"13 முறை ரேப்".. பகீரை கிளப்பிய கன்னியாஸ்திரி.. தீர்ப்பை கேட்டு வக்கீலை கட்டிப்பிடித்து கொண்ட பிஷப்
திருவனந்தபுரம்: கன்னியாஸ்திரியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்ட பிஷப் பிரான்கோ முலக்கல் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்... இந்த தீர்ப்பு வெளியான பிறகு, அழுதபடியே தன்னுடைய வக்கீலை கட்டிப்பிடித்து கொண்டார்.. இதையடுத்து, பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி தரப்பில் அதிருப்திகள் பெருகி கொண்டிருக்கின்றது.
கேரள சீரோ மலபார் சபையின் ஜலந்தர் பிஷப்பாக இருந்தவர் பிராங்கோ முலக்கல்.. இந்தியாவின் முதல் கத்தோலிக்க பிஷப் இவர்தான்..
இவர்மீது திடீரென பாலியல் குற்றச்சாட்டு ஒன்று எழுந்தது. கடந்த 2014 முதல் 2016 வரை 13 முறை பிஷப் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக கன்னியாஸ்த்ரி ஒருவர், 2018-ம் ஆண்டு பரபரப்பு குற்றச்சாட்டை கூறியிருந்தார்.
கேரளா: இன்னொரு அபயா? கான்வென்ட் கிணற்றில் 42 வயது கன்னியாஸ்திரி சடலமாக மீட்பு- போலீஸ் தீவிர விசாரணை

கோட்டயம்
கோட்டயம் குருவிலங்காடு மடத்தில் இவ்வாறு தன்னை மாறி மாறி பலாத்காரம் செய்ததாக தெரிவித்திருந்தார். இதையடுத்து, பிஷப் மீது போலீசில் புகார் தரப்பட்டது.. ஆனால், யாரும் அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.. அதனால், கன்னியாஸ்த்ரிகள் தெருவில் இறங்கி போராட்டம் செய்தார்கள்.. அதற்கு பிறகுதான், பிஷப் பிராங்கோ 2018 செப்டம்பர் 21-ம் தேதி கைதானார்.. பிறகு அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.. முன்னதாக, தனது பிஷப் பதவியை ராஜினாமா செய்த பிஷப், தன்மீதான வழக்கை எதிர் கொள்ள ஆரம்பித்தார்.

பிஷப்
வழக்கின் விசாரணை கோட்டயம் அடிஷனல் செசன்ஸ் கோர்ட்டில் இத்தனை வருடங்களாக நடந்தது.. இந்த வழக்கில் 105 நாள் ரகசிய விசாரணைக்குப் பிறகு நேற்றைய தினம் தீர்ப்பு வழங்குவதாகவும் அறிவிக்கப்பட்டது... தீர்ப்பு சொல்வதை தொடர்ந்து கோர்ட் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த தீர்ப்பை கேட்ட, பொதுமக்கள் ஆர்வமானார்கள்.. இதையடுத்து, பிஷப் பிராங்கோ பின்வாசல் வழியாக கோர்ட்டுக்கு வந்து சேர்ந்தார்...

தீர்ப்பு
பின்னர், வலுவான சாட்சிகள் எதும் இல்லாததால் பிஷப்பை இந்த வழக்கிலிருந்து விடுவிப்பதாக கோர்ட் அறிவித்தது. இந்த தீர்ப்பு பல தரப்பட்டோருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.. ஆனால், பிஷப் மட்டும் படுகுஷியாக காணப்பட்டார்.. தீர்ப்பு வெளியானபிறகு கோர்ட்டில் இருந்து வெளியே வந்த பிஷப், அழுதபடியே தனக்காக வாதாடிய வழக்கறிஞரை கட்டிப்பிடித்து கொண்டார்..

பிஷப் பிராங்கோ
அப்போது பிஷப் பிராங்கோவிடம் தீர்ப்புபற்றி கேட்டதற்கு, "கடினமான காலங்களில் தனக்கு உறுதுணையாய் நின்ற மக்களுக்கு நன்றி.. கடவுளின் தீர்ப்பே கோர்ட்டின் தீர்ப்பாக வர வேண்டும் என்று நான் பிரார்த்தனை செய்தேன்... கடவுளும் கடவுளின் சக்தியும் இருப்பதை உலகிற்கு காட்ட வேண்டிய நபர் நான்... அதற்கான வாய்ப்பு எனக்கு கிடைத்தது... மதம், ஜாதி வேறுபாடின்றி பிரார்த்தனையில்தான் சக்தி உண்டு என்பதை அனைவரும் புரிந்து கொண்டனர். காய்க்கும் மரத்தில்தான் கல்லெறிவார்கள்.. அதனால் நான் பெருமைப்படுகிறேன்... எல்லாரும் ஜெபம் செய்யுங்கள்" என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் பிஷப்.

