திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மூணாறு: 3வது நாளாக மண்ணுக்குள் புதைந்துள்ள தொழிலாளர்கள்.. மீட்பு பணியில் தாமதம் ஏன்? என்ன காரணம்?

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: மூணாறில் நிலச்சரிவில் சிக்கியுள்ளோரை மீட்பதில் பெரும் சிரமம் நிலவுகிறது. கடினமான சூழலால் மீட்பு பணிகள் தாமதமாகின்றன.

கேரள மாநிலம் மூணாறு 2 நாட்களுக்கு முன்பு கனமழை காரணமாக பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. கண்ணன் தேவன் டீ எஸ்டேட் நிறுவனத்துக்கு சொந்தமான தேயிலை தோட்ட தொழிலாளர்கள் இங்கு பல்வேறு வீடுகளில் தங்கி இருந்தனர்.

இதில் 25 வீடுகள் அப்படியே மண்ணுக்குள் புதைந்துள்ளன. 80க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நிலச்சரிவில் சிக்கி உள்ளனர்.

மூணாறில் இருந்து வந்த உதவிக்கரம்.. குரங்கணி மீட்புப்பணியில் களம் இறங்கிய கேரள போலீஸ்! மூணாறில் இருந்து வந்த உதவிக்கரம்.. குரங்கணி மீட்புப்பணியில் களம் இறங்கிய கேரள போலீஸ்!

35 பேர்

35 பேர்

இன்று காலை வரையிலான நிலவரப்படி, பலி எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது. இரண்டு நாட்களுக்கு மேலே இன்னும் பலரும் மணலுக்குள் புதைந்து இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்ற அச்சம் நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் சுமார் 35 பேர் மணலுக்குள் புதையுண்டு இருக்கலாம் என்ற சந்தேகம் நிலவுகிறது.

மோப்ப நாய்கள்

மோப்ப நாய்கள்

தேசிய பேரிடர் மீட்பு படையினர், மோப்ப நாய்களை கொண்டுவந்துள்ளனர். எங்கெல்லாம் உடல்கள் இருக்கின்றனவோ அதை ஓரளவுக்கு மிகச்சரியாக நாய்கள் மோப்பம் பிடிக்கின்றன. அதே நேரம் மூணாறு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் காற்று காரணமாகவும் மீட்பு படையினர் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறார்கள்.

கடும் குளிர்

கடும் குளிர்

இதுதொடர்பாக மீட்புக் குழுவைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், மேலே செல்ல செல்ல வெப்பநிலை மாறுபாடு அடைகிறது. கடுமையான குளிர் நிலவுகிறது. தொடர்ந்து 2 மணி நேரத்துக்கும் மேலாக மீட்பு பணிகளில் ஈடுபடுவது இயலாத காரியமாகி விடுகிறது. எனவே ஓய்வெடுத்து ஓய்வெடுத்து தான் மீட்பு பணிகளில் ஈடுபடுகிறோம்.

Recommended Video

    Munnar Landslide: சிக்கிய தமிழ் தேயிலை ஊழியர்கள்
    மழை

    மழை

    திடீரென பெய்யக்கூடிய மழையும் எங்களை முடக்கிப் போட்டு விடுகிறது. அதற்கு மேலும் பணியாற்றினால் மீட்பு பணியில் ஈடுபடுவோரின் உயிருக்கு உத்தரவாதமில்லாத சூழ்நிலைதான் நிலவுகிறது. எனவேதான் மீட்பு பணிகளில் பெரும் சிரமம் நிலவுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    English summary
    Munnar landslide rescue operations has been affected due to heavy rain and chill climate, says NDRF team members. The sniffing dogs also come to rescue operation in Munnar where the death toll is rising to 45 on today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X