திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்திய அரசியலில் அரிதான நற்பண்புகளுக்கு உதாரணம் நிர்மலா சீதாராமன்: சசிதரூர் ட்விட்

Google Oneindia Tamil News

Recommended Video

    Shashi Tharoor injured: கோயிலில் துலாபாரம் கொடுத்த போது இரும்பிக் கம்பி தலையில் விழுந்து சசிதரூர் காயம்

    திருவனந்தபுரம்: இந்திய அரசியலில் காணக்கிடைக்காத அரிதான நற்பண்புகளுக்கு உதாரணமாக பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளருமான சசிதரூர் தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.

    திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளரான சசிதரூர் நேற்று காலை திருவனந்தபுரம் காந்தாரியம்மன் கோயிலில் துலாபாரம் கொடுத்தார். தனது எடைக்கு இணையாக வாழைக் குலையை காணிக்கை செலுத்தினார். அப்போது எதிர்பாராதவிதமாக தராசு உடைந்து அதன் கொக்கி அவரது தலையில் விழுந்ததில் சசிதரூருக்கு தலைப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது

    Nirmala Sitharaman is Example of rare virtues in politics- Shashi Tharoor

    இந்த அசம்பாவித சம்பவத்தால் சசி தரூருக்கு தலையிலிருந்து ரத்தம் கொட்டியது. இதனையடுத்து உடனடியாக அங்குள்ள அரசு பொது மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

    ஏன் பாஜகவை ஆதரிக்கிறாய்? ஜடேஜாவிற்கு எதிராக குடும்பமே போர்க்கொடி.. காங்கிரசில் ஐக்கியம்ஏன் பாஜகவை ஆதரிக்கிறாய்? ஜடேஜாவிற்கு எதிராக குடும்பமே போர்க்கொடி.. காங்கிரசில் ஐக்கியம்

    இந்நிலையில் கேரள மாநிலத்திற்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய சென்றுள்ள மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், மருத்துவமனைக்கு நேரில் சென்று சசி தரூரை சந்தித்து நலம் விசாரித்தார்.

    இது தொடர்பான புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சசிதரூர், கேரள மாநிலத்தில் தீவிர அரசியல் பிரச்சாரத்தின் இடையேயும் தம்மை வந்து நிர்மலா சீதாராமன் சந்தித்து நலம் விசாரித்ததில் மகிழ்ச்சி என குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்திய அரசியலில் ஒருவருக்கொருவர் மதிப்பது அரிதான ஒன்று. அந்த வகையில் தம்மை வந்து சந்தித்து நலம் விசாரித்த நிர்மலா சீதாராமன் சிறந்த உதாரணமாவார் என புகழ்ந்துள்ளார்.

    தேசிய அரசியலில் யார் அடுத்து ஆட்சியை பிடிப்பது என்பதில் காங்கிரஸ் - பாரதிய ஜனதா இடையே கடுமையான போட்டி நிலவி வரும் சூழலில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மூத்த காங்கிரஸ் தலைவரை மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்துள்ளது ஆரோக்கியமான அரசியலுக்கு முன்னோட்டமாக உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    English summary
    Former Union minister Shashi Tharoor has praised union defense minister Nirmala Sitharaman as she is an Example of rare virtues in politics.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X