திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சபரிமலை: மகரஜோதிக்குப் பின் மாத நடைதிறப்பு நாட்களை அதிகரிப்பது தொடர்பாக ஆலோசனை

Google Oneindia Tamil News

பம்பை: சபரிமலையில் மகரஜோதிக்குப் பின் மாதந்தோறும் நடை திறப்பு நாட்களை அதிகரிப்பது தொடர்பாக தேவசம் போர்டு ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜை காலங்கள்தான் சபரிமலை சீசன். பொதுவாக இந்த சபரிமலை சீசனில் பல லட்சம் பக்தர்கள் மாலை அணிந்து இருமுடி கட்டி வருகை தருவர்.

More pilgrims to be allow to Sabarimala?

ஆனால் தற்போது கொரோனா பரவல் காலம் என்பதால் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜைகளுக்கான பக்தர்களின் வருகை பெருமளவு குறைந்தது. இது சபரிமலை கோவிலின் வருவாயை மிக மோசமாக பாதித்துள்ளது.

மகரவிளக்கு பூஜை காலங்களில் நாள்தோறும் 5,000 பக்தர்களை அனுமதிக்கலாம் என கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. ஜனவரி 19-ந் தேதியுடன் மகரஜவிளக்கு பூஜை நடை சாத்தப்படுகிறது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரவிளக்கு பூஜை.. இன்று மாலை முதல் முன்பதிவு தொடக்கம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரவிளக்கு பூஜை.. இன்று மாலை முதல் முன்பதிவு தொடக்கம்

இதனால் நடப்பாண்டில் மாதங்களில் பூஜைகளுக்கான நடை திறப்பு நாட்களை இருமடங்காக அதிகரிக்கவும் கூடுதல் எண்ணிக்கையில் பக்தர்களை அனுமதிப்பது தொடர்பாகவும் தேவசம் போர்டு ஆலோசனை நடத்தி வருகிறது என்கின்றன கேரள தகவல்கள்.

English summary
Sources said that More pilgrims to be allow to Sabarimala in this year.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X