திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கட்சியில் சேர்ந்து 1 வாரம்தான் ஆச்சு.. வயதோ 88.. கேரள பாஜக முதல்வர் வேட்பாளர் "மெட்ரோ மேன்" ஸ்ரீதரன்

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரள பாஜக முதல்வர் வேட்பாளராக 88 வயதாகும் "மெட்ரோ மேன்" ஸ்ரீதரன் அறிவிக்கப்பட்டுள்ளார். பாஜகவில் சேர்ந்த ஒரு வாரத்தில் இவரை முதல்வர் வேட்பாளராக அறிவித்துள்ளனர்.

இந்தியாவில் முதன் முதலில், டெல்லியில், மெட்ரோ ரயில் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியவர் ஸ்ரீதரன் என்பதால் "மெட்ரோமேன்" என்று அழைக்கப்பட்டு வருபவர்.

கடந்த பிப்ரவரி மாதம் 26ம் தேதி இவர் கேரள பாஜகவில் இணைந்தார். ஆனால், கேரளாவில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்கு இவர்தான் முதல்வர் வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சசிகலா போல டிடிவி தினகரனும் சரியான முடிவை எடுப்பார்.. அடுத்த ஆட்டத்தை அப்பட்டமாக சொன்ன பாஜக சிடிரவி சசிகலா போல டிடிவி தினகரனும் சரியான முடிவை எடுப்பார்.. அடுத்த ஆட்டத்தை அப்பட்டமாக சொன்ன பாஜக சிடிரவி

ஒரே வாரம்

ஒரே வாரம்

அதாவது கட்சியில் இணைந்த ஒரு வாரத்திற்குள்ளாக ஸ்ரீதரன் கேரள சட்டசபைத் தேர்தலில் பாஜகவின் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டுள்ளார். ஏற்கனவே அங்கு உழைத்த பாஜக தலைவர் சுரேந்திரன் போன்றவர்களில் ஒருவரை முதல்வர் வேட்பாளராக அறிவிக்காமல் 88 வயதாகும் ஒருவரை முதல்வர் வேட்பாளராக அறிவித்து காய் நகர்த்தியுள்ளது பாஜக.

வயது வரம்பு

வயது வரம்பு

அமித் ஷா பாஜக தலைவராக இருந்தபோது புது விதிமுறைகளை கொண்டு வந்தார். 75 வயதானவர்களுக்கு பாஜகவிலிருந்து பதவிகள் தருவதில்லை, முதல்வர் பதவியாக இருந்தாலும் இந்த விதிமுறை பொருந்தும் என அறிவிக்கப்பட்டது. அத்வானியை குடியரசு தலைவர் பதவிக்கு முன்மொழியாமல் தவிர்க்க இது ஒரு காரணமாக கூறப்பட்டது.

சலுகைகள்

சலுகைகள்

இப்படி விதிமுறை இருந்த நிலையில், கேரளாவில் 88 வயதாகும் ஸ்ரீதரனை முதல்வர் வேட்பாளராக அறிவித்துள்ளது பாஜக. மாநில பாஜக தலைவர் சுரேந்திரன் இந்த அறிவிப்பை இன்று வெளியிட்டார். ஒரு பக்கம் வயது மூப்பு, இன்னொரு பக்கம், குறைந்த காலத்திலேயே முதல்வர் வேட்பாளர் என இரு சலுகைகள் ஸ்ரீதரனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

கேரளத் தேர்தல்

கேரளத் தேர்தல்

கேரளாவில் உள்ள 140 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 6ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. அதாவது தமிழகத்தில் தேர்தல் நடைபெறும் அதே நாளில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், முதல்வர் வேட்பாளருக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

English summary
'Metro Man' E Sreedharan will be BJP's Chief Minister candidate in the upcoming Kerala Assembly Elections 2021, says State BJP chief K Surendran.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X