திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஜெயலலிதா பாணியில் மோடி.. குருவாயூரப்பன் மீது மிகுந்த பக்தி

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்திலுள்ள குருவாயூரப்பன் கோவிலில் இன்று துலாபாரம் வழிபாடு செய்தார் பிரதமர் நரேந்திர மோடி.

கேரள மாநிலம் குருவாயூரில் அமைந்துள்ள கிருஷ்ணர் கோவிலில் துலாபாரம் வழிபாடு என்பது மிகவும் புகழ் பெற்றது.

Narendra Modi and Jayalalitha both are devotees of Guruvayur Krishnan Temple

ஒரு குறிப்பிட்ட பிரார்த்தனை நடக்க வேண்டும் என்று வேண்டிக் வேண்டிக் கொள்வார், தங்களின் எடைக்கு சமமாக பழம், பூ போன்ற பொருட்களை இறைவனுக்கு சமர்ப்பிப்பது தான் துலாபாரம் வழிபாட்டு முறையின் நடைமுறையாகும்.

பொதுவாக தமிழக அரசியல்வாதிகளில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு குருவாயூர் கண்ணன் கோயில் மீது தனிப்பட்ட ஈர்ப்பு இருந்ததை மறுக்க முடியாது. தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக ஜெயலலிதா, பல கோவில்களிலும் சிறப்பு பூஜைகள், யாகங்கள் நடத்துவது வழக்கம். அதுபோல, தேர்தலில் வெற்றி பெற்றால் குருவாயூர் கோவிலுக்கு யானை காணிக்கை செலுத்துவதாக கூட ஒருமுறை வேண்டிக் கொண்டார் ஜெயலலிதா.

குருவாயூர் கோவிலில் எடைக்கு எடை தாமரை பூ துலாபாரம் கொடுத்து வேண்டுதலை நிறைவேற்றினார் பிரதமர் மோடி! குருவாயூர் கோவிலில் எடைக்கு எடை தாமரை பூ துலாபாரம் கொடுத்து வேண்டுதலை நிறைவேற்றினார் பிரதமர் மோடி!

இதன்படி, குருவாயூர் கோயிலுக்கு யானைகளை காணிக்கையாக செலுத்திய வரலாறு உண்டு. இதே போன்று தான், அரசியலில் அவரது நண்பராக அறியப்பட்ட நரேந்திரமோடியும் குருவாயூரப்பன் மீது மிகுந்த பக்தி கொண்டவர்.

கடந்த 2008ஆம் ஆண்டு குஜராத் முதல்வராக மோடி பதவி வகித்தபோது குருவாயூர் கோவிலில் எடைக்கு எடை தாமரை மலர்களை அவர் துலாபாரம் கொடுத்தார்.

இந்த நிலையில் மீண்டும் என்று குருவாயூரப்பன் கோவிலில் மோடி துலாபாரம் வழிபாடு நடத்தி உள்ளார். மொத்தம் 112 கிலோ தாமரை மலர்கள் அவரது எடைக்கு ஈடாக துலாபாரம் தர பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த மலர்கள், கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள புகழ் பெற்ற தோவாளை மலர் மார்க்கெட்டிலிருந்து வாங்கிச் செல்லப்பட்டுள்ளது.

English summary
Pm Narendra Modi and then chief minister of Tamilnadu Jayalalitha both or are devotees of Guruvayur Krishnan Temple.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X