திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட கொரோனா நோயாளியின் படுக்கையில் புழுக்கள் .. கேரளாவில் பெரும் அதிர்ச்சி

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கொரோனாவால் குணப்படுத்தப்பட்ட பின்னர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவரின் படுக்கையில் புழுக்கள் ( மாகோட்கள்) கண்டுபிடிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அவரது குடும்பத்தினர் இதுபற்றி கேரள சுகாதார அமைச்சர் கே கே ஷைலாஜாவிடம் புகார் அளித்தனர். இதையடுத்து அவர் அறிக்கை தாக்கல் செய்யுமாறு மருத்துவ கல்வித் துறை இயக்குநருக்கு உத்தரவிட்டுள்ளார்.

அன்றாடம் கூலித் தொழிலாளியான அனில்குமார் வயது 55, கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். "அவரது உடல்நிலை மோசமடைந்ததால், அவர் ஐ.சி.யுவிற்கு மாற்றப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு கொரோனா இருப்பதை உறுதி செய்தனர். இதையடுத்து அவரை மருத்துவமனை அதிகாரிகள் தனிமை முகாமில் சேர்த்தனர்.

கேரளாவில் கர்ப்பிணிக்கு சிகிச்சை மறுப்பு...வயிற்றிலேயே இரட்டை குழந்தைகள் இறந்த சோகம்!!கேரளாவில் கர்ப்பிணிக்கு சிகிச்சை மறுப்பு...வயிற்றிலேயே இரட்டை குழந்தைகள் இறந்த சோகம்!!

குடும்பத்தினர் அதிர்ச்சி

குடும்பத்தினர் அதிர்ச்சி

அதன் பின்னர் அவரை சில நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் குணமாகிவிட்டதாக கூறி டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். ஆம்புலன்ஸில் வீட்டுக்கு அழைத்துவரப்பட்ட நிலையில், அனில்குமாரின் படுக்கையில் புழுக்கள் ( மாகோட்கள்) ஊடுருவதை கண்டு அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இந்த மாட்கோக்கள் உடல் நலம் பாதித்தவர்களின் உடலில் இருந்து வெளியேறுபவரை என்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கேரள அமைச்சர் உத்தரவு

கேரள அமைச்சர் உத்தரவு

அவரது குடும்பத்தினர் இதுபற்றி கேரள சுகாதார அமைச்சர் கே கே ஷைலாஜாவிடம் புகார் அளித்தனர். இதையடுத்து அவர் அறிக்கை தாக்கல் செய்யுமாறு மருத்துவ கல்வித் துறை இயக்குநருக்கு உத்தரவிட்டுள்ளார்.

கர்ப்பிணிக்கு சிகிச்சை மறுப்பு

கர்ப்பிணிக்கு சிகிச்சை மறுப்பு

இதற்கிடையில் கேரளாவின் மலப்புரம் மாவட்டம் கோண்டோட்டியைச் சேர்ந்த பெண்ணுக்கு (20 வயது) சனிக்கிழமை அதிகாலையில் பிரசவ வலி ஏற்பட்டிககிறது. அவரை அனுமதிக்க கோரி மூன்று மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். ஆனால் கொரோனா பிரச்சனையை காரணம் காட்டி சிகிச்சை அளிக்க மருத்துவமனைகள் மறுத்துவிட்டன.

விசாரணை நடத்த உத்தரவு

விசாரணை நடத்த உத்தரவு

இறுதியில் அந்த பெண் சனிக்கிழமை மாலை ஆபத்தான நிலையில் கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் உரிய நேரத்தில் சிகிச்சை பெறாத காரணத்தால் அந்த பெண் தனது இரட்டைக் குழந்தைகளை இழந்தார். அவை பிறக்கும் போதே இறந்துவிட்டன. இந்த விவகாரம் ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து கேரள அரசு இதுபற்றி உயர் மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டது. கேரளாவில் அண்மைக்காலமாக கொரோனா பாதிப்பு தமிழகத்தைவிட மிகமிகஅதிகமாக உள்ளது. 7 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டு வருகிறார்கள். கேரளாவில் கொரோனா நிலைமை எல்லை மீறிவிட்டதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் அங்கு நடந்து வரும் அடுத்தடுத்த சம்பவங்கள், சுகாதாரத்துறையில் பெரும் குழப்பம் ஏற்பட்டதை வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளது.

English summary
maggots were found in bedsores of a bedridden man, who was discharged from hospital after being cured of COVID-19, his family claimed following which Kerala health minister K K Shailaja on Monday ordered aprobe.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X