திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிரபல மாவோயிஸ்ட் மணிவாசகம் சுட்டுக்கொலை.. கேரள போலீஸ் அதிரடி என்கவுண்டர்!

மாவோயிஸ்ட் தலைவர் மணிவாசகம் கேரளாவில் கேரளாவில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: மாவோயிஸ்ட் இயக்கத்தின் முக்கிய தலைவர் மணிவாசகம் கேரளாவில் கேரளாவில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

தமிழகம், கர்நாடக, கேரளாவில் காட்டுப்பகுதியிலும், மலை பகுதியிலும் அதிக அளவில் மாவோயிஸ்ட் நடமாட்டம் இருந்து வருகிறது. தமிழகம் மற்றும் கர்நாடகாவில் போலீஸ் மற்றும் சிறப்பு அதிரடிப்படை எடுத்த நடவடிக்கை காரணமாக மாவோயிஸ்ட் இயக்கத்தினர் பலர் கேரளாவில் உள்ள காடுகளில் பதுங்கி இருக்கிறார்கள்.

Maoist Leader Manivasagam encountered in Kerala by Anti Maoist Force

இதில் பெரும்பாலான மாவோயிஸ்ட்கள் கேரளாவில் அகாலி காடுகளில் பதுங்கி இருக்கிறார்கள். கடந்த 2008ம் ஆண்டு மாவோயிஸ்ட்கள் மீது தீவிரமாக மாவோயிஸ்ட் எதிர்ப்பு அதிரடி படையினர் தாக்குதல் நடத்தியது. இதனால் அப்போதில் இருந்தே மாவோயிஸ்ட் அடிக்கடி இடம்மாறி வருகிறார்கள்.

இந்த நிலையில்தான் 2008ல் இருந்து மாவோயிஸ்ட் இயக்கத்தின் முக்கிய மூத்த தலைவர் மணிவாசகத்தை கேரள மாவோயிஸ்ட் எதிர்ப்பு போலீஸ் படை தீவிரமாக தேடி வந்தது. 11 வருடமாக மாவோயிஸ்ட் எதிர்ப்பு படை மாவோயிஸ்ட் மணிவாசகத்தை தேடி வந்தது.

கயிறு, பலூன், ரோபோட், சிலிண்டர் கேமரா.. எல்லாமே தோல்வி.. எங்கு தவறு நடந்தது.. ஏன் இப்படி ஆச்சு?கயிறு, பலூன், ரோபோட், சிலிண்டர் கேமரா.. எல்லாமே தோல்வி.. எங்கு தவறு நடந்தது.. ஏன் இப்படி ஆச்சு?

உளவுத்துறை அளித்த தகவலின்படி இன்று கேரள போலீஸின் மாவோயிஸ்ட் எதிர்ப்பு படை பிரிவு நடத்திய தேடுதல் வேட்டையில் மணிவாசகம் ஆக்கப்பட்டார். அட்டப்பாடு காட்டில் வைத்து அவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். மாவோயிஸ்ட் எதிர்ப்பு படையின் கேரள போலீஸ் தண்டர்பெல்ட் படைப்பிரிவு இந்த என்கவுண்டரை செய்துள்ளது.

அட்டப்பாடி பகுதியில் உள்ள அஞ்சாகண்டி காட்டுப்பகுதியில் நடந்த என்கவுண்டரில் மணிவாசகம் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். அங்கு தற்போது மாவோயிஸ்ட் எதிர்ப்பு படையினர் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இந்த தாக்குதலில் மொத்தமாக 3 மாவோயிஸ்ட்கள் கொல்லப்பட்டனர். இன்னும் சிலர் இன்று என்கவுண்டர் செய்யப்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

English summary
Maoist Leader Manivasagam encountered in Kerala by Anti Maoist Force Kerala Police.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X