறக்கத்துடன் பாடம் நடத்தும் அழகே அலாதியாக உள்ளது.. அந்த அளவுக்கு அழகாக வர்ணிக்கிறார்.. இந்த வீடியோக்களை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பார்த்து ரசிக்கிறார்கள்.. அதனால் முதல்நாளிலேயே ஸ்வேதா டீச்சர் எல்லார் மனசிலும் குடியேறிவிட்டார்.

    ஆயிரம் நல்லது இருந்தாலும் ஒருசிலருக்கு குறை மட்டுமே கண்ணுக்கு தெரியுமே.. அப்படித்தான் ஸ்வேதா டீச்சர் விஷயத்திலும் நடக்கிறது.. இதையும் சிலர் விமர்சித்து கிண்டல் கேலி செய்து பதிவுகளை போட்டு வருகிறார்கள்.. குழந்தைகளுக்கு எப்படி படிப்பு சொல்ல தர வேண்டுமோ அதே பாணியைதான் ஸ்வேதாவும் செய்கிறார்.

    ஆனால் இதை கிண்டல் செய்கின்றனர் சிலர்.. அவர்கள் மீது கேரள சைபர் க்ரைம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போதுதான் ஒரு அதிர்ச்சி வெளியானது.. டீச்சரை கிண்டல் செய்து கமெண்ட் போட்டது 4 மாணவர்களாம். இந்த விஷயம் அமைச்சர் ஷைலஜா டீச்சருக்கும் தெரியவந்தது.. யாராவது இப்படி கமெண்ட் போட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், இந்த இக்கட்டான சூழலில் ஆன்லைன் கிளாஸ் எடுக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் நாம் பக்கபலமாக இருக்க வேண்டும் என்று ஆதரவு குரல் எழுப்பி உள்ளார்.

    க்யூ.ஆர்.கோடு முறை.. பேருந்தில் பயணிக்க கையில் காசு தேவையில்லை.. எம்டிசி விளக்கம்க்யூ.ஆர்.கோடு முறை.. பேருந்தில் பயணிக்க கையில் காசு தேவையில்லை.. எம்டிசி விளக்கம்

    இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் ஸ்வேதா டீச்சரின் வீடியோக்களை குழந்தைகள் ஆசையுடன் பார்க்கின்றனர்.. அவர்களையும் அறியாமல் அந்த பாடம் அவர்களை கவ்வி கொள்கிறது.. டோரா புஜ்ஜி.. என்று சொல்லும்போதே டீச்சரின் முகம் மலர்ந்து சிரிக்கிறது.. ஸ்வேதா டீச்சர் எங்கே என்று தானாகவே கண்கள் தேடுகின்றன.

    கல்யாணம் ஆகி இவருடைய கணவர் வெளிநாட்டில் இருக்கிறார்... இப்படியெல்லாம் மனைவி பற்றி கமெண்ட் பார்த்த அவர், எதையும் கண்டுக்காதே, குழந்தைங்க படிப்புதான் முக்கியம்.. கோ அஹெட் என்று தைரியம் தந்துள்ளார்.. அமைச்சரின் ஆதரவு, கணவரின் ஆறுதல்களுக்கிடையே குழந்தைகளின் முகத்தில் மலர்ச்சியை பார்த்து வருகிறார் ஸ்வேதா டீச்சர்.. வாழ்த்துக்கள்!

    English summary
    lockdown: keralas sai swetha teacher becomes star after online classes for 1st
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X