திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உங்க வேலையை நீங்க பாருங்க.. எங்க வேலையை நாங்க பார்த்துக்கிறோம்.. கேரளாவில் கொந்தளித்த ப.சிதம்பரம்

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்க்கும் அரசியல் தலைவர்களை விமர்சித்த, ராணுவத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் மீது முன்னாள் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக, கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில், ஆளுநர் மாளியை நோக்கி, இன்று, நடந்த காங்கிரஸ் கட்சியின் மெகா பேரணியில், ப.சிதம்பரம் பங்கேற்று உரையாற்றினார்.

P Chidambaram slams army chief over Citizenship Act remark P Chidambaram slams army chief over Citizenship Act remark

ஒரு போரில் எவ்வாறு செயல்படுவது என்று உங்களுக்குச் சொல்வது அரசியல்வாதிகள் வேலையல்ல. அதேபோல, நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று அரசியல்வாதிகளிடம் சொல்வது ராணுவத்தின் வேலையல்ல.

உங்கள் கருத்துக்களுக்கு ஏற்ப நீங்கள் போரை நடத்துகிறீர்கள், நாட்டின் அரசியலை நாங்கள் எங்கள் கொள்கைகள் அடிப்படையில் நடத்திக் கொள்வோம்.
ராணுவ ஜெனரல் அரசியல் பேசுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார். இது ராணுவ தளபதி வேலையா? இது ஒரு அவமானம்.

ராணுவ தளபதி பிபின் ராவத்திடம் நான் கோரிக்கைவிடுக்கிறேன். நீங்கள் ராணுவத்தின் தலைவராக ​உங்கள் வேலையை பாருங்கள். அரசியல்வாதிகள் செய்வதை அரசியல்வாதிகள் செய்யட்டும்.

மிடாஸ் மாஜி நிர்வாக இயக்குநர் மோகன் மரணம்.. சசிகலா தரப்புக்கு மிகவும் நெருக்கமானவர்மிடாஸ் மாஜி நிர்வாக இயக்குநர் மோகன் மரணம்.. சசிகலா தரப்புக்கு மிகவும் நெருக்கமானவர்

இந்திய அரசியலமைப்பிற்கு ஏற்படும் கடுமையான ஆபத்தை புரிந்துகொண்டதால்தான், மாணவர்களும் இளைஞர்களும், குடியுரிமை சட்டத்தை எதிர்க்க முடிவு செய்தனர். குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் குடிமக்களின் தேசிய பதிவு ஆகியவை இணைந்த இரட்டையர்கள், அவை முஸ்லிம்களுக்கு நேரடி அச்சுறுத்தலாக இருக்கின்றன. இந்த சட்டம் அரசியலமைப்பிற்கு விரோதமானது, அது உச்சநீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்படும், என்று நான் நம்புகிறேன். இவ்வாறு ப.சிதம்பரம் பேசினார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் குறித்து பிபின் ராவத் கடந்த வியாழக்கிழமை சர்ச்சைக்குரிய வகையில் பேட்டியளித்தார்.
சில "தலைவர்கள்" போராட்டக்காரர்களை வன்முறையில் ஈடுபடுத்துகிறார்கள் என்றும், வன்முறைக்கு அழைத்து செல்பவர்கள் நல்ல தலைவர்களாக இருக்க முடியாது என்றும், அவர் கூறியிருந்தார்.

ராணுவ தளபதி பேச்சுக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.

English summary
Former Home Minister P Chidambaram today came down heavily on Army chief General Bipin Rawat over his criticism of political leaders.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X