திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மீனு மீது மனுவுக்கு கொள்ளை ஆசை.. இப்படியும் இந்த காலத்துலயும் நடக்குமா.. ஆச்சரியத்தில் கேரளா!

Google Oneindia Tamil News

Recommended Video

    Thiruvananthapuram Brother holding his Special sister

    திருவனந்தபுரம்: தாய் பாசத்திற்கு அடுத்து நம்மிடம் பின்னிப் பிணைந்துள்ளது தங்கை பாசம்தான்.. நாகரீகங்கள் வளர்ந்தாலும், எத்தனையோ அண்ணன்களுக்கு தங்கள் தங்கைகளின் நலனில் தான் எவ்வளவு அக்கறைகள் கொட்டி கிடக்கின்றன. அப்படி ஒரு சம்பவம்தான் கேரளாவில் நடந்துள்ளது.

    திருவனந்தபுரம் அருகில் உள்ள பகுதி புளியரக்கோணம். இங்கு வசித்து வசித்து வரும் தம்பதி ஹரீந்திரன் நாயர் - ரமா தேவி. இவர்களுக்கு மனு என்ற ஆண் குழந்தை, மீனு என்ற பெண் குழந்தை உள்ளன.

    இதில் மீனுவிற்கு பிறவியிலேயே ஒரு குறை.. அதாவது அவளது இடுப்பிற்கு கீழ் உணர்ச்சிகள் இல்லை. அவளால் எழுந்து நிற்கவோ, நடக்கவோ முடியாது. இது மட்டுமல்லாமல், அவளது இதய வால்விலும் பிரச்சனை இருந்தது. காதும் சரியாக கேட்காது.. இப்படி பல பிரச்சனைகளுடன் பிறந்தாள் மீனு.

    சரிந்து விழுந்த அதிமுக தேர்தல்பணிமனை... சகுனம் பார்க்கும் நிர்வாகிகள்சரிந்து விழுந்த அதிமுக தேர்தல்பணிமனை... சகுனம் பார்க்கும் நிர்வாகிகள்

    ஹரீந்திரன்

    ஹரீந்திரன்

    இவ்வளவு குறைகளுடன் பிறந்த பெண் குழந்தையை பல டாக்டரிடம் இந்த தம்பதி கொண்டு போய் காட்டிவிட்டனர். ஆபரேஷன் செய்தால் ஆபத்து சென்று சொல்லிவிட்டார்கள். இதனால் குடும்பதே கதறி தவித்தது. இந்த சமயத்தில், அதாவது சில வருடங்களுக்கு முன்பு ஹரீந்திரன் இறந்துவிட்டார். ஏற்கனவே நொந்துபோன குடும்பத்தில், இப்போது வறுமையும் சேர்ந்து கொண்டது.

    வறுமை

    வறுமை

    இதனால் இரு குழந்தைகளையும் வைத்து கொண்டு ரமாதேவி தவித்தார். எங்கே போவது, யாரிடம் உதவி கேட்பது என்று தெரியவில்லை.. அதனால், அந்த பகுதியில் இருக்கும் கோயில்களை பெருக்கி துடைக்கும் வேலையை செய்ய ஆரம்பித்தார். ஆனாலும் குழந்தைகளுக்கு அந்த பணம் போதவில்லை. அதனால் ஆட்டோ ஓட்டி குடும்பத்தை காப்பாற்ற தொடங்கினார் ரமாதேவி.

    கல்யாண வயசு

    கல்யாண வயசு

    ஆனால் இதில் ஒரு ஆறுதலான விஷயம் என்னவென்றால், மனுவுக்கு மீனு மீது கொள்ளை ஆசை.. சின்ன வயசில் இருந்தே மீனுவை கொஞ்சியபடியே இருப்பான்.. மீனுவால் எப்படியும் நடக்க முடியாது என்பதால், மனுதான் இடுப்பில் தூக்கி கொள்வான்.. இப்படியே வருடங்கள் உருண்டன.. இப்போது மனுவுக்கு கல்யாண வயசு வந்துவிட்டது. அக்கம்பக்கத்தினர் முதல், உறவுகள் வரை மனுவின் கல்யாணம் பற்றி நேரடியாக கேட்டுவிட்டார்கள்.

    குடும்ப சூழல்

    குடும்ப சூழல்

    ஆனால், தன்னை விட்டால் மீனுவை யார் பார்த்து கொள்வார்கள்? கல்யாணம் செய்து கொண்டு போய்விட்டால் மீனுவுக்கு இனி யார் இருக்கிறார்கள் என்று, கல்யாணத்துக்கு மறுப்பு சொல்லியே வந்தார். ஆனாலும் மனுவை கல்யாணம் செய்ய ஒரு பெண் விரும்பினார். மனுவின் குடும்ப நிலைமை, சூழல், மீனுவின் பிரச்சனை, இதெல்லாம் தெரிந்து கொண்டு தான் அந்த பெண், மனுவை கல்யாணம் செய்ய ஆசைப்பட்டார். அந்த பெண் பெயர் ரம்யா.. இவர் வெறும் சாதாரண பெண் இல்லை.. திருவனந்தபுரம் மாநகராட்சி கவுன்சிலர் ஆவார்.

    நிச்சயதார்த்தம்

    நிச்சயதார்த்தம்

    கவுன்சிலரே என்றாலும் மனு, இந்த கல்யாணம் வேண்டாம் என்று மறுத்தார். ஆனால் மீனுதான் அண்ணனை சம்மதிக்க வைத்தார். வேறு வேறு சாதி என்றாலும், இரு வீட்டின் சம்மதப்படி நிச்சயதார்த்தம் நல்லபடியா நடந்து முடிந்திருக்கிறது. வரும் டிசம்பர் 12-ம் தேதி கல்யாணம் வைத்திருக்கிறார்கள். இதை நினைத்து திருவனந்தபுரம் மக்கள் ஆனந்தத்தில் உள்ளனர்.

    சபாஷ்

    சபாஷ்

    மனுவை திருமணம் செய்ய முன் வந்த கவுன்சிலரை பாராட்டுவதா, அல்லது கவுன்சிலரே என்றாலும் அந்த வரனை தங்கைக்காக நிராகரித்த அண்ணனை பாராட்டுவதா, அல்லது சுயநலம் என்பது துளியும் இன்றி, விடாப்பிடியாக இருந்த தன் அண்ணனை சம்மதிக்க வைத்த இந்த தங்கையை பாராட்டுவதா என தெரியவில்லை.. என்னதான் நவீனத்துக்குள் நம்மை புகுத்தி கொண்டாலும், புதைந்து போன பாசத்தை இதுபோன்ற மனுவும், மீனுவும் வெளியே கொண்டுவந்து விடுகிறார்கள்!

    English summary
    lovable elder brother brother and younger sister bond from trivandrum in kerala and public appreciate these affectionate family
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X