திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மூணாறு நிலச்சரிவு.. பலி எண்ணிக்கை 43ஆக உயர்வு.. தொடரும் மழை.. மீட்பு பணியில் சிக்கல்!

Google Oneindia Tamil News

கேரளா: இடுக்கி நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 43ஆக உயர்ந்துள்ளது. நேற்று வரை 27 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் இன்று மேலும் 16 பேரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. கேரளாவில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது.

Recommended Video

    Idukki Landslide: உயிரிழந்தவர்களில் 17 தமிழர்கள்

    கேரளாவில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. கேரளாவில் வயநாடு, இடுக்கி, கண்ணூர், தலைசேரி ஆகிய பகுதிகளில் மிக அதிக கனமழை பெய்து வருகிறது.

    இந்த நிலையில் கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் ராஜமாலா பகுதியில் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. ராஜமலை பெட்டிமுடி கன்ணண் தேவன் டீ எஸ்டேட்டில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டு அங்கிருந்து வீடுகள் புதையுண்டன.

    முல்லைப்பெரியாறு அணை...வெள்ளப்பெருக்கு...மக்களுக்கு இடுக்கி மாவட்டக் கலெக்டர் எச்சரிக்கை!! முல்லைப்பெரியாறு அணை...வெள்ளப்பெருக்கு...மக்களுக்கு இடுக்கி மாவட்டக் கலெக்டர் எச்சரிக்கை!!

    வீடுகள் எல்லாம்

    வீடுகள் எல்லாம்

    மொத்தமாக வழியில் இருந்த வீடுகளை மண் மூடியது. மொத்தம் 25 வீடுகள் வழியில் இருந்தது. இந்த வீடுகளை எல்லாம் மொத்தமாக மணல் மூடியது. இதில் 80 பேர் வரை மணலுக்கு உள்ளே சிக்கி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இவர்களை மீட்கும் பணி தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.

    43 பேர் பலி

    43 பேர் பலி

    இடுக்கி நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 43ஆக உயர்ந்துள்ளது. நேற்று வரை 27 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் இன்று மேலும் 16 பேரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. மேலும் மாயமான 38 பேரை தேடும் பணி 3வது நாளாக தொடர்கிறது. விபத்து நடந்த இடத்தில் 78 பேர் தங்கியிருந்தாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதில் 12 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், 43 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. மீதமுள்ளவற்றைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கனமழை காரணமாக மீட்பு பணி மிகவும் சவாலாக இருப்பதாக கூறப்படுகிறது.

    மழை எப்படி

    மழை எப்படி

    இன்னொரு பக்கம் கேரளாவில் வயநாடு, இடுக்கி, மலப்புரம் மாவட்டத்திற்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அங்கு தற்போதும் விடாமல் மலை பெய்து வருகிறது. இதனால் அங்கு மீட்பு பணிகளை செய்வதும் மிகவும் கடினமாக மாறியுள்ளது. நேற்று வரை மீட்கப்பட்டவர்களில் 17 பேர் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

    தமிழர்கள் எப்படி

    தமிழர்கள் எப்படி

    நிலச்சரிவில் சிக்கியவர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள் என்பதால் அங்கு தமிழ் தோட்ட தொழிலாளர்கள் இடையே பதற்றம் நிலவி வருகிறது . இன்று மீட்கப்பட்ட பெண்ணின் பெயர் சரோஜா என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவரும் தமிழகத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு நிறைய தமிழ் குடும்பங்கள் வசிக்கிறது.

    English summary
    Munnar Landslide: So far 28 bodies recovered from the place including 17 Tamils in Kerala.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X