திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சபரிமலை போராட்டத்தை முன்னின்று நடத்திய சுரேந்திரன்.. பத்தனம்திட்டா தொகுதியில் களமிறக்கும் பாஜக!

கேரளாவில் சபரிமலை இருக்க கூடிய பத்தனம்திட்டா லோக்சபா தொகுதியின் வேட்பாளராக கேரள பாஜக பொதுச்செயலாளர் கே. சுரேந்திரன் அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரளாவில் சபரிமலை இருக்க கூடிய பத்தனம்திட்டா லோக்சபா தொகுதியின் வேட்பாளராக கேரள பாஜக பொதுச்செயலாளர் கே. சுரேந்திரன் அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.

லோக்சபா தேர்தலுக்கு இந்தியா முழுக்க அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகிறது. பாஜக தற்போது அடுத்தகட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது.

முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் விடுபட்ட பல பெயர்கள் பாஜகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்று இருக்கிறது.

இதை அனுமதிக்க முடியாது.. பொன்.ராதாகிருஷ்ணனின் பிரச்சார வாகனம் பறிமுதல்.. தேர்தல் ஆணையம் அதிரடிஇதை அனுமதிக்க முடியாது.. பொன்.ராதாகிருஷ்ணனின் பிரச்சார வாகனம் பறிமுதல்.. தேர்தல் ஆணையம் அதிரடி

முதலில் அறிவிக்கவில்லை

முதலில் அறிவிக்கவில்லை

பாஜக கடந்த வாரம் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. 184 வேட்பாளர்களை பாஜக முதற்கட்டமாக அறிவித்தது. அதில் கேரளாவில் 13 வேட்பாளர்களை அறிவித்தது. ஆனால் பாஜக போட்டியிடும் பத்தனம்திட்டா தொகுதிக்கு மட்டும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.

[குமரியில் களமிறங்கும் வசந்தகுமார் எம்எல்ஏ.. அசரவைக்கும் அரசியல் பயோடேட்டா இதுதான்! ]

பத்தனம்திட்டா ஏன்?

பத்தனம்திட்டா ஏன்?

பத்தனம்திட்டா தொகுதியில்தான் சபரிமலை கோவில் இருக்கிறது. இங்கு காங்கிரஸ் கட்சி சேர்ந்த ஆண்டோ ஆண்டனி தற்போது எம்பியாக இருக்கிறார். இந்த நிலையில் இங்கு மட்டுமே பாஜக வேட்பாளரை அறிவிக்காமல் போனது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. சபரிமலை போராட்டத்திற்கு பின் பாஜகவின் வாக்கு வங்கி கேரளாவில் அதிகமாகி இருப்பதாக கூறப்படுவதால், இந்த தொகுதி பெரிய எதிர்பார்ப்பை பெறுகிறது.

யார் அறிவிக்கப்பட்டுள்ளார்

யார் அறிவிக்கப்பட்டுள்ளார்

தற்போது பத்தனம்திட்டா தொகுதியின் பாஜக வேட்பாளராக கே.சுரேந்திரன் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் கேரள பாஜகவின் பொதுச்செயலாளர் ஆவார். இவர் கேரளாவில் பாஜக கட்சியின் முகமாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பாஜகவில் அதிக கவனம் பெற்ற வேட்பாளர் இவர்.

என்ன முக்கியம்

என்ன முக்கியம்

சபரிமலை போராட்டத்தை இவர்தான் முன்னின்று நடத்தினார். சபரிமலை போராட்டத்தின் போதே இவர் கைது செய்யப்பட்டார். சபரிமலைக்காக வரிசையாக பல போராட்டங்களை நடத்தி இவர் அப்போது சிறையில் சில நாட்கள் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

English summary
Most awaited Sabarimala candidate is here, BJP fields Gen.Sec K. Surendran from Pathanamthitta.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X