திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

130 ஆண்டுகளாக திறக்கப்படாத புதையல் பெட்டகங்கள்.., மலைக்க வைக்கும் பத்மநாபசுவாமி கோயில் வரலாறு!

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: 130 ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ள புதையல் பெட்டிகள், அறைகள் என திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் வரலாறு மலைக்க வைக்கிறது.

Recommended Video

    The Padmanabhaswamy Temple | The Mystery Behind World Richest Temple In Tamil

    திருவிதாங்கூர் அரச பரம்பரையே சொத்துகளை உரிமை கொண்டாடலாம் என உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்தது. அப்படிப்பட்ட கோயிலின் வரலாற்றை காண்போம்.

    பத்பநாபசுவாமி கோயிலில் உள்ள அனந்தபத்மநாபனின் சிலை மூலிகைகள், ரெசின் மற்றும் மணல் கலவையை கொண்ட கடுசர்க்கரா எனும் அஷ்டபந்தன கலவையால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. முதலில் இந்த கோயில் முதலில் இலுப்பை மரத்தினால் கட்டப்பட்டது.

     சயன கோலத்தில் திருமால்.. கணக்கிட முடியாத பொக்கிஷங்கள்.. பத்மநாப சுவாமி கோவில் வரலாறு என்ன? சயன கோலத்தில் திருமால்.. கணக்கிட முடியாத பொக்கிஷங்கள்.. பத்மநாப சுவாமி கோவில் வரலாறு என்ன?

    நேபாளம்

    நேபாளம்

    ஆனால் அதன் பின்னர் கிரானைட் கற்களால் மாற்றி அமைக்கப்பட்டது. இங்கு ஒரு ஆண்டை குறிக்கும் விதத்தில் 365 தூண்கள் இந்த கோயிலில் காணப்படுகிறது. கோயிலின் மூலவர் நேபாளத்தில் காந்தகி ஆற்றில் இருந்து கொண்டு வரப்பட்ட சாளகிராம கற்களினால் ஆனது. சாள கிராம கற்கள் மிகவும் புனிதமான கற்களாகும்.

    விலைமதிப்பில்லாத நகைகள்

    விலைமதிப்பில்லாத நகைகள்

    இந்த கோயிலில் 6 பெட்டகங்கள் உள்ளன. இந்த பெட்டகங்களில் உள்ள விலைமதிப்பில்லாத நகைகள், புதையல்கள் குறித்து மதிப்பிட அந்த பெட்டகங்களை திறப்பது என்பது 10 ஆண்டுகளுக்கும் மேலாக சட்ட போராட்டத்திற்கு வழிவகுத்துள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டு கோபால் சுப்பிரமணியன் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவை உச்சநீதிமன்றம் நியமித்தது.

    இரு அறைகள்

    இரு அறைகள்

    கடந்த 130ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருந்த இரு அறைகள் உள்பட இந்த பெட்டிகளை திறக்க குழு அமைக்கப்பட்டது. ஒரு பெட்டகத்தை கோபால் சுப்பிரமணியம் குழுவினர் திறந்து பார்த்த போது அதில் தோராயமாக ஒரு லட்சம் கோடி மதிப்பிலான நகைகள் கண்டெடுக்கப்பட்டது. திறந்த அந்த ஒரு பெட்டியில் நெப்போலியன், ரோமன், பிரிட்டிஷ் காலத்து தங்க காசுகள் கொண்ட பைகள் இருந்தன. சில பைகள் 800 கிலோ எடை கொண்டதாகவும் இருந்தது.

    30 கிலோ மதிப்பிலான பொருட்கள்

    30 கிலோ மதிப்பிலான பொருட்கள்

    மேலும் பண்டிகை காலத்தில் பயன்படுத்த ஏராளமான தங்கப் பானைகள், தங்க நாற்காலிகள் இருந்தன. வைரக் கற்கள் பதித்த தங்கத்தினாலான விஷ்ணுவின் சிலை 4-க்கு 3 அடி உயரத்தில் இருந்தது. 28 அடி தங்க கிரீடமும் இருந்தது. இது மட்டுமில்லாமல் 30 கிலோ மதிப்பிலான பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டன.

    திருவிதாங்கூர் ராஜ குடும்பம்

    திருவிதாங்கூர் ராஜ குடும்பம்

    வைரங்கள், மாணிக்கக் கற்கள் பதித்த தேங்காய் ஓடுகளால் செய்யப்பட்ட ஆபரணங்கள், வைரங்கள். மரகத கற்கள், மாணிக்கம் போன்ற விலை மதிப்பில்லாத நகைகளும், தங்கத்தினாலான அழகு கலை பொருட்களும் சாக்கு பைகளில் கண்டுபிடிக்கப்பட்டது. திருவிதாங்கூர் ராஜ குடும்பம் குறித்து திருநாள் மார்தாண்ட வர்மா கூறுகையில் நாட்டில் பழமையான அரசக் குடும்பங்களில் நாங்களும் ஒரு குடும்பம்.

    பத்மநாபனுக்கே

    பத்மநாபனுக்கே

    எங்கள் வாழ்வையே பத்மநாபசுவாமிக்கு அர்ப்பணித்துவிட்டோம். நாங்கள் வெறும் காலுடனே கோயிலுக்கு நுழைகிறோம். கோயிலில் இருந்து ஒரு தூசு கூட நாங்கள் வீட்டிற்கு கொண்டு செல்லக் கூடாது என்பதற்காக கோயிலுக்கு சென்றவுடன் கால்களை நன்றாக தூசு தட்டுகிறோம். தானியங்கள் உள்பட கோயிலில் உள்ள அனைத்து பத்மநாபனுக்கே சொந்தம் என்றார்.

    சேவகர்கள்

    சேவகர்கள்

    1870ஆம் ஆண்டு முதல் திருவிதாங்கூர் அரச பரம்பரையின் குடும்ப உறுப்பினர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர். அவர்களில் முதலில் அய்யன் அடிகள் திருவாதீர் ஆவார். 1950ஆம் ஆண்டு அரசடு பரம்பரையின் கிரீடத்தை சுவாமிக்கு அர்ப்பணித்தனர். இதன் மூலம் சுவாமியே மகாராஜா, ராஜ வம்சத்தினர் அனைவரும் அவரது சேவகர்கள் என்பதை உணர்த்துவதற்காக அவர்கள் இது போல் செய்தனர். இத்தகைய சிறப்புமிக்க கோயிலின் வரலாற்றை கேட்கும் போது உடல் சிலிர்க்கிறது.

    English summary
    Over 130 years 2 chambers in Padmanabha swamy temple not opened. one vault was opened and it has Rs 1 lakh crore worth jewels.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X