• search
திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

Kerala Wife Swap: "இன்னிக்கு ராத்திரி என் மனைவி உன்னோட!" யார் அந்த மிஸ்டர் ஸ்டுட்ஸ்? கிறுகிறு கேரளா

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரளாவில் வாட்ஸ்அப் டெலிகிராம் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் குழுக்களை ஏற்படுத்தி அதன் மூலம் பழகும் நபர்களிடம் மனைவிகளை விபச்சாரத்திற்கு அனுப்பி சம்பாதித்த விவகாரத்தில் திருமணமாகதவர்கள் குழுவில் சேர்வதற்கே மிஸ்டர் ஸ்டுட்ஸ் என்பவரிடம் 14 ஆயிரம் செலுத்த வேண்டுமென்ற தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்லாமிய பெண்களை ஏலத்தில் விடுவதாக அமைக்கப்பட்டிருந்த புள்ளி பாய் சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் முறைகேட்டில் ஈடுபட்ட நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பெண்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டு வரும் சம்பவங்கள் குறித்து கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

முழு ஊரடங்கு: அப்படியே சைக்கிளை எடுத்து.. 5 கி.மீ ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர்.. வியந்து போன மக்கள்! முழு ஊரடங்கு: அப்படியே சைக்கிளை எடுத்து.. 5 கி.மீ ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர்.. வியந்து போன மக்கள்!

இந்த நிலையில்தான் கேரளாவில் வாட்ஸ்அப் டெலிகிராம் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடக தளங்களில் மனைவிகளை ஏலம் விட்டு சம்பாதித்து வந்த கணவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் அதிர்ச்சி

கேரளாவில் அதிர்ச்சி

கேரள மாநிலம் கோட்டயம் அருகே கருக்கச்சல் காவல்நிலையத்தில் பெண் ஒருவர் புகார் அளித்தார். அதில் தனது விருப்பத்திற்கு மாறாக தனது கணவர் தன்னை வேறு சிலருடன் படுக்கையை பகிர்ந்து கொள்ளுமாறு வலியுறுத்துவதாகவும் தான் எவ்வளவு கூறியும் இது குறித்து அவர் கண்டுகொள்ளவில்லை எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தார். முதலில் சாதாரணமாகத்தான் இருக்கும் என நினைத்து போலீசார் அந்த நபரை பிடித்து விசாரித்ததில் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாயினர்.

வட்ஸ் ஆப் மூலம் மனைவிகள் விற்பனை

வட்ஸ் ஆப் மூலம் மனைவிகள் விற்பனை

ஐந்தாயிரம் முதல் பத்தாயிரம் நபர்கள் வரை உறுப்பினர்களாக இருக்கும் டெலெக்ராம் வாட்ஸ் அப் மற்றும் ஃபேஸ்புக் குழுக்கள் மூலமாக தங்கள் மனைவிகளை விளம்பரப்படுத்தி அதன் மூலம் இவர்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்தது கேரள போலீசார் தலை சுற்ற வைத்தது. இதையடுத்து விசாரணை நடத்தப்பட்ட போது இது போன்று கேரளாவில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழுக்கள் இயங்குவதாகவும், சாதாரண கூலித் தொழிலாளிகள் தொடங்கி திரை பிரபலங்கள் அரசியல் புள்ளிகள் காவல்துறையினர் கூட இந்தக் குழுக்களில் இருப்பதும், குறிப்பிட்ட சில நபர்கள் பெண்களின் புகைப்படங்களை பதிவிட்டு, ஒரு குறிப்பிட்ட விலையை நிர்ணயித்து தங்கள் மனைவிகளை அவர்களிடம் அனுப்பி வைத்தது தெரியவந்தது.