சர்ச்சை
கேரளாவில் மிக முக்கியமான தீர்ப்பாக இது அமைந்துள்ளது.. பிஷப்புக்கு ஜாமீன் தந்தபோதே அதை பலரும் அன்று எதிர்த்தனர்.. ஆனால், இன்று கோர்ட் விடுதலை செய்துள்ளது, அதற்கு மேல் சர்ச்சையை கிளப்பிவிட்டு வருகிறது.. பிஷம் குற்றம் செய்ததாக தெளிவுபடுத்துவதில் அரசு தரப்பு தோற்றுவிட்டதாக நீதிபதி சொன்ன காரணமும், விவாதத்தை கிளப்பி விட்டுள்ளது..!

கன்னியாஸ்திரி
அந்த வகையில், கன்னியாஸ்திரி சார்பாக வழக்கஞர் சந்தியா ராஜு பேசும்போது, "பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரிக்கு மனரீதியான பாதிப்புகளை, பிஷப் தரப்பில் நிறைய உருவாக்கினார்கள்.. இந்த பாதிப்பினால், கன்னியாஸ்த்ரி மன ரீதியான உளைச்சலுக்கு ஆளானார் என்பதே உண்மை என்றார்.. அதேபோல, சமூக போராளியும் எழுத்தாளருமான ஜாஸ்மி என்பவர் இந்த வழக்கு குறித்து சொல்லும்போது, "இந்த பாலியல் கொடுமைக்கு ஒரு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் 5 பேர் கொண்ட ஒரு குழுவை இதற்காகவே ஆரம்பித்தோம்.. அதில் சம்பந்தப்பட்ட பிஷப் மீதும் நடவடிக்கை எடுக்க கோரினோம்.

நடவடிக்கை
அதற்கு பிறகு, இது தொடர்பாக நிறைய முறை சர்ச்சில் புகார் தந்தோம்.. ஆனால் அந்த புகார்கள் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.. மாறாக, பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி பற்றியே மோசமாக பேசினார்கள்.. அவதூறு பரப்பினார்கள்.. பிஷப்பை காப்பாற்றுவதற்காகவே இப்படி சொன்னார்கள்.. இந்த வழக்கு என்றில்லை, அந்த பிஷப் மீது யார் என்ன புகார் தந்தாலும், அவருக்கு எதிரான நடவடிக்கையை சர்ச்சில் எடுப்பதில்லை" என்றார்.

அவதூறு
அதேபோல, வழக்கறிஞர் ஷைஜூ சொல்லும்போது, ஆரம்ப முதலே கன்னியாஸ்திரி மீது சோஷியல் மீடியாவில் தவறான தகவல்களை பரப்பினார்கள்.. அதாவது முஸ்லிம் நபர்களிடம் கன்னியாஸ்திரி காசு வாங்கி கொண்டு, பிஷப் மீது போலியாக குற்றஞ்சாட்டுகிறார் என்ற பகீரை கிளப்பினார்கள்.. பிறகு சர்ச்சில் லட்சக்கணக்கான பணத்தை கன்னியாஸ்திரி மோசடி செய்துவிட்டதாக சொன்னார்கள்..

பணமோசடி
முதலில் பண மோசடி குறித்த புகார் கோர்ட்டில் எடுபடவில்லை.. அதனால்தான், அவரது கேரக்டரை டேமேஜ் சோஷியல் மீடியாவில் செய்ய ஆரம்பித்தனர்.. இப்படியெல்லாம் நெருக்கடி தந்தால், வழக்கை கன்னியாஸ்திரி திரும்ப பெற்று கொள்வார் என்றும் அவர்கள் நம்பினார்கள்.. எதற்குமே கன்னியாஸ்திரி அசரவில்லை.. பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரியின் எப்ஐஆரை படித்தாலே, அவர் எந்த அளவுக்கு வேதனைக்கு ஆளாகி இருக்கிறார் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும்" என்றார்.