திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஏங்க.. இதைகூட செய்ய மாட்டோமா.. நம்ம பள்ளிவாசல் இருக்கே.. போஸ்ட்மார்ட்டம் செய்ய இடம் தந்த முஸ்லிம்கள்

பிரேத பரிசோதனைக்கு பள்ளிவாசலை விட்டு தந்த முஸ்லிம்கள்

Google Oneindia Tamil News

Recommended Video

    Kerala rain 2019 | பள்ளிவாசலில் பிரேத பரிசோதனை செய்ய இடம் தந்த இஸ்லாமியர்கள்

    திருவனந்தபுரம்: "கியா பாய்.. நம்ம பள்ளிவாசல் இருக்கு.. ஏன் கவலை.. இதைகூட செய்ய மாட்டோமா" என்று கேரள நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய முஸ்லீம்கள் இடம் அளித்துள்ளனர்.

    கேரளாவில் கடுமையான மழைப்பொழிவு, வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் எத்தனையோ பேர் பலியானார்கள். பலர் மாயமாகினர். அவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் அல்லும் பகலும் ஈடுபட்டனர்.

    மண்ணோடு மண்ணாகி.. உருக்குலைந்த நிலையில் கிடந்த பல சடலங்களை கண்ணீருடன் அள்ளி வெளியே போட்டனர். இப்படித்தான் மலப்புரம் மாவட்டம் கவளப்பாறை நிலச்சரிவிலும் நடந்தது. எப்படியும் இங்கு 60-க்கும் மேல் உயிருடன் புதைந்து போய் இருக்கலாம் என்கிறார்கள். இதுவரைக்கும் இங்கு 31 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

    கணவனின் காலை கட்டி.. கொதிக்கும் எண்ணெயை ஊற்றி.. மிளகாய் பொடி தூவி.. சுத்தியலால் அடித்த கொடூர மனைவி கணவனின் காலை கட்டி.. கொதிக்கும் எண்ணெயை ஊற்றி.. மிளகாய் பொடி தூவி.. சுத்தியலால் அடித்த கொடூர மனைவி

    உருக்குலைவு

    உருக்குலைவு

    ஆனால் பெரும்பாலான உடல்கள் உருக்குலைந்து ரொம்ப மோசமாக உள்ளது. அதனால் போஸ்ட் மார்ட்டம் செய்ய ஆஸ்பத்திரிக்கு கூட கொண்டு செல்ல முடியவில்லை. கடந்த 10-ம் தேதி ஒரு உடல் கிடைத்தது. மிகவும் உருக்குலைந்த அந்த உடலை ஆஸ்பத்திரி கொண்டு செல்ல முடியவில்லை. அங்கேயே வைத்து போஸ்ட் மார்ட்டம் செய்யலாம் என்றால் மழை வேறு கொட்டி கொண்டிருந்தது.. போஸ்ட் மார்ட்டம் செய்ய வேற இடமும் இல்லை!

    அப்துல் ரகுமான்

    அப்துல் ரகுமான்

    அதனால் விழித்த போலீசார், அருகில் இருந்த மஸ்ஜித்துல் முஜாகிதீன் பள்ளிவாசலுக்கு சென்று, கமிட்டி தலைவர் முகமது அப்துல் ரகுமானிடம் போஸ்ட்மார்ட்டம் செய்ய ஏதாவது இடம் பக்கத்தில் கிடைக்குமா என்று கேட்டுள்ளனர். அதற்கு அப்துல் ரகுமான், "என்ன இப்படி கேட்டுட்டீங்க.. நம்ம பள்ளிவாசல் இருக்கும்போது, வேற இடம் ஏன் தேடி அலையறீங்க? கொஞ்சமும் யோசிக்காமல் சொன்னார்.

    தொழுகை

    தொழுகை

    இதையடுத்து, பள்ளிவாசல் அருகில், ஒரு மேஜையை இழுத்து போட்டு, போஸ்ட் மார்ட்டம் செய்ய வசதி செய்து தந்தனர். 2 உடல்கள் இங்குவைத்து போஸ்ட் மார்ட்டம் செய்யப்பட்டன. ஆனால் நாளுக்கு நாள் புதைந்த உடல்கள் கிடைத்து கொண்டே இருக்கவும், அதற்கு இடம் இல்லாமல் போனது. உடனே பெண்கள் தொழுகை நடத்தும் இடத்தையும் விட்டு கொடுத்தனர். இதுவரைக்கும் 30 பேரின் உடல்கள் இந்த பள்ளிவாசலில் வைத்துதான் போஸ்ட் மார்ட்டம் செய்யப்பட்டது.

    பாராட்டு

    பாராட்டு

    இதை நினைத்து கேரள மக்கள் நெகிழ்ந்து போய் உள்ளனர். பினராயி விஜயன்கூட நேற்றைய சுதந்திர தினவிழாவில் இதை மேற்கொள் காட்டி எடுத்து பேசி, மதசார்பின்மைக்கு உன்னத எடுத்துக்காட்டு என்று இதை பாராட்டி உள்ளார். ஆனால் அப்துல் ரகுமான் என்ன சொல்கிறார் தெரியுமா... "எல்லாருக்கும் கருணை காட்டணும்னுதான் எல்லா மதமும் போதிக்கிறது.. மக்களுக்கு தேவைப்பட்டால் பள்ளிவாசலையும் விட்டு தருவோம்" என்கிறார்.

    English summary
    Mosque offers prayer hall to be used as mortuary in Kerala and Pinarayi Vijaya has expressed his appreciation for this
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X