திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கோழிக்கோடு விமானத்தில் பயணித்த 3 தமிழர்கள்.. பாதுகாப்பாக உள்ளதாக ஆட்சியர் தகவல்

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கோழிக்கோடு விமானத்தில் பயணித்த 3 தமிழர்களும் பாதுகாப்பாக உள்ளதாக மலப்புரம் மாவட்ட ஆட்சியர் கோபால கிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    கோழிக்கோடு விமான விபத்து.. இரண்டாக உடைந்த ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்

    துபாயிலிருந்து கோழிக்கோட்டிற்கு 174 பயணிகள், 6 விமான படை ஊழியர்கள் என மொத்தம் 190 பேருடன் வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கனமழை காரணமாக தரையிறங்க முடியாமல் தவித்தது.

    Malapuram Collector says 3 Tamil people onboard is in safe

    ரன்வேயில் தண்ணீர் தேங்கியிருந்தது. இதனால் தரையிறங்கும் முயற்சி முதலில் தோல்வி அடைந்தது. பின்னர் சிறிது நேரம் பறந்தபடியே இருந்த விமானம் இரண்டாவது முறையாக தரையிறங்க முயற்சித்தது.

    அப்போது சறுக்கி விழுந்த விமானம் 35 அடி ஆழத்தில் விழுந்தது. இதில் 19 பேர் பலியாகிவிட்டனர். விபத்துக்குள்ளான விமானத்தில் 3 தமிழக பயணிகள் பயணம் செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    30 ஆண்டு அனுபவம் வாய்ந்த விமானி இயக்கியும் கேரள விபத்து நடந்தது எப்படி?.. நிபுணர்கள் கூறுவது என்ன? 30 ஆண்டு அனுபவம் வாய்ந்த விமானி இயக்கியும் கேரள விபத்து நடந்தது எப்படி?.. நிபுணர்கள் கூறுவது என்ன?

    அந்த விமானத்தில் தமிழகத்தைச் சேர்ந்த முகமது ஜிடான் பைசல் பாபு, ஹனிஜா பைசல்பாபு, ஷாலா ஷாஜகான் ஆகியோர் பயணம் செய்ததாக ஏர் இந்தியா தெரிவித்திருந்தது. இந்த நிலையில் அவர்களுடைய நிலை குறித்து அறிய அவரது உறவினர்கள் தவித்தனர்.

    அந்த 3 பேரும் தற்போது பாதுகாப்பாக உள்ளதாக மலப்புரம் மாவட்ட ஆட்சியர் கோபால கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இவர்கள் மூவரும் துபாய் வாழ் தமிழர்கள் ஆவார்கள்.

    English summary
    Malapuram Collector Gopala Krishnan says 3 Tamil people onboard is in safe.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X