திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நான் நாட்டிற்காக உயிர் கொடுக்க பிறந்த போர் வீரன்.. விமானி தீபக்கின் தீரம் குறித்து உருக்கமான கவிதை

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கோழிக்கோடு விமான விபத்தில் பலியான விமானி தீபக் வசந்த் சாத்தேவின் நண்பர் நிலேஷ் சாத்தே அவர் குறித்து உருக்கமான பதிவை தனது பேஸ்புக்கில் போட்டுள்ளார். அதில் ஒரு போர் வீரன் எழுதிய கவிதை தனது நினைவுக்கு வருவதாகவும் தெரிவித்தார்.

Recommended Video

    Kerala விமான விபத்தில் பலியான Pilot Deepak Sathe யார் தெரியுமா? | Oneindia Tamil

    கோழிக்கோடு விமான நிலையத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று ரன்வேயில் இறங்கிய போது சறுக்கி விழுந்து இரண்டாக பிளந்தது. இந்த விபத்தில் காக்பிட்டில் இருந்த விமானி தீபக் வசந்த் சாத்தே சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டார்.

    முதல் முறையல்ல.. இதே கரிப்பூரில் 27 முறை விமானத்தை இறக்கியுள்ளார் தீபக்.. மத்திய அமைச்சர்முதல் முறையல்ல.. இதே கரிப்பூரில் 27 முறை விமானத்தை இறக்கியுள்ளார் தீபக்.. மத்திய அமைச்சர்

    எக்ஸ்பிரஸ்

    எக்ஸ்பிரஸ்

    இதுகுறித்து அவரது நண்பர் நிலேஷ் சாத்தே தனது பேஸ்புக்கில் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் கூறுகையில் எனது நண்பர் தீபக் இறந்துவிட்டார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயிலிருந்து பயணிகளை அழைத்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் விமானியாக இருந்தார்.

    கோழிக்கோடு

    கோழிக்கோடு

    இந்த விமானம் நேற்று இரவு கோழிக்கோடில் உள்ள கரிப்பூர் சர்வதேச விமான நிலையத்தில் சறுக்கி விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இருந்து நாம் என்ன தெரிந்துக் கொண்டோம் என்பதை பார்ப்போம். லேண்டிங் ஆகும் போது கியர்கள் இயங்கவில்லை. இந்திய விமான படையின் முன்னாள் விமானி விமானம் தீப்பிடிப்பதிலிருந்து காக்க 3 முறை விமான நிலையத்தை சுற்றி எரிப்பொருளை காலி செய்தார்.

    180 பயணிகள்

    180 பயணிகள்

    அதனால்தான் விமானம் விழுந்து விபத்துக்குள்ளான நிலையிலும் எந்த ஒரு புகையும் காண முடியவில்லை. விமானம் விபத்தில் சிக்குவதற்கு முன்பே என்ஜினை நிறுத்திவிட்டார் தீபக். மூன்றாவது முறை விமானத்தை தரையிறக்கினார். அதன் வலது பகுதி வெடித்து சிதறியது. இந்த விபத்தில் விமானி இறந்த நிலையிலும் 180 பயணிகளின் உயிரை காப்பாற்றியுள்ளார் என்றார்.

    போர்வீரன் கவிதை

    நாட்டு மக்களை காப்பாற்றுவதற்காக ஒரு போர் வீரன் தனது உயிரையே தியாகம் செய்வதாகவும் தீபக்கின் தியாகத்தை பார்க்கும் போது ஏற்கெனவே ஒரு போர் வீரன் எழுதிய கவிதை எனக்கு நினைவுக்கு வருவதாகவும் நிலேஷ் கூறியுள்ளார். அந்த கவிதை பின்வருமாறு:

    நான் போர் களத்தில் இறந்தால்
    என்னை பெட்டியில் அடைத்து வீட்டிற்கு அனுப்பிவிடுங்கள்

    நான் வாங்கிய பதக்கங்களை என் மார்பில் வையுங்கள்
    என் தாயிடம் நான் சாதித்ததை கூறுங்கள்

    என் தந்தை எதற்காகவும் தலைகுனிய கூடாது என சொல்லுங்கள்
    இன்றிலிருந்து அவர் எதற்காகவும் பதற்றமடைய மாட்டார்

    என் சகோதரனை நன்றாக படிக்கச் சொல்லுங்கள்
    என் சகோதரியை கவலைப்பட வேண்டாம் என சொல்லுங்கள்

    நான் இன்னொரு முறை பிறக்கப் போவதில்லை
    மேலும் எனது அன்பானவர்கள் அழ வேண்டாம்...

    ஏனென்றால் நான் நாட்டுக்கு உயிர் தியாகம் செய்ய பிறந்த போர் வீரன்...........

    இவ்வாறாக அந்த கவிதை இருக்கிறது.

    English summary
    Pilot Deepak Sathe's friend Nilesh Sathe writes emotional post and recalls poem about him who died in Kozhikode plane crash.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X