திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வெளுத்தெடுக்கும் கனமழை.. சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை!

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் ஐப்பசி பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடைத் திறக்கப்பட்டது. ஆனால் தொடர் மழை காரணமாக நாளையும் நாளை மறுநாளும் பக்தர்களுக்கு அனுமதியில்லை.

Recommended Video

    கேரளாவை உலுக்கி எடுக்கும் பேய் மழை…. 8 பேர் பலி.. 22 பேர் மண்ணில் புதைந்த சோகம்

    அரபிக் கடல் மற்றும் வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு பகுதியால் கேரளாவில் நேற்றிரவு முதல் பரவலாக கனமழை கொட்டி வருகிறது. இதனால் கேரளாவில் பத்தினம்திட்டா, எர்ணாகுளம், கோட்டயம், இடுக்கி, திரிச்சூர் ஆகிய 5 மாவட்டங்களில் மிக அதிகமான கனமழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    3 நாட்களுக்கு.. ரேஷன் கடைகள் இரவு 7 மணி வரை இயங்கும்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு3 நாட்களுக்கு.. ரேஷன் கடைகள் இரவு 7 மணி வரை இயங்கும்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

    இந்த நிலையில் இடுக்கி மாவட்டத்தில் உள்ள பீர்மேடு பகுதியில் 30 செ.மீ. மழை பெய்துள்ளது. இதனால் எங்கு பார்த்தாலும் தண்ணீர் தேங்கியுள்ளது. இந்த நிலையில் ஐப்பசி மாத பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது.

    சபரிமலை ஐயப்பன்

    சபரிமலை ஐயப்பன்

    ஒவ்வொரு மாதத்தின் முதல் 5 நாட்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறக்கப்படுவது வழக்கம். மண்டல பூஜை, மகர விளக்கு பூஜை காலங்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருப்பதால் இந்த 5 நாட்களில் சபரிமலைக்கு பக்தர்கள் பயணம் மேற்கொண்டு சுவாமி தரிசனம் செய்வார்கள்.

    சபரிமலைக்கு தடை

    சபரிமலைக்கு தடை

    கடந்த ஓராண்டாக கொரோனா பரவல் காரணமாக அதிகளவில் பக்தர்கள் சபரிமலைக்கு வருவது தடை செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு கொரோனா சற்று குறைந்ததை தொடர்ந்து கடந்த மண்டல மற்றும் நகர விளக்கு பூஜை காலங்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

    தரிசனத்திற்கு அனுமதி

    தரிசனத்திற்கு அனுமதி

    ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. ஆன்லைனில் முன்பதிவு செய்த தினசரி 15 ஆயிரம் பக்தர்களுக்கு தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சபரிமலை கோயிலுக்குச் செல்ல விரும்பும் பக்தர்கள் கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸ்கள் செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழ் அல்லது கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் சான்றிதழ் கொடுக்க வேண்டும்.

    பத்தனம்திட்டா

    பத்தனம்திட்டா

    இந்த நிலையில் கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக வரும் செவ்வாய்கிழமை வரை பக்தர்கள் சபரிமலை கோயிலுக்கு வர அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட 5 மாவட்டங்களில் பத்தனம்திட்டாவும் ஒன்று ஆகும். அந்த பத்தனம்திட்டா மாவட்டத்தில்தான் சபரிமலை கோயில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Sabarimala temple opened for Ippasi month occasion but tomorrow and day after tomorrow no devottees allowed.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X