திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இதான் ஓவர் நைட்ல ஒபாமா ஆகுறதா? கேரளாவில் ஒரே லாட்டரியில் கோடீஸ்வரர் ஆன கூலி தொழிலாளி

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் கோட்டயம் அருகே கேரள அரசின் லாட்டரி டிக்கெட் டில் 12 கோடி ரூபாய் பரிசுத்தொகையை வென்ற பெயிண்ட் அடிக்கும் தொழிலாளிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

தமிழகத்தில் லாட்டரி சீட்டுகளுக்கு அதிமுக ஆட்சிக் காலத்தின் போது தடைவிதிக்கப்பட்டது சிலர் தங்கள் ஊழியத்தை பெரும்பாலும் லாட்டரி சீட்டுக்கு செலவிட்டு வருவதாக எழுந்த புகாரை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.

உங்களால் எங்களுக்கு வேலை கிடக்கலை.. ஆத்திரத்தில் வடமாநில இளைஞரை கத்தியால் வெட்டிய 4 பேர் கைது உங்களால் எங்களுக்கு வேலை கிடக்கலை.. ஆத்திரத்தில் வடமாநில இளைஞரை கத்தியால் வெட்டிய 4 பேர் கைது

ஆனாலும் தமிழகத்தில் தற்போது மறைமுகமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. லாட்டரி மூணு நம்பர் லாட்டரி உள்ளிட்ட பெயர்களில் விற்கப்படும் இந்த லாட்டரி டிக்கெட் சட்டவிரோதமாக விற்கப்படுவதும், அவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்து லாட்டரி சீட்டுகளை விற்றவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் நடந்து வருகிறது.

கேரள லாட்டரி சீட்டுகள்

கேரள லாட்டரி சீட்டுகள்

ஆனால் அண்டை மாநிலமான கேரளாவில் லாட்டரி சீட்டு விற்பனைக்கு அனுமதி உள்ளது. தனியார் நிறுவனங்கள் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபடுவது போலவே கேரள அரசு சார்பிலும் லாட்டரி சீட்டுகள் அச்சடிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இந்த நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டை ஒட்டி கேரள அரசு 12 கோடி ரூபாய் பரிசு தொகை கொண்ட பம்பர் லாட்டரி சீட்டு விற்பனையை தொடங்கியது.

ரூ.12 கோடி பரிசு தொகை

ரூ.12 கோடி பரிசு தொகை

கிறிஸ்துமஸ் பம்பர் லாட்டரி டிக்கெட் விலை 300 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில் கேரளா லாட்டரி துறை 22 லட்சம் லாட்டரி சீட்டுகளை அடைத்து விற்பனை செய்தது. அவை அனைத்தும் விற்றுத் தீர்ந்த நிலையில் மறுபடியும் இரண்டு முறை லாட்டரி சீட்டுகள் அச்சடிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. இந்த கேரளா பம்பர் லாட்டரி டிக்கெட்டுகளை முடிவு திருவனந்தபுரத்தில் அரசுத்துறை அதிகாரிகள் முன்னிலையில் வெளியிடப்பட்டது.

பெயிண்ட் அடிக்கும் தொழிலாளி

பெயிண்ட் அடிக்கும் தொழிலாளி


அந்த முடிவுகளின் அடிப்படையில் XG 218582 என்ற எண் வரிசை லாட்டரி சீட்டு முதல் முதல் பரிசு தொகை 12 கோடியை தட்டிச் சென்றதாக அறிவிக்கப்பட்டது. கேரள மாநிலம் கோட்டயம் அருகே வசிக்கும் பெயிண்ட் தொழில் செய்யும் சதானந்தன் என்பவர் இந்த லாட்டரி சீட்டை வாங்கியதன் மூலம் ஒரே நாள் இரவில் கோடீஸ்வரன் ஆகியுள்ளார். முதல் பரிசாக 12 கோடி அவருக்கு கிடைத்துள்ளது.

வாழ்த்துகள் குவிகிறது

வாழ்த்துகள் குவிகிறது

வரி மற்றும் கமிஷன் உள்ளிட்டவை போக சுமார் எட்டரை கோடி ரூபாய் வரை அவருக்கு கிடைக்கும் இது தவிர ஆறு லாட்டரி சீட்டு களுக்கு இரண்டாவது பரிசாக மூன்று கோடி ரூபாயும் மூன்றாவது பரிசாக ஆர் டிக்கெட்டுகளுக்கு 60 லட்சம் ரூபாயும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் பரிசை வென்றுள்ள சதானந்தன் இந்த பரிசுப் பணத்தை கொண்டு தனது குழந்தைகளுக்கு நல்ல வாழ்வை அமைத்து தருவதாக கூறியுள்ளார். ஒரே நாள் இரவில் ஒபாமா அதுபோல் லாரி டிக்கெட் மூலம் கோடீஸ்வரன் ஆன அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

English summary
Congratulations to the paint worker who won a prize of Rs 12 crore on a Kerala government lottery ticket near Kottayam, Kerala.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X