குடும்பவிழா பெயரில் விபச்சாரம்

குடும்பவிழா பெயரில் விபச்சாரம்

மேலும் அந்தக் குழுக்களில் மனைவிகளை மாற்றிக் கொள்வது, குடும்ப விழா என்ற பெயரில் சில இடங்களில் ஒன்றாகக் கூடி குரூப்செக்ஸ் எனப்படும் குழு உடலுறவு மற்றும் இயற்கைக்கு மாறான உடலுறவு ஆகியவற்றில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இந்தக் குழுக்களில் பகிரப்படும் பெண்களின் புகைப்படங்கள் அவர்களின் அனுமதி உடன் தான் பதிவேற்றபடுகிறது எனவும் அவர்களும் எவ்விதமான சலனம் இன்றி இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும், ஆனால் ஒரு சில பெண்கள் தங்கள் கணவர்களால் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதற்கு கட்டாயப்படுத்தப்படுகின்றனர் என போலீசார் கூறியுள்ளனர்.

மூளைச்சலவை செய்யும் ஆண்கள்

மூளைச்சலவை செய்யும் ஆண்கள்

இந்தச் செயல்களில் பல பெண்கள் தங்கள் விருப்பத்திற்கு மாறாக கட்டாயப்படுத்தப் படுகிறார்கள் எனவும் இது குறித்து தீவிர கவனத்துடன் விசாரிக்க வேண்டும் என்றும் விருப்பத்தின் பேரில் செல்லும் பெண்கள் கூட கிட்டத்தட்ட 90% பேர் வசதியானவர்கள் இல்லை எனவும் அவர்கள் மூளைச்சலவை செய்யப்பட்டனர் என கூறியுள்ளனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் மருத்துவர்கள் வழக்கறிஞர்கள் கூட இந்த சமூக ஊடகங்களில் போலியான பெயர்களில் இயங்கி வந்திருப்பதும் விசாரணை ஆரம்பித்ததை அறிந்து தங்கள் பதிவுகளை அழித்து விட்டு குழுக்களில் இருந்து வெளியேறி எதையும் போலீசார் கண்டறிந்தனர்.

கணவன் உள்ளிட்ட 6 பேர் கைது

கணவன் உள்ளிட்ட 6 பேர் கைது

இந்த நிலையில் புகார் அளித்த பெண்ணின் அடையாளங்களை வெளியிடாத போலீசார் அவரது கணவர் குறித்த தகவல்களையும் வெளியிடவில்லை. ஆனால் இந்த சம்பவம் தொடர்பாக 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு பெண்ணின் கணவர் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும். அந்த நபரை அந்தப் பெண் வளைகுடா நாடுகளில் இருந்து திரும்பிய நிலையில் காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும் கணவரின் செயலால் கலக்கமடைந்து தன்னால் உயிர் வாழ முடியாது என்ற நிலையில் தான் புகார் அளித்துள்ளார் என போலீசார் கூறியுள்ளனர். இந்த சம்பவம் கேரளா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

14 ஆயிரம் கட்டணம்

14 ஆயிரம் கட்டணம்


போலீசார் நடத்திய விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது மிஸ்டர் ஸ்டுட்ஸ் என்பவர்கள் தலைமையில் அந்த குழு இயங்கி வந்தது எனவும் குழுவில் சேர வேண்டும் என்றாலே திருமணமாகாதவர்கள் என்றால் 14 ஆயிரம் ரூபாயும் திருமணம் ஆனவர்கள் என்றால் பத்தாயிரம் ரூபாயும் கட்டணமாக செலுத்த வேண்டும் குழுவில் சேர்ந்த பிறகு தங்கள் மனைவிகளின் புகைப்படத்தை அதில் பதிவிட வேண்டும். குழுவில் உள்ள வேறு யாராவது அவர் தனக்கு வேண்டும் எனக் கூறினால் அவரது மனைவியை கொடுத்துவிட்டு இவரது மனைவியை அழைத்து செல்ல வேண்டும் என்ற குழு உரையாடல்களால் போலீசாரே தலைசுற்றி மயக்கமடையும் நிலைக்கு தள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

English summary
Police in Kerala have arrested seven people for setting up groups on social networking sites including WhatsApp Telegram and Facebook and living a life of luxury by sending wives to prostitutes for money.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X