திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மோடியை மீண்டும் ஆட்சிக்கு வர விடக்கூடாது… முதல்வர் பினராய் விஜயன் ஆவேச பேச்சு

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: பிரதமர் மோடியை மீண்டும் ஆட்சிக்கு வர விடக்கூடாது என்று கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் காட்டமாக தெரிவித்துள்ளார் .

சபரிமலை பெண்களே அனுமதிக்கலாம் என்ற உத்தரவை அமல்படுத்திய முதலமைச்சர் பினராய் விஜயன் எதிராக பாஜகவினர் பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்துச் சென்றனர்.

அதேநேரம், சபரிமலை விவகாரத்தை தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளாட்சித் தேர்தலில் பெரும் சரிவை கண்டது. மேலும் கேரளா மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் போது கேட்கப்பட்ட உரிய நிதி மத்தியிலிருந்து கிடைக்கவில்லை.

தலைநகர் டெல்லியை அச்சுறுத்தி வரும் பன்றிக்காய்ச்சல்... இதுவரை 6 பேர் பலி தலைநகர் டெல்லியை அச்சுறுத்தி வரும் பன்றிக்காய்ச்சல்... இதுவரை 6 பேர் பலி

பாஜகவுக்கு எதிரான பிரச்சாரம்

பாஜகவுக்கு எதிரான பிரச்சாரம்

இதனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி காங்கிரஸ் இடையிலான போட்டியை விட பாஜகவுக்கு எதிரான பிரச்சாரம் தற்போது தேர்தலில் களைகட்டியுள்ளது. அந்த வகையில், கேரளாவில் ஆளும் கட்சியாக உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வருகிற நாடாளுமன்ற தேர்தலில் 16 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதன் கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்டு 4 தொகுதியில் போட்டியிடுகிறது.

வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்

வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்

இந்த நிலையில், திருவனந்தபுரம் தொகுதியில் களமிறங்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் திவாகரனை அறிமுகப்படுத்தும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதலமைச்சர் பினராய் விஜயன் கலந்து கொண்டு பேசுகையில், பிரதமர் மோடியின் 5 ஆண்டுகால ஆட்சியில் விவசாயிகள் தற்கொலை அதிகரித்துள்ளது என்றார்.

வேலையில்லாத் திண்டாட்டம்

வேலையில்லாத் திண்டாட்டம்

அதேபோல் பிரதமர் தலைமையிலான அரசின் பணமதிப்பிழப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளால் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்ததோடு, மக்களும் இன்னலுக்கு ஆளாகி வருவதாக குற்றம்சாட்டினார்.

நமது கடமை

நமது கடமை

ஆகையால், மோடி மீண்டும் பிரதமராக வர விடாமல் தடுப்பது நமது கடமை என்றும் அவர் கூறினார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கீழ், அதன் வழிகாட்டுதல்படி பாஜக செயல்பட்டு வருவதாகவும், நாட்டை அடமானம் வைப்பது அவர்களின் வேலையாக இருப்பதாகவும் கூறினார்.மதம், மொழி ரீதியில் பிரதமர் மோடி ஆட்சி செய்கிறார் என்றும் அவரை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் எனவும் தொண்டர்கள் மத்தியில் சூளுரைத்தார்.

English summary
Kerala Chief Minister Pinarayi Vijayan said that Our duty is to remove Prime Minister Modi's rule
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X