திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தீவிரம் அடைகிறது.. விரைவில் வரும் நிசார்கா புயல்.. செம மழை பெய்ய போகிறது.. கேரளாவிற்கு மஞ்சள் அலர்ட்

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: நிசார்கா புயல் காரணமாக கேரளா, குஜராத் மற்றும் மகாராஷ்டிராவிற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    ஆம்பனை தொடர்ந்து உருவாகும் அடுத்த புயல்.. எங்கு தாக்கும்?

    அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. அரபிக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி புயலாக மாறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

    இந்த புயல் ஒருவேளை உருவானால், இதற்கு நிசார்கா என்று பெயர் வைக்கப்படும். ஜூன் 2-3ல் இந்த புயல் காரணமாக மழை ஏற்பட வாய்ப்புள்ளது.

    வருகிறது வருகிறது "நிசார்கா".. ஆம்பனை தொடர்ந்து உருவாகும் அடுத்த புயல்.. எங்கு தாக்கும்? எப்போது தாக்கும்?

    எங்கு வீசும்

    எங்கு வீசும்

    குஜராத் மற்றும் மகாராஷ்டிராவிற்கு இதனால் தற்போது புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிசார்கா புயல் காரணமாக அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று இந்தியா வானிலை மையம் எச்சரித்துள்ளது. கடலோர பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியா வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது.

    குஜராத் நிலை

    குஜராத் நிலை

    இந்த நிலையில் இந்த நிசார்கா புயல் காரணமாக குஜராத், மகாராஷ்டிரா மற்றும் கேரளாவில் கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் இந்த நிசார்கா புயல் காரணமாக கடுமையாக மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் ஆனந்த் , சூரத், நவ்சாரி, வாபி, பரூச் ஆகிய பகுதிகளில் சூறாவளி காற்று வீசும், அங்கு கடுமையாக மழை பெய்யும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    மகாராஷ்டிரா நிலை

    மகாராஷ்டிரா நிலை

    ஆனால் நிசார்கா புயல் காரணமாக மகாராஷ்டிராவில் கடுமையாக மழை பெய்யும். ஆனால் அங்கு புயல் நேரடியாக தாக்க வாய்ப்பு இல்லை. அதே சமயம் நிசார்கா காரணமாக கேரளாவில்தான் மிக அதிக கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. அடுத்த ஒரு வாரம் அங்கு மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் அங்கு பல பகுதிகளுக்கு தற்போது மஞ்சள் எச்சரிக்கை (Yellow alert) விடுக்கப்பட்டுள்ளது.

    எங்கு எல்லாம்

    எங்கு எல்லாம்

    திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், மலப்புரம் பகுதிகளில் ஜூன் 1ம் தேதி மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜூன் 2ம் தேதிக்கு எர்ணாகுளம், திருச்சூர், மலப்புரம், கோழிக்கோடு, கசார்கோடு ஆகிய பகுதிகளில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜூன் 3ம் தேதிக்கு கண்ணூர் , காசர்கோடு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    English summary
    Nisarga Storm: IMD warns heavy rain in Kerala, Maharashtra and Gujarat states.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